TWO POEMS BY
'PUNNAGAI' AMSAPRIYA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Wanders
In the words that chase her
Glows the sprouting shoot of
Her lust
A word would stand close to her
Another would sit close by her side
Though she loves so much those word
that keep multiplying
she does agree with another word also
which taught that any word and all words
would make us trip and tumble.
That at the end of this passage
the prime word of another assemblage of words
which would give you refuge
awaits
Till then not to be carried away by words deranged
- So commands a magical word.
Collecting words from words
She began coining a sentence on her own.
At that point had gone
the word ‘girl’
never to be obtained again.
முற்றுப்பெறாத வாக்கியமொன்றை
சுமந்தபடி அலைகிறாள் முதுசிறுமி
அவளைத் துரத்தும் சொற்களில்
அவளின் வளர்காமத்தளிர் சுடர்கிறது
நெருங்கி நிற்கும் ஒரு சொல்
நெருங்கி அமரும் ஒரு சொல்
வாஞ்சையோடு அணுகுமொரு சொல்
பல்கிப் பெருகும் அச்சொற்களை
மிகவும் நேசித்தாலும்
எச்சொல்லும் இடறுமெனக் கற்பித்த
வேறொரு சொல்லோடும் இணங்குகிறாள்
இந்தப் பாதையின் இறுதிப்புள்ளியில்
அடைக்கலப்படுத்திக்கொள்ளும்
இன்னுமொரு சொற்கூட்டத்தின் தலைமைச் சொல்
இருகிறதெனவும்
அதுவரை சொற்களின் பிறழ்வில்
மயங்காதிருக்கும்படி கட்டளையிடுகிறது
ஒரு மாயச்சொல்
சொற்களிலிருந்து சொற்களைப் பொறுக்கி
தானே ஒரு வாக்கியத்தை
அமைக்கத் தொடங்கினாள்
அப்போது விடைபெற்றிருந்தது
சிறுமியென்ற கிடைக்கப் பெறாச் சொல்
க.அம்சப்ரியா
and got down deeply perturbed.
Seeking pardon again and again
In the manner of having committed
a great treason
Words one and all
pursue the little girl
as her pet puppy
மேடையேறிய அதிஸ்யா
பாட்டைப் பாதியில் மறந்து
படபடத்து கீழிறங்கினாள்
ஒரு குழந்தைக்கு
பெரும் துரோகம் இழைத்துவிட்டதான
பாவனையில்
மன்னிப்பு கேட்டபடி
செல்ல நாய்க்குட்டியெனப்
பின் தொடர்கின்றன
அத்தனை சொற்களும்.
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment