TWO POEMS BY
S.PUNITHA JOTHI
was conversing ecstatically
with all the fish
rolling her eyes and showing signs.
I felt as if the whole lot of fishes
were coming towards her
Her eyes were brimming with fish.
She had turned into Mother Sea.
As the younger sister of Subbaiyan
for father
who had wrongly said
she was teaching the names of the fishes
correctly.
In the eyes of all those
who looked amazed
widespread as sea’s expanse
the child’s Love
Punitha Jothi
தான்வளர்க்கும்
தொட்டி மீனுக்கு
உணவு வாங்கவந்த
குழந்தை...
அனைத்து மீன்களோடும்
கண்ணை உருட்டி,உருட்டி
பரவசத்தோடு சைகையில் பேசிக்கொண்டிருந்தாள்..
எல்லா மீன்களும்
அவளை நோக்கி வருவதாய்
எனக்குள் பிரக்ஞை
அவள் கண்கள்
முழுவதும் மீன்கள்
கடல்அன்னையாய் மாறியிருந்தாள்
சுப்பையனின் தங்கையாய்
தவறாக சொன்ன
அப்பாவுக்கு
சரியாக மீன்களின்பெயர்களை
கற்பித்துக்கொண்டிருந்தாள்
எப்படியடா வியப்பாக
பார்க்கும் அனைவரின்
விழிகளுக்குள்ளும்
கடலளவு விரிந்திருந்தது
குழந்தையின் அன்பு
செ.புனிதஜோதி
(* In memory of Poet Francis Kirupa)
He had wandered all over in search of Love….
He who wandered in the dark
for radiance
began relishing the dark itself.
The dark had embraced him with outstretched hands…
Light alone needs cosmetics.
Realizing it he began loving the dark
And the latter also
reciprocated….
One day he just went away
with the dark
The dark had engraved his name
before departing.
By and by
In dense jungle he is sparkling
As firefly..
காலத்தின்பரிசு
குதிரைபந்தயம்
நிகழும் வாழ்வியலில்
அன்பைத் தேடி
அலைந்திருக்கிறான்..
இருளுக்குள்
வெளிச்சத்தை
தேடித்தேடி
அலைந்தவன்..
இருளையே
ரசிக்க ஆரம்பித்துவிட்டான்
இருள் அவனை
அப்படி ஏற்றுக்கொண்டது..
வெளிச்சத்திற்குத்தான்
ஒப்பனை தேவைப்படுகிறது
புரிந்துக்கொண்டவன்
இருளைக் காதலிக்க
இருளும் இவனை
காதலித்தது...
ஒருநாள்
இருளோடே
சென்றுவிட்டான்...
ஆனால்
இருள் அவன்
பெயரை பொரித்து
விட்டுச்சென்றிருந்தது
அடர்அடவிக்குள்
மின்மினியாய்
ஒளிர்ந்துக்
கொண்டிருக்கிறான்
செ.புனிதஜோதி
No comments:
Post a Comment