INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

RAGAVAPRIYAN THEJESWI

 TWO POEMS BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. LIFE TIED IN A STABLE SANS HORSE
I have gone around the stable of Life
Sitting there I have eaten 'Kollu' and 'Pullu'
Alongwith the horse
Staying awake
while the horses were sleeping
sacrificing my sleep
and enabling the horse to sleep
I have spent my days.
In the of the horse
I can sense its back pain
While stroking its skin
I can count the hair that drop off
While making the horse-skin shine
I have also turned radiant.
I have washed the shed
Without allowing the hoofs to touch the horse-dung…..
The Rain and sun of Life
Have entered the stable
Without his knowledge.
Yet learning Life and horse
prove impossible.
Unable to learn
the majestic grandeur of the horse
Its strength
Its loyalty
Its modesty
his own Life that
is forever fleecing all of it
and more
the horse can be sold
but what to do with this Life
and the stable all too unstable…

குதிரையற்ற கொட்டிலில் கட்டிக் கிடக்கும் வாழ்வு..
----------------------------------------------------------------------
வாழ்வின் குதிரைக் கொட்டிலை
சுற்றி வந்திருக்கிறேன்...
அதிலமர்ந்து கொள்ளும் புல்லும்
குதிரையுடன் தின்றிருக்கிறேன்...
குதிரைகள் தூங்கும் போது
விழித்திருந்தும்..
என் தூக்கத்தை தானமிட்டு
குதிரையை தூங்க வைத்தும்
வாழ் நாட்களைக் கழித்திருக்கிறேன்...
குதிரையின் கனைப்புச் சப்தங்களில்
அதன் முதுகுவலியை அறியமுடியும் என்னால்...
குதிரையின் உடல் தடவுகையில்
உதிரும் முடிகளை கணக்கிடவும் முடியும்..
குதிரையின் உடல் மினுமினுக்க
மாலிசிடுகையில் நானும் பளபளத்திருக்கிறேன்...
குதிரைச் சாணங்களின் மேல்
குளம்புகள் படாமல் கொட்டிலை கழுவியிருக்கிறேன்...
வாழ்வின் மழையும் வெயிலும்
கொட்டிலுக்குள் இவனறியாமல்
உட்புகுந்ததில்லை....
இருப்பினும் வாழ்வையும் குதிரையையும்
சரியாகப் படிக்க முடியவில்லை...
குதிரையின் கம்பீரத்தை
அதன் வல்லமையை
அதன் விசுவாசத்தை
அதன் அடக்க குணத்தை
சதா பிடுங்கித் தின்னும்
இவனின் வாழ்வையும் கூட
சரியாகப் படிக்க முடியவில்லை...
குதிரையை விற்று விடலாம்....
வாழ்வையும் லாயக்கற்ற லாயத்தையும்
என்ன செய்ய...?

ராகவபிரியன்

2.BEING BOOMING BOOMERANGING
(*Dedicated to My Own Self – Ragavapriyan Thejeswi)


Stone-pelting is a ‘boomerang’ weapon
Sometimes it would return to the one who throws
On seeing dogs many a time
the stones go missing
When all too precious stones are accessed
dogs are nowhere to be seen
The stones being thrown on the rich cluster of mangoes
would return alone one by one yet
would reap the fruit of reaching high.
Stones targeting mango-bunch are a must.
Aim is but secondary
For chasing away Satan
Voyage across the seas might happen
The stone leaping by the force of the sling
might bring down a few doves
Never a stone is thrown at vultures
In Olympics by throwing a hefty stone at a great distance
a medal can be won.
Those who are heavy in poetry might at another time
while throwing a poem or a stone
might stagger
The game of pebbles being thrown up
and caught
are meant for womenfolk….
Throwing words is no poem
but mere stone-pelting…..mmm….
Ragavapriyan Thejeswi
கல்லெறிதல் என்பது
பூமராங் ஆயுதம்..

எறிபவருக்கே சில நேரம் திரும்பும்..
நாய்களைக் கண்டவுடன் பல நேரங்களில்
கற்கள் தொலைந்து விடுகின்றன..
அதியற்புதக் கல் கிடைக்கையில்
நாய்கள் கண்களில் படுவதில்லை..
மாங்காய்களின் கிளைத்த தண்டில்
எறியும் கற்கள் தனியாகத் திரும்பினாலும்
உயரம் சென்று திரும்பிய பயனடையும்..
எறிந்தே ஆகவேண்டியது குலைகளை
நோக்கிய கல்.. இலக்கென்பது இரண்டாம் நிலை..
கல்லெறிந்து சாத்தன் ஓட்ட
கடல் கடந்தும் செல்லக் கூடலாம்...
கவட்டையின் வீச்சில் பாயும் கல்
சில மணிப்புறாக்களை வீழ்த்தக்கூடும்..
கழுகுகளை நோக்கி கற்கள் ஒரு போதும் வீசப்படுவதில்லை..
ஒலிம்பிக் விளையாட்டில் குண்டுக்கல்
தூரஎறிந்தால் பதக்கம் வெல்லலாம்..
கவிதையில் குண்டாய் இருப்பவர்கள் பிறிதொரு பொழுதில்
கவிதையோ கல்லோ எறிகையில்
நிலைதடுமாறக் கூடலாம்..
கூழாங்கற்களை மேலே தூக்கியெறிந்து பிடித்து விளையாடும்
கல்லாங்காய் ஆட்டங்கள்
பெண்களுக்கானது...
எழுத்துக்களை வீசியெறிவது கவிதையல்ல..
வெறும் கல்லெறிதல் மட்டுமே...
[*எனக்கு நானே எழுதிக்கொண்டது]

ராகவபிரியன்
BEING BOOMING BOOMERANGING
(*Dedicated to My Own Self – Ragavapriyan Thejeswi)

Stone-pelting is a ‘boomerang’ weapon
Sometimes it would return to the one who throws
On seeing dogs many a time
the stones go missing
When all too precious stones are accessed
dogs are nowhere to be seen
The stones being thrown on the rich cluster of mangoes
would return alone one by one yet
would reap the fruit of reaching high.
Stones targeting mango-bunch are a must.
Aim is but secondary
For chasing away Satan
Voyage across the seas might happen
The stone leaping by the force of the sling
might bring down a few doves
Never a stone is thrown at vultures
In Olympics by throwing a hefty stone at a great distance
a medal can be won.
Those who are heavy in poetry might at another time
while throwing a poem or a stone
might stagger
The game of pebbles being thrown up
and caught
are meant for womenfolk….
Throwing words is no poem
but mere stone-pelting…..mmm….
Ragavapriyan Thejeswi
கல்லெறிதல் என்பது
பூமராங் ஆயுதம்..
எறிபவருக்கே சில நேரம் திரும்பும்..
நாய்களைக் கண்டவுடன் பல நேரங்களில்
கற்கள் தொலைந்து விடுகின்றன..
அதியற்புதக் கல் கிடைக்கையில்
நாய்கள் கண்களில் படுவதில்லை..
மாங்காய்களின் கிளைத்த தண்டில்
எறியும் கற்கள் தனியாகத் திரும்பினாலும்
உயரம் சென்று திரும்பிய பயனடையும்..
எறிந்தே ஆகவேண்டியது குலைகளை
நோக்கிய கல்.. இலக்கென்பது இரண்டாம் நிலை..
கல்லெறிந்து சாத்தன் ஓட்ட
கடல் கடந்தும் செல்லக் கூடலாம்...
கவட்டையின் வீச்சில் பாயும் கல்
சில மணிப்புறாக்களை வீழ்த்தக்கூடும்..
கழுகுகளை நோக்கி கற்கள் ஒரு போதும் வீசப்படுவதில்லை..
ஒலிம்பிக் விளையாட்டில் குண்டுக்கல்
தூரஎறிந்தால் பதக்கம் வெல்லலாம்..
கவிதையில் குண்டாய் இருப்பவர்கள் பிறிதொரு பொழுதில்
கவிதையோ கல்லோ எறிகையில்
நிலைதடுமாறக் கூடலாம்..
கூழாங்கற்களை மேலே தூக்கியெறிந்து பிடித்து விளையாடும்
கல்லாங்காய் ஆட்டங்கள்
பெண்களுக்கானது...
எழுத்துக்களை வீசியெறிவது கவிதையல்ல..
வெறும் கல்லெறிதல் மட்டுமே...
[*எனக்கு நானே எழுதிக்கொண்டது]


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024