INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

RAMESH KANNAN

 A POEM BY

RAMESH KANNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

My father had a nickname

In friends' meeting place they would address him as ‘Ji’
I have also tried his sparrow-nest combing
The way he would stand in front of the mirror and
Comb his hair
Would be almost as ecstatic as that of a bathing scene
An adolescent would gain
His signature on the cover of Scissors cigarette is so precious as a cheque.
Had never taken class on
which is right and which is wrong
From the cigar he had shown
a pristine white-cotton universe.
In Shanmugam Tea Shop when I said
that I would never lay hands on a cigarette
The entire bench had a hearty laugh.
Well, with the passage of Time
everything turned to nil
When once in a blue moon I come across those
who address father as ‘JI’
I would grow more joyous
than my father would have
It was a time having no need
for jotting such details on the cigarette cover
as residential address, total amount to be given
_all written in father’s splendid handwriting.
Then father became a guide
sitting in Shanmugam Tea Shop and
showing the way to all those going to and fro.
There still remains a query unasked
intended for my father:
Have you ever felt the sorrow of forsaking a name, JI?
(*In memory of Father )
Ramesh Kannan
என் அப்பாவிற்கு
ஒரு புனைப்பெயர் உண்டு
பிரத்யேக ஜாகையில் அவரை
ஜீ என்று அழைப்பார்கள்
அவர் குருவிக்கூடு சீவலை நானும் முயன்று பார்த்திருக்கிறேன்
அவர் கண்ணாடி முன்னின்று சீவுகிற காட்சி கிட்டத்தட்ட
ஒரு பதின்பருவத்துக் குளியலறைக் காட்சிக்கு ஈடான பரவசம்
கத்திரி சிகரெட்டின் அட்டையில் இடம்பெறும் அவரின் கையெழுத்து ஒரு காசோலைக்கிணையான பெருமதிப்பு பெற்றது
எது சரி எது தவறு என்றெல்லாம் வகுப்பு எடுத்ததில்லை
சிகரெட்டிலிருந்து ஒரு வெண்பஞ்சு பிரபஞ்சத்தைக் காட்டியிருக்கிறார்
சண்முகம் டீக்கடையில் சிகரெட்டைத் தொட மாட்டேன் என்ற நான் சொன்ன போது
டீக்கடை பெஞ்ச்சே கெக்கலித்து சிரித்தது
எல்லாமே தேய்ந்த காலமொன்றும் வந்தது
அப்பாவை ஜீ என்று அழைப்பவர்களை எப்போதாவது சந்திக்கையில் அப்பாவைக் காட்டிலும் எனக்கு சிலிர்த்து விடும்
அப்பாவின் அழகு கையெழுத்தில் வீட்டின் முகவரி ,தரவேண்டிய தொகை எழுதித்தரும் சிகரெட் அட்டை குறிப்புகளுக்கான தேவைகள் இல்லாத காலமது
அப்போதெல்லாம் சண்முகம் டீக்கடையில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோருக்கெல்லாம் வழி சொல்லும் திசைகாட்டியாய் மாறினார்
அப்பா
எனக்கு இப்போதும் அப்பாவிடம் நான் கேட்காமல் விட்டுப் போன கேள்வி ஒன்றிருக்கிறது
ஒரு பெயரைக் கை விட்ட துக்கத்தை நீங்கள் எப்போதாவது உணர்ந்தீர்களா ஜீ

//அப்பாவின் நினைவு தினம்//

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE