A POEM BY
PAALAI NILAVAN
gets the smell of rat
With fingers as if writing poetry
it opens the window.
Inside an aged cough
on the throes of death
Unmindful of someone
dead and gone
suffice to find a lap,
the cat would lie there
Alas where can it get In this apartment
A lap-cradle tied between two thighs alive
Even the poets wander along for that
in the manner of a cat.
Cat’s hunger is an irrelevant theme for man
For the cat that knows not Hunt and deceit
a rat is needed utmost.
There is nothing as dead rat
in earth’s creation.
The treacherous cat alone has to create it.
It is not easy
None cares for the hungry cat
When there are rats
why should a cat starve
A lizard doesn’t beg for a fly
meant for it
When there are insects worms and flies
why should a lizard remain hungry
Cat that knows not deceit
is not a cat in the least.
That is a strange species
Hunger that knows no treason
wanders as a dark shadow.
A pair of eyes with treason unknown.
The eyes of a child yet-to-be born.
It sees the man
eyeing hungrily
Isn’t there food
Anywhere on the earth
It too sees Him
Who hungrily looks
It asks the dying one
in a beseeching tone
Isn’t there
Food anywhere on earth
_ So it beseeches the
hoarse cough dying
Before it could answer
the gullible dry cough
too
alas
breathes its last.
Paalainilavan Nilavan
•
சூது
பசியோடு வரும் பூனைக்கு எலியின் வாடை
கவிதையை எழுதுவது போன்ற
விரல்களால் அது
ஜன்னலை திறக்கிறது
உள்ளே
இறக்கும் தருவாயில்
வயதான இருமல்
மரணமடைந்தவரெனினும்
ஒரு மடி கிடைத்தால்
பூனை படுத்துக்கொள்ளும்
இந்த அடுக்ககத்தில்
உயிருள்ள இரு தொடைகளில்
கட்டப்பட்ட
ஒரு சிறு தொட்டில் மடிக்கு
அது எங்கு போகும்
கவிஞர்களே அதற்கு
பூனையாய் அலைகிறார்கள்
பூனைப் பசி
மனிதனுக்கு தேவையற்றதொரு
கருப்பொருள்
வேட்டையும் திருட்டுத்தனமும்
தெரியாத
பூனைக்கு ஓர் இறந்த எலி தேவைப்படுகிறது
இறந்த எலி என்ற ஒன்று
பூமியின் சிருஷ்டிப்பில்
இல்லை
சூது கொண்ட பூனைதான்
அதை படைக்க வேண்டும்
அது சுலபமல்ல
பசித்த பூனையை
யாரும் சீந்துவதில்லை
எலிகள் இருக்கும் போது
ஒரு பூனை
ஏன் பசித்திருக்க வேண்டும்
ஒரு பல்லி
தனக்கான ஈ யை
யாசிப்பதிலை
பூச்சி புழுக்கள் ஈக்கள் இருக்க
ஏன் பல்லி பசித்திருக்க வேண்டும்
சூது தெரியாத பூனை
பூனையே அல்ல
அது வினோத உயிர்
சூது தெரியாத பசி
கறுத்த நிழல் போல அலைகிறது
சூது தெரியாத இரண்டு கண்கள்
இன்னும் பிறக்காத
குழந்தையின் கண்கள்
பசியோடு
பார்க்கும் ஒருவனை
அதுவும் பார்க்கிறது
பூமியில்
எங்குமே உணவு இல்லையா
என்று
இறந்து கொண்டிருக்கும்
கரகரப்பான இருமலிடம்
கெஞ்சிக் கேட்கிறது
அதற்கு பதில் சொல்வதற்குள்
அந்த வயதான கைவிடப்பட்ட
சூது தெரியாத வறட்டு இருமலும்
தண்ணீர் கேட்டபடியே
பாவம்
இறந்து விடுகிறது
பாலை நிலவன்
No comments:
Post a Comment