INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

MUTHUKUMARAN SANKARAN TUTICORIN

 TWO POEMS BY 

MUTHUKUMARAN SANKARAN TUTICORIN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1. THOUGH AN INCARNATION, I REMAIN …..


The answer to being born a human
is Death, the final destination
The curse that was unkilled in Sarayu
would be realized on the banks of Hiranya
With the sacred secret of being born
an incarnation, bearing the sin of
hiding and killing stealthily
Kaala, the God of Death
standing by my side.
Coming with the sole sin
As if lessening the burden of earth
Separating
Children of the same mother
Branches of the same tree
Friends so dear
Kith and kin – all and more
Hailing war and warfare
the mistakes I had wantonly committed
I would set right with Time.
As the moisture of the palm
this river and your
memory
seeping through the fingers
I remain forever waiting
Oh, my dearest
Oh, Mayee – looking intensely
at my within and without
Here I come to thee
Wonder wherefrom
the hunter’s arrow would come
I am forever waiting, Radhaa….
Oh, how so much of grass they plucked
and aligned them
burnt and made holes
and entrusted in my hands
as flute divine.
Abandoning the flute
and the music
I remain waiting here
for witnessing the grassy form of Kaalaa
who writes the end of my clan…..
So many mothers
Governesses
cows
Theft
How many Gopikas
How many pranks of Love
How many wives
How many vows
How much of bashing butchering
How many unions
How many separations
So much of kindness
So much of treason
So many a battle
So many a death
So much of tears, wails
So many victories
How much of dance
I had performed
I have grown tired, Radhaa..
Untouched by the lips of this Neelan
Without inhaling the breath of this Neelan
The divine conch Paanchasanya of this Neelan
sounding weak
calling the dark –
Ho, can you hear it Radhaa…..?
The sole word you call
Neelaa…. Neelaa
soaked in love
would make me wait
beyond time, Ho Radhaa
How many a time you remained in this garden
Waiting for me, Ho Radhaa
For you who in order to love me and hail me
Arrived on this earth
Ahead of myself
I can wait for ages
For ever and ever
I am Neelan
I would wait till I metamorphose
into cloud
and rain
and luxuriance
and joy unleashed
Ho, my Radhaa……

அவதாரமே ஆயினும்….
—----------------------------------
மானுட பிறப்பின் விடை
மரணம் எனும் கடைவழி
சரயுவில் மாய்க்காத சாபம்
ஹிரண்ய தீரத்தில் தீரும்
மறைந்து நின்று கொன்ற
தவறை சுமந்தே அவதரித்த
தேவரகசியத்துடன் காலன்
என் தோளோடே நிற்கிறான்
ஒற்றைப்பாவத்துடன் வந்து
பூபாரம் குறைப்பதாய்
ஒரு தாய்ப் பிள்ளைகள்
ஒரு மரக்கிளைகள்
உற்ற தோழர்கள்
சுற்றமெல்லாம் பிரித்து
போர்முறை தொழுது நான்
தெரிந்தே செய்த தவறுகளை
நேர் செய்வேன் காலத்திடம்
உள்ளங்கையில் ஈரமாய்
இந்நதியும் உன் நினைவும்
விரலிடை வடிந்து கொண்டே
காத்திருக்கிறேன் சகி எனை
உள்ளும் புறமும் உற்று நோக்கும்
மயி உன்னிடம் இதோ வருகிறேன்
எத்திசை வருமோ வேடனின்
அந்த ஒற்றை அம்பு?
காத்திருக்கிறேன் ராதா
எத்தனை புல் பறித்து
நேர் செய்து
சுட்டுத்துளையிட்டு
புல்லாங்குழலாய்
என் கரம் தந்தார்கள்.
வேய்ங்குழலையும்
கீதத்தையும்
விட்டுவிட்டு வந்து
காத்திருக்கிறேன்
என் சுற்றத்துக்கு
முடிவெழுதும் காலனின்
புல் உரு காண..
எத்தனை தாய்
எத்தனை தாதியர்
எத்தனை ஆநிரை
எத்தனை திருட்டு
எத்தனை கோபியர்
எத்தனை லீலை
எத்தனை மனைவியர்
எத்தனை சத்தியம்
எத்தனை வதம்
எத்தனை உறவு
எத்தனை பிரிவு
எத்தனை கருணை
எத்தனை துரோகம்
எத்தனை போர்
எத்தனை மரணம்
எத்தனை அழுகை
எத்தனை வெற்றி
எத்தனை நர்த்தனம் ஆடிக்
களைத்து விட்டேன் ராதா
இந்த நீலனின் உதடு படாமல்
இந்த நீலனின் மூச்சு நுழையாமல்
இந்த நீலனின் பாஞ்சஜன்யம்
தீனமாய் ஒலித்து
இருளை விளிப்பது
கேட்கிறதா ராதா?
நீலா நீலா என்று
நீ அழைக்கும் அந்த
ஒற்றைச் சொல்லின் ஈரம்
என்னை எத்தனை காலமும்
காத்திருக்க வைக்கும் ராதா.
நீ எத்தனை முறை
இந்த நந்தவனத்தில்
எனக்காகக்
காத்திருந்தாய் ராதா
என்னை ஆராதிக்க
எனக்கு முன் புவி வந்து
காத்திருந்த உனக்காய்
எத்தனை காலமாயினும்
காத்திருக்கலாம் நான்.
நான் நீலன்
நான் மேகமாய்
மழையும் வளமும்
மகிழ்வுமாய் மாறக்
காத்திருப்பேன் ராதா

-முத்துக்குமார் சங்கரன்


(2)



Neither violet nor green
Have you seen a balloon in the hue of the blend of those two?
That balloon was playing with two children simultaneously
with no trace of tiredness.
All over the auditorium
they flew round and round jumping and leaping
Those gathered went on talking to themselves
without seeing the balloon
Those on the dais
came in row
trumpeting their own glory
The aged gentleman who served the tea
was eyeing the balloon-kids
with just a sense of alarm.
With a worried look
glancing at her kids
and feeling disconcerted
the woman at the center stage
was showing signs to that gentleman.
might be requesting him to give some eatables
to her children
Seems like some Felicitation Meet
was going on
in honour of that woman.

ஊதா இல்லை பச்சை இல்லை
இரண்டும் கலந்த மாதிரியான
கலர் பலூன் பார்த்திருக்கீங்களா?
அந்த பலூன் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுடன்
விளையாடிக் கொண்டிருந்தது
கொஞ்சம் கூட களைப்பே இல்லாமல்
அந்த அரங்கம் முழுவதும்
சுற்றிச் சுற்றித் தாவிப்பறந்தனர்
பலூனும் குழந்தைகளும்
அரங்கம் நிறைந்திருந்தவர்கள்
அவர்களுக்குள் பேசிக்கொண்டே
இருந்தார்கள் பலூன் பார்க்காமல்
மேடையில் இருந்தவர்கள்
வரிசையில் வந்து பேசினார்கள்
அவரவர் பெருமையை
தேநீர் விளம்பிய பெரியவருக்கோ
பலூன் குழந்தைகள் மீது கவனம்
எச்சரிக்கையாக மட்டுமிருந்தது
கவலையுடன் குழந்தைகளைப்
பார்த்துப் பதறிக் கொண்டே
மேடை நடுவில் வீற்றிருந்த பெண்
அந்தப் பெரியவரிடம் சைகை
காண்பித்துக் கொண்டிருக்கிறார்
தன் குழந்தைகளுக்கு ஏதேனும்
உணவு தரச் சொல்லி இருக்கலாம்.
அந்தப் பெண்ணுக்குத் தான்
ஏதோ பாராட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது போல.

--முத்துக்குமார் சங்கரன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024