INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

RIYAS QURANA

TWO POEMS BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. MY STALLIONS



You
There you stroll stealthily
You close your eyes
With a magic spell a bridge emerges
Its height turns nullified
Approaching the edge
the abyss of quiet heightens
The horror of the void
eyes you intensely
You become someone unknown
While sinking slowly
into the deep silence
terrified
You feel like opening your eyes
At that instant
a person surfaces in secrecy
you trust him as your companion
only for a moment
Behind the window-bars
the wind pushes thee
Startled you retreat
and at once spread your tall safety wings
That the one who came in secrecy
has gone far away
_ so you tend to think
The room of freedom
frightens you on its own.
The stallions hiding in the wall
come bouncing towards thee
In the cabin having no way for release
You keep running and running
escaping from the stallions.
That the stallions are stories of mine
You never ascertain.

என்னுடைய குதிரைகள்
................................................
நீங்கள் ஒரு இடத்தில்
சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்கள்
அங்கு,இரகசியமாக உலவுகிறீர்கள்
கண்களை மூடுகிறீர்கள்
வசியத்தால் ஒரு பாலம் தோன்றுகிறது
அதன் உயரம் வெறுமையாகிறது
விளிம்பை நெருங்க,
அமைதியின் ஆழம் அதிகரித்து வருகிறது
அந்த வெறுமையின் பயங்கரம்
உங்களை உற்றுப் பார்க்கிறது
யாரோ ஒருவராக மாறிவிடுகிறீர்கள்
ஆழமான அமைதிக்குள்
மெல்ல மூழ்கும்போது,
அச்சத்தில் ஒரு கணம்
கண்களைத் திறக்க நினைக்கிறீர்கள்
அப்போது, இரகசியமாக ஒருவர்
தென்படுகிறார்.
துணைக்கு அவரை நம்புகிறீர்கள்
ஒரு கணம் மட்டுமே
ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்
காற்று உங்களைத் தள்ளுகிறது
திடுக்கிட்டு பின் வாங்குகிறீர்கள்
உயர்ந்த பாதுகாப்பு இறக்கைகளை
உடனே விரிக்கிறீர்கள்
இரகசியமாக நுழைந்தவர்
வெகுதொலைவில் சென்றுவிட்டதாக
நினைக்க வேண்டி வருகிறது
சுயமாக உங்களை அச்சுறுத்துகிறது
அந்த சுதந்திரமான அறை.
சுவரில் மறைந்திருந்த குதிரைகள்
உங்களை நோக்கிப் பாய்ந்து வருகின்றன
வெளியேறப் பாதையற்ற அறையில்
ஓடியோடி குதிரைகளிடமிருந்து
தப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
குதிரைகள் எனது கதைகளென்று
நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிப்பதில்லை.


2.
I find a spot
that had turned crooked on its own
Branches conceal that coarse spot
I dreamt of myself
as a tree standing beneath the sky
and rustling
I am not alone
I am a tree made of words
So it is not solo.
Riyas Qurana
தானாகவே
கோணலான ஒரு இடத்தை
கண்டுபிடிக்கிறேன்
அந்தக் கரடுமுரடான இ்டத்தை
கிளைகள் மறைக்கின்றன
வானத்தின் கீழே நின்று
சலசலக்கும் மரமாக
என்னைக் கனவு கண்டேன்
நான் தனியாக இல்லை
சொற்களாலான மரம் நான்
எனவே, அது ஒற்றையில்லை



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024