TWO POEMS BY
RAVI UDHAYAN
A letter falls and rolls
Insisting that the message it brings
should be read at once
In a deserted street
there lies glittering
asking to open the mysterious cabin
- A counterfeit key
In a deserted room
a tea-cup keeps pleading to
change it into a wine-mug.
In the massive quiet of midnight
the soft scent of ‘Thaaazhai’
kindle one’s lust for copulation.
In a vacant space
There is space
For each one of us.
ஒர் இடம் காலியாயிருக்கிறது
யாருமற்ற வீட்டில்
விழுந்து புரள்கிறது
செய்தியை வாசிக்கச் சொல்லி
ஒரு கடிதம்
யாருமற்ற தெருவில்
கிடந்து மின்னுகிறது
மர்ம அறையைத் திறக்கச்சொல்லி
ஒரு கள்ளச்சாவி
யாருமற்ற அறையில்
மன்றாடுகிறது
மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி
ஒரு தேநீர்க்குவளை .
யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்
புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது
மெல்லிய தாழை மணம்
யாருமற்ற வெளியில்
எல்லோருக்கும்
ஒர் இடம் காலியாயிருக்கிறது.
2. THE VOICE OF THE SONG
reaches me.
Being right here
Immersed in the music
I sketch
The voice of the song
Its lips
and the face marvelous
Of those
(ii) DANCE MUSIC
The little one
Places its tiny feet
On the earth
For each step taken
Out of its footwear
Emanates the whistling sound
Seeing the way the child staggers
Mother’s love stands there
In acute anguish
Laughing the child walks on
The Music
(iii) MOTHER’S MUSIC
At night I hear
Those lines muttered in a low voice
It was not a song
nor music
It was the effort to
break her long silence
Smartness to shake off
burdens
A struggle to breathe
albeit temporarily.
பாடலின் குரல்
(1) முகமறியாத
குரலின் பாடல்ஓசை
வந்தடைகிறது என்னை
இங்கிருந்தபடியே
இசையில் இருந்த வண்ணம்
தீட்டுகிறேன்
பாடலின் குரலை
குரலின் இதழை
இதழின்
அழகிய திருமுகத்தை
(ii) .இசை நடனம்
சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல் எடுத்துவைக்கிறது.
வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன் பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது.
பிஞ்சின் நடை பதற்றம் கண்டுதாயன்புத்தவிக்கிறது
சின்னக்குழந்தைசிரித்தபடி
நடக்கின்றதுசங்கீதத்தின் மீது.
(iii) .அம்மாவின் இசை
இரவில் செவிமடுக்கிறேன்.
தாழந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை
அதுஒரு பாடலல்ல,
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல.
அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிறமுயற்சி
சுமைகளைஅகற்றும் ஒருசாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சுவிடுவதற்கான
ஒரு போராட்டம்.
No comments:
Post a Comment