INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY 

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

HAVING A CUP OF TEA
WITH BHARATHI


The sky had reddened
Bharathi, writing its pages as poems
saw me and insisted
that I should have a cup of Tea with him.
I, singing the trails of the mount
agree to fulfill his wish
Both of us sat upon the rock
that lay stretched
inside the Tea-Mount.
The proximity of Night stirred
like his black moustache.
I kept looking at his moustache all too often.
The Tea he drank began wetting his moustache
every now and then.
The rough moustache began sweating
And I snatched those pages of his
with poems born of him.
Enraged he slapped me hard.
In that pages
He had squeezed Kannamma’s love into heavenly juice
He went on lamenting
chanting the name of Kannammaa
and I insisted that he should sing about the
vigour of the dye of the Mount
and the pains spreading upon it.
Finishing his cup of Tea
He began crushing the mounts in his poem-squeezer.
The mountain and the associated ones
lying scorched with the dye of Tea
Bharathi’s moustache twirled and twisted
Seeing blood oozing out of the songs of sorrow
of his suffering brethren
languishing clans
He pours on the God the Tea he drinks
as performing Abhishekam
There in the dark sky
stars join hands with Bharathi.

பாரதியுடன் தேநீர் பருகுதல்.
வானம் சிவந்திருந்தது
அதன் பக்கங்களை கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்த பாரதி என்னை கண்டதும் என்னுடன் தேநீர் பருக அடம்பிடித்தான்.
மலைகளின் சுவடுகளை பாடிக்கொண்டிருந்த நான்
அவனது ஆசையினை நிறைவேற்றவென ஒப்புக்கொள்கிறேன்.
தேயிலை மலைக்குள் விரிந்து கிடந்த கற்பாறை மீது இருவரும் அமர்ந்து கொண்டோம்.
இரவின் நெருக்கம் அவனது கருப்பு நிற மீசைப்போல நகர்ந்தது.
அடிக்கடி அவன் மீசையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவன் பருகிய தேநீர் அவனது மீசையினை அவ்வப்போது நனைக்கத்தொடங்கியது.
கரடுமுரடான மீசை வியர்க்க ஆரம்பிக்க
அவனில் பிறப்பெடுத்த கவி ஏடுகளை பிடுங்கியெடுத்தேன்.
ஆத்திரமுற்றவன் என்னை ஓங்கி அறைந்தான்.
அவ்வேட்டில்
கண்ணம்மாவின் அன்பினை நசுக்கி பிழிந்திருந்தான்
கண்ணம்மா கண்ணம்மா
என புலம்பியவனிடம்
மலைச்சாயத்தின் வலிமையினையும் அதன் மீது படரும் வலிகளையும் பாடும்படி வலியுறுத்தினேன்.
தேநீர் பருகி முடித்தவன்
மலைகளை தன் கவிதை வடத்தில் பிழிய ஆரம்பிக்கிறான்
தேயிலை சாயத்தால் கருகி கிடந்த மலையும் மலை சார்ந்தவையும் கண்ணீர் மழையால் திரண்டன.
பாரதியின் மீசை படபடத்தது
தன் மண்ணின் வம்சங்களின் துயர் பாடலில் இரத்தக்கசிவினை கண்டு தான் பருகும் தேநீரினை அபிஷேகம் செய்கிறான்

அங்கே இருண்ட வானில் நட்சத்திரங்கள் பாரதியுடன் கைகோர்த்தன.
~~
11.09.2022

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE