INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

THENMOZHI DAS

 A POEM BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MINDSCAPE
If you happen to see a bat coming across
just as a wild-knife comes straight to cleave the heart
At that instant
when the body would curve in one direction
You would realize
that the mind has a body
which has the elasticity
to bend and curve
And there are eight hands
that tear off and throw away
any shadow pressing and spreading on it.
Though there is a knife with the deer-horn handle
and the courage at heart to face anything
Yet we are bending for the jigsaw flight of the bat means
We have but aloneness as our companion.
The heart wants
a mate pristine.
If you happen to hear
the sound of the fly flying
in the well of night
you would realize
that the heart has grand yellow door
hat the door is made of flesh
and the flesh is the multitude of memories
If a baby parrot happens to fall at your feet
in ripe darkness
You would realize that the heart has skin
and in that the pains of holes
where wings sprout
You would rear and nurture aloneness
If you happen to see
in the labour pain of the pregnant dog
pushing aside the placenta
the puppy’s hands alone extend before thee
you would realize
that the heart has thousand eyes
that each of those eyes
belong to different beings
If you happen to see
a dead body
being crushed by vehicles
You would realize the heart
to be an empty gourd-shell
If you happen to see the entire body
crushed to the core
eaten by worms and the body
metamorphosing into insect
you would see the blue space inside the heart too
and in the blue revolving circle
you would see all beings as one and only flower
bereft of body
blooming as heart.

Thenmozhi Das

மனத்திணை
காட்டுக்கத்தி நெஞ்சைப் பிளக்க வருவதாய்
வவ்வால் எதிர்ப்பட்டால்
உடல் ஒருதிசையில் வளையும் அக்கணம்
மனதிற்கு வளையும் தன்மைகொண்ட
உடல் இருப்பதையும்
தன்மேல் அப்பும் நிழல் எதையும்
பிய்த்து எறியும்
எட்டுக் கரங்கள் இருப்பதையும்
நீங்கள் உணர்வீர்கள்
மான்கொம்பு பிடியிட்ட சத்தகம் கையிலிருப்பினும் - எதையும்
சந்திக்கத் தீரம் நெஞ்சிலிருப்பினும்
ஒரு வவ்வாலின் திருகுவாள் பறத்தலுக்கு வளைகிறோமெனில்
நம்முடன் இருப்பது தனிமைதான்
மனம் விரும்புவது
மாசில்லா துணையைத் தான்
நள்ளிரவில் ஈ பறக்கும் ஓசையை
செவியுற வாய்த்ததெனில் அவ்விடம்
மனதிற்கு மகாமஞ்சள் கதவு இருப்பதை
உணர்வீர்கள்
அக்கதவு சதையாலானதையும்
அச்சதை நினைவுகளின் திரட்சி என்பதையும்
முதிர்ந்த இருட்டில் காலடியில்
ஒருக்கிளிக்குஞ்சு விழுமெனில்
மனதிற்கு தோல் இருப்பதையும்
அதில் சிறகு முளைக்கும் துவாரத்தின்
வலிகள் இருப்பதையும் உணர்வீர்கள்
தனிமையை வளர்ப்பீர்கள்
சினைப்பட்ட நாயின் பிரசவ வலியில்
நஞ்சுக்கொடி விலக்கி
குட்டியின் கைகள் மட்டும் உங்கள் முன்
நீள்வதைக் காண்பீர்களெனில்
மனதிற்கு ஆயிரம் கண்கள் இருப்பதை
உணர்வீர்கள்
அக்கண்கள் ஒவ்வொன்றும்
வேறு வேறு உயிர்களுடையவை என்பதையும்
இறந்த உடலை
வாகனங்கள் நசுக்கிச் செல்வதை காண்பீர்கள் எனில்
மனதை வெற்றுச் சுரைக்கூடாக உணர்வீர்கள்
நசுங்கிய உடல் மொத்தம் புழுக்களால் உண்ணப்பட்டு உடல் பூச்சியாவதை காண்பீர்கள் எனில்
மனதின் மனதிற்குள்ளும்
நீல வெளியைக் காண்பீர்கள்
வெறுமையின் நீலச்சுழல் வட்டத்தில்
ஏகப்பூவாய் எல்லா உயிர்களும் உடலற்று
மனதாய் மலர்வதைக் காண்பீர்கள்.

தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE