INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

A.AMUL RAJ

 A POEM BY

A.AMUL RAJ

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE VAST TERRAIN OF TIMESCAPE
As the earthworm snake buried deep inside the wet soil
Your words lay
Showing dual faces
As the vulture with a snake held in its beak
Flying aloft
In the vast expanse of wilderness
of a dusk in the time of famine
you strangle
the throat.
As snake's tongue
that spits venom from
inside the hole
your eyes grabbing me
extend
In the huge fire of your hands
Time’s grand space
Burnt and turned into ashes.
In each and every moment
when holding one end of my aspiration
and straining to come apart
From your memories
you swing the knife and cut off the
prime nerve of my legs.
As the wing of fish
that swims with the string of fishhook severed
bearing the pain of cuts and bruises
I go past thee
along the vast expanse of Timescape.
.
காலப்பெருவெளி
ஈரமண்ணில்
புதைந்துகிடக்கும்
மண்ணுளிப் பாம்பென
இரட்டை முகங்காட்டிக் கிடக்கின்றன
உன் சொற்கள்.
பஞ்ச கால
அந்திப் பொழுதொன்றின்
வனாந்தரப் பெருவெளியில்
பாம்பு ஒன்றைக்
கவ்விக்கொண்டு பறக்கும்
பருந்தென நெறிக்கிறாய்
குரல்வளையை
புற்றுக்குள்ளிருந்து
நஞ்சை உமிழும்
நாகத்தின் நாவென நீள்கிறது
என்னைப் பற்றிக்கொண்ட
உன் கண்கள்.
உன்
கைகளின் பெருநெருப்பில்
பொசுங்கியது
காலத்தின் பெருவெளி
இலட்சியத்தின்
முனையைப் பற்றிக்கொண்டு
உன் நினைவுகளிலிருந்தும்
அறுபடத் துடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
கத்தியை வீசிக்
கால்களின் பெருநரம்பை அறுத்தெரிகிறாய்.

தூண்டிலின் நரம்பை
அறுத்துக்கொண்டு நீந்தும்
மீனின் இறகென
அறுபட்ட வலியுடன் கடக்கிறேன்
காலத்தின் பெருவெளியில்
உன்னை.

அ. அமுல்ராஜ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024