INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

PALAIVANA LANTHER

 A POEM BY 

PALAIVANA LANTHER

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
WHAT WERE YOU TO ME

I have forgotten
Our love our kiss
the umbilical cord that lay there severed
exclusively for us
What’s your name
What were you to me
Don’t loosen your palms
In the manner of an abortion taking place
The compulsion of holding tight
Has come to be
The brain devouring the apple seed
Trees lie in slumber
inside the seeds with cracks and fissures
in the fire that swirls and rages
would stretch out tongues
and sow kisses
deaths destined to be all too deadly
ascending on lust
ascending on intoxication
ascending on sin
would go past that raging fury
Delicious divinely delicious
Millions of cells
of blood yet to attain puberty
of mutilating the organs of those kneeling down
included in which grade of betrayal
poison in the village well
Acid in the prime root
The gullibility of the sinners not knowing
what to execute and how
I have never written
In the pyre burn
documents incomplete
Again there isn’t again
Give to yourself anesthesia
Used before surgery
You won’t feel the pain for the time being
Pluck and pull the umbilical cord
Begin from there
Pressing the salt crystals
Your brother’s upright spine
is tanned.
I lie there weak and vulnerable
The world is brimming with curses boiled, sticky
and seeping
In the universe.
Yet another era of molestation.
நீ எனக்கு என்னவாக இருந்தாய்
***********************************
மறந்துவிட்டேன்
நாம் காதலித்ததை முத்தமிட்டதை
நமக்கென ஒரு தொப்புள்க்கொடி
அறுந்து கிடந்ததை
உன் பெயர் என்ன
நீ எனக்கு என்னவாக இருந்தாய்
கருக்கலைவு நிகழ்வதை போல்
உள்ளங்கைகளை தளர்த்தி கொள்ளாதே
இறுக்கிப் பற்றிக்கொள்ள வேண்டிய
நிர்பந்தம் நிகழ்ந்துவிட்டது
ஆப்பிள் விதைகளை விழுங்கிய மூளை
பிளவுகளுள்ள விதைகளினுள்
உறங்கும் விருட்சங்கள்
கனன்று சுழலும் தீயில்
நாக்குகள் நீட்டி
முத்தங்களை விதைக்கும்
கொடுங்கூற்று மரணங்கள்
காமத்தின் மீதேறி
போதையின் மீதேறி
பாவத்தின் மீதேறி
கடந்து போய்விடுமந்த கடுஞ்சினம்
சுவை பெருஞ்சுவை
ருதுப்பெறாத ரத்தத்தின்
கோடியணுக்கள்
மண்டியிட்டு கிடப்பவர்களின்
உறுப்புகளை சிதைப்பது குறித்து
துரோகத்தின் எந்த
வரிசையில் சேர்க்கப்படுகின்றது
ஊர் குளத்தில் விஷம்
ஆணி வேரில் அமிலம்
வினையரியாத பாவிகளின் மடமை
நான் எழுதவேயில்லை
எனக்கு விரல்களேயில்லை
சிதையில் எரிகின்றன
முற்றுப்பெறாத ஆவணங்கள்
மீண்டுமொரு மீண்டுமில்லை
இனியொரு இனி மட்டுமே
அறுவை சிகிச்சைக்கு முந்தைய
மரத்துப்போகும் மருந்தை
பரிமாறிக்கொள்
வலி இப்போதைக்கு தெரியாது
சூல் கொடியைப் பிடுங்கியிழு

அங்கிருந்து தொடங்கு
உப்புக்கற்கள் தேய்த்து
பதனிடப்படுகின்றன
உன் சகோதரனின்
வளையாத முதுகுத்தண்டு
நான் பலகீனமாகி கிடக்கிறேன்
பிசுபிசுவென கொதித்து வழிந்த
சாபங்களால் நிறைகின்றன லோகம்
அண்ட சராசரத்தில்
மீண்டுமொரு வன்புணர் காலம் .

பாலைவன லாந்தர்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE