A POEM BY
AATHI PARTHIBAN
Broken branch for rising and resting
Lonely life curving river in a broken branch
Never ever cease to flow
2.
The word of the bird having no giant tree to repose –
a blunt-edged knife
The voice
scattering the nerves of Music
is the bird alone your clan
be happy that kith and kin there is none.
3.
I am there for you, Bird dear
Be it raining
Or the sun burning
I will remain in the same place
Waiting for thee
in words weighing heavy all soaked
between us exclusively
4.
Body the great grand word of lust
All our feelings and emotions exclusive
Are but nest woven by words
But we
Birds languishing in search of shelter
For ever
5.
What have you left for the life having nothing left
A lone feather
What have you clung to
For the relation that leaves us
All of a sudden
A small separation
6
I am a creeper that sprouts holding fast to Life
At the moment when I had none for myself
Hearing your voice I was thrilled, Bird dear, now
I am not a creeper but a Tree.
7
The sea of Love – dwelling on Earth
Throughout your Life
Fly following the sway of your wings
Fly in the direction of Life’s essence.
8
As the garb of the saint wearing saffron
The heart swings and sways
In the sky filled with the red of blood
The solitary bird would stir anon
9.
It is in the distinct voice of my mother bird
I have found and reached this world, Oh my heart
The massive river of motherhood would be infused into
The Life also
By the Female Bird
10
Flying is not holding fast
Fly renouncing all at last.
பறவைகள் பற்றிய பத்துக் குறிப்புகள் -2
1.
தனித்த பறவையின் வாழ்வே கூடு
எழுந்தமர முறிந்த கிளை
தனித்த வாழ்வு உடைந்த கிளையொன்றில் வளையும் ஆறு
ஆறாது
2.
தங்கிச் செல்ல பெருவிருட்சமில்லா பறவையின் சொல் - கூர் மழுங்கிய கத்தி
இசை நரம்பை சிதறிடிக்கும்
குரல்
பறவையே உறவோ உறவற்றதென மகிழ்
3.
உனக்காய் நானிருக்கிறேன் என் பறவையே
மழை பொழிய
வெயில் எரிய
நின்ற இடத்தில் காத்திருப்பேன்
ஈரம் கனக்கும் சொற்களில் நமக்கிடையில் தனி
4.
உடலோ காமத்தின் பெருஞ்சொல்
நம் தனித்த உணர்வுகள் அத்தனையும் சொற்களால் வேயப்பட்ட கூடு
நாமோ
முழுமைக்கும் இருப்பிடம் தேடி அலைவுறும் பறவைகள்
5.
மிச்சம் வைக்காத வாழ்வுக்காய் நீ விட்டுச்சென்றதென்ன
ஒற்றை இறகு
சட்டென்று நமைப் பிரியும் உறவுக்காய்
நீ பற்றிக் கொண்டதென்ன
சிறு பிரிவு
6.
வாழ்வைப் பற்றியேறும் கொடி நான்
எனக்கோ என்னைத்தவிர யாருமில்லை எனும் கணத்தில்
உன் குரல் கேட்டு சிலிர்த்தேன் பறவையே இப்போது
நான் கொடியல்ல மரம்
7.
நேசக் கடல்- தரிப்பிடம் நிலம்
உனது வாழ்க்கை முழுமைக்கும்
சிறகின் அலைவு எவ்விடத்திலோ பற
முழுமைக்கும்
வாழ்வின் சாறு எவ்விடத்திலோ பற
8.
காவியுடுத்திடுத்திய சந்நியாசியின்
தேகச் சீலையென
அலைவுறும் மனம்
ரத்தம் சிவந்த வானத்தில் அசைவுறும் தனிப்பறவை
9.
என் தாய்ப்பறவையின் தனிக்குரலில் தான்
இவ்வுலகத்தை
கண்டடைந்தேன் மனமே
தாய்மையின் பேராற்றை வாழ்வுக்கும் கடத்தும்
பெண் பறவை
10.
பறத்தல் என்பது பற்றிக்கொள்ளல்
அல்ல
பற்றற்று பற
-ஆதி பார்த்தீபன்
No comments:
Post a Comment