INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

KANAGA BALAN

 A POEM BY 

KANAGA BALAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE FOUNT OF FAMISH

To have at least one square meal a day
Her entire day is sacrificed
Thus her days remain incomplete
And anguished utmost.
The trader who throws away
the bread-slices of the previous day
has not except the intention of removing it
any concern for the beggar woman.
Instead of closing the eyes
paled beneath the sky-roof
playing hide and seek with it
having the very life grabbed
in its mouth
The night of deadly hunger is spent.
In her long journey with
hands extended in begging
never brought down
as baby kangaroo
inside the cradle of her bosom
her son
This fountain that never subsides
needs in succession
something to eat and digest
Is it correct to give as answer
to the mathematical equation
of dawn
sunlight alone?

பசி ஊற்று
முவ்வேளைக்கு ஒருவேளையேனும் சாந்தப்படுத்த
முழுநாளையும் காவு வாங்கி
முழுமை கொள்ளாது தவிக்கிறது
அவளின் நாட்கள்
நேற்றிரவு மீந்த ரொட்டித்துண்டுகளை
வீதியெறியும் வியாபாரிக்கு
அப்புறப்படுத்தல் ஒன்றேயன்றி
அக்கறையில்லை கையேந்துபவளின் உணவுத்தேவை
வானக்கூரையின் கீழ்
வெளிறிய விழிகளை
மூடுதலின்றி வேடிக்கை காட்டி
உயிர் கவ்விக் கழிகிறது
அகோரப் பசியிரவு
ஏந்திய கைகளை
கீழிறக்குதலின்றி தொடரும்
அவளின் நீள் பயணத்தில்
மார்புத் தொட்டிலுக்குள்
கங்காரு குட்டியாய் மகன்
அடங்குதலில்லா அந்த ஊற்றுக்கு
அடுத்தடுத்து தேவையாகிறது
செரித்துக்கொள்ள சிற்றுணவு

விடியலின் கணக்குக்கு விடையாகச்
சூரிய ஒளியை மட்டும் சொன்னால் எப்படி?

கனகா பாலன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE