TWO POEMS BY
THAMARAI BHARATHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1. GARBAGE
or as the Gurkha blowing the whistle
and going around keeping vigil
in the well of night
there comes the sanitary worker
Hauling all wastes of the city
moving on manholes
with no gloves
nor gum-boots
nor face masks
he hauls everything with such expertise
it is with his hands that eat
all the wastes of the entire city
all the excretions of the entire city
are collected
day-in and day out.
as the flowers floating in fresh water
are gathered.
2
In the green-colour basket
getting filled at the dead-end lane of the street
all the signs of the fight that went on throughout
yesterday night
were thrown
Words instigating deadly danger and fury
they have thrown into the red-coloured basket.
The sanitary worker quietly renewed the fight.
3.
As toys twisted and broken by children
As the paper-trash rolling on both sides of the road
Those who had poured all things private
In the dustbin
keep strolling here and there.
He who is segregating them
is giving out a quiet smile
just as a psychologist.
Knowing well the underlying sarcasm
they pretend not to know it and
wade through their dailies.
As if he doesn’t know -
He knows all too well
which house has how many entrances
and which one has windows numerous
4
As a wayfarer coming upon some hidden treasure
in the main city
He segregates the garbage in heaps
into degradable wastes
and non-degradable wastes
But they become magical words causing wounds
and getting into the garbage-truck
they mock at him
Oh these adding to the endless toils
and turmoils of survival _
He feels tired.
For he who dreams on a daily basis
in green and red alone
it proved a little difficult to list out
the sticky wastes segregated
in the dream-rain poured the previous day
when rotten veggies, meat , flesh and all
turning into worms
For the stench emanating out at the instance
He always keeps ready a Ninety ml.
5.
After collecting everything
After hauling them all into the truck
Inserting an eraser across the broomstick
which appears as
an inverted triangle with stem
He gets ready to leave
‘In the name of the Father, and of the Son
and of the Holy Spirit. Amen’
I cross my heart
consenting that Redeemer is He
who bears others sins
6.
Never has he demanded respect
Never has he protested against insults
Never avoided anything in aversion
Never turned angry
Even enraged he has never failed to smile
Even when acutely anguished
He has never shed tears
Dumping all dirt and filth
in the ‘compost yard’ itself
He goes away to be near
his dear wife and children
waiting for his return.
But, the wife says
Hei, leave the waste-basket outside, I say”.
குப்பை
1.
தினமும் பஞ்சு மிட்டாய் விற்பவனைப் போல மணியடித்தபடி
அல்லது
தினமும் யாமத்தில் விசில் ஊதியபடி
வீதிகளில் உலவும் கூர்க்கா போல
குப்பை வண்டியில் பவணி வருகிறான்
நகரத் தூய்மையாளன்
பாதாள சாக்கடையின் மேல் நகரும் நகரத்தின்
வீணான அனைத்தையும் அள்ளுகிறான்.
கையுறை இன்றி
காலுறைக் காலணி இன்றி
முகவாய்க் கவசமின்றி முழுவதையும்
அள்ளிப் போகும் இலாவகத்துடன்
இம்மாநகரின் அசுத்தமெல்லாம்
இம்மாநகரின் கழிவுகளெல்லாம்
அவன் உண்ணும் கரங்களால்தான்
தினம் தினம் அள்ளப்படுகின்றன
புதுவெள்ளத்தில் மிதக்கும் பூக்கள்
அள்ளப்படுவது போல
2.
தெரு முட்டுச்சந்தில் எப்போதும் நிறைக்கப்படும்
பச்சை நிறக் கூடையில்
நேற்றிரவு முழுதும் நடந்த சண்டைக்கான
அறிகுறிகள் கொட்டப்பட்டன
பேராபத்தையும் பெருங்கோபத்தையும் தூண்டும்
சொற்களை சிவப்பு நிறக்கூடையில் கொட்டியிருந்தனர்
தூய்மையாளன் மௌனமாக அச்சண்டையை மீண்டும் துவக்கினான்
3.
குழந்தைகள் ஒடித்துப் போட்ட நெகிழிப் பொம்மைகளாக
சாலையின் இருமருங்கிலும் அலையும் காகிதக்குப்பையைப் போல
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தரங்கங்களைக் குப்பைக்கூடையில் கொட்டியவர்கள்
அவற்றைத் தரம்பிரிக்கும் அவன்
ஓர் உளவியலறிஞரைப் போல மௌனப்புன்கை புரிகிறான்
ஏளனம் பரிமளிப்பதைக் கண்டும் காணாதது போல
அன்றாடங்களைக் கடந்து போகிறார்கள்
அவனுக்குத் தெரியாதா
எந்த வீட்டில் எத்தனை கதவுகள்
எந்த வீட்டில் எத்தனை ஜன்னல்கள்
4.
மாநகரத்தில் புதையலைக் கண்ட பயணியாக
குவியல் குவியலாக கிடக்கும் குப்பைகளை
பிரிக்கின்னறான்
மட்கும் குப்பை,
மட்கா குப்பை என
அவையோ காயம் செய்த மாயச்சொற்களாகி
குப்பை வண்டியில் ஏறிக் கெக்கலிக்கின்றன
தினசரி இருப்புக்கான போராட்டத்தில்
இவை வேறு என்று சலித்துக் கொள்கிறான்
நாள்தோறும் பச்சையும் சிவப்புமாக மட்டுமே
கனவுகளைக் கண்டு வருபவனுக்கு
முந்தைய நாள் கனவுமழையில்
பிரித்தெடுத்த நொசநொசத்த குப்பைகளைத்தான்
பட்டியலிட சற்று சிரமாமாயிருந்தது
வாடிய காய்கறிகள் ,அழுகிய புலால்,கறி மாமிசம்
புழுக்களாக மாறும் தருணத்தில் எழும் வீச்சத்துக்கு எப்போதும்
வைத்திருக்கிறான் ஒரு Ninety ml .
5.
எல்லாச் சேகரிப்பிற்குப் பிறகு
எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றியபிறகு
காம்பு முளைத்த தலைகீழ் முக்கோணமாகத்
தெரிகிற துடைப்பத்தின் குறுக்கே ஒரு
அழிப்பானைச் செருகிக் கிளம்புகிறான்.
‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்’
நெஞ்சில் சிலுவைக்குறியிட்டுக்கொள்கிறேன்
பிறர் பாவங்களைச் சுமப்பவர் இரட்சகரென.
6.
ஒருபோதும்
மரியாதையைக் கோரியதில்லை
அவமானங்களுக்கு எதிராகப் பேசியதில்லை
அருவருப்பென்று எதையும் தவிர்த்ததில்லை
கோபங் கொண்டதில்லை
சினமெழுந்தாலும் சிரிக்க மறந்ததில்லை
அதீத மன உளைச்சலுக்கு ஆனாலும்
யார் முன்னரும் அழுததில்லை
எல்லா அசிங்கங்களையும் “கம்போஸ்ட் யார்டிலேயே”
கொட்டிவிட்டுச் செல்கிறான் வீட்டில் காத்திருக்கும் தன்
மனைவியை மக்களைக் கொஞ்ச.
மனைவியோ’தே,அந்தக் குப்பக் கூடய வெளியில வச்சுடு’என்கிறாள் .
2.PLEASE TALK TO THOSE WHO ARE STEEPED IN SORROW UNBEARABLE
of the ocean deep down
burst and scatter as volcanic explosion.
No need to waste words of solace
so as to make them feel at ease for a while.
But the least you can do is to talk to them
Or at least listen to them
Those moments when you could become their saviour
or a person freeing them from torment
would prove magnificent .
Please learn that there is an inner side
in each coin
Please listen keenly to the voice
of the unknown side
Secrets untold might be piled up there
Smut and filth unrevealed
might lie concealed there
Unrealized feelings of guilt
might remain hidden there
Things heinous might be waiting for
their redemption
Please listen to their voices
That itself could become
an affectionate caress
As a breakthrough or turning point
Your Words might lead those in
sorrow unleashed
to a different world that remains serene.
Hence
Speak to them, won’t you
Or at least
Listen to them please.
•
பெருந்துயரத்திருப்பவர்களிடம் பேசுங்கள்
ஆழ்கடல் மௌனமெனப் பொதித்து வைத்தவை எரிமலையென வெடித்தாவது சிதறட்டும்.
அவர்கள் சற்று ஆசுவாசம் கொள்ளட்டுமென ஆறுதல் வார்த்தைகளை நீங்கள் விரயமாக்கவேண்டாம்
குறைந்தபட்சம் பேசுங்கள்
அல்லது கேளுங்கள்
பாரமிறக்கும் மீட்பராகவோ
துயர்நீக்கும் நபராகவோ நீங்கள் மாறக்கூடும் தருணங்கள் அற்புதமானவை
ஒவ்வொரு நாணயத்திலும் உட்பக்கமொன்று இருப்பதை அறியுங்கள்
அறியப்படாத பக்கத்தின் குரலை உற்றுக் கேளுங்கள்
சொல்லப்படாத அந்தரங்கங்கள் குவிந்து கிடக்கலாம்
சொல்லப்படாத அசிங்கங்கள் மறைந்து கிடக்கலாம்
உணரப்பட்ட குற்றவுணர்வுகள்
ஒளிந்து கிடக்கலாம்
வெளியாகாத கீழ்மைகள்
விமோசனத்திற்காகக் காத்திருக்கலாம்
கேளுங்கள் அவர்கள் கூக்குரலை
அதுவே ஒரு தலைகோதலாகலாம்
மடைமாற்றமென உங்கள் சொற்கள்
பெருந்துயரத்திலிருப்பவர்களை
வேருலகிற்குக் கூட்டிச்செல்லலாம்
ஆகவே
பேசுங்கள்
அல்லது
கேளுங்கள் குறைந்தபட்சம்.
தாமரைபாரதி
No comments:
Post a Comment