A POEM BY
T.K.KALAPRIYA
to reap the yields
She put it into a rat-hole of the ridge
and closed it
On a morn when water flowed anew
It had sprouted into a turmeric plant
Patiently waiting she dug the soil
Fingers six not five
She could haul
Wearing them
She remained happy
Another woman is on the way
to reap the harvest
as always.
Tk Kalapria
•
புதிதாகக்
கதிரறுக்கப் போனவள்
இடது சுண்டு விரலை
அரிந்து கொண்டு விட்டாள்
அப்படியே வரப்பின்
எலி வளைக்குள்
போட்டு மூடி விட்டாள்
புது நீர் பாய்ந்த
ஒரு காலையில்
மஞ்சள்ச் செடியாய் அது
துளிர் விட்டிருந்தது
பொறுத்திருந்து
தோண்டினாள்
ஐந்துக்கு ஆறாக
விரல்கள் கிடைத்தன
மாட்டிக் கொண்டு
சந்தோஷமாய் இருந்தாள்
புதிதாக ஒருத்தி
கதிரறுக்கப் போகிறாள்
No comments:
Post a Comment