INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

LAREENA ABDUL HAQ

 A POEM BY 

LAREENA ABDUL HAQ


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE TASTE OF ABSURDITY
When there are only a few moments left
for consummation
Seeping through the fingers
oozes out
the dream being created
The rain’s nil colour turned into chill
You observe
The breeze called thee
wipes out the viscosity of invectives
Packing neatly the seemingly warm fire
in between the chillness
you gifted it christening it Love
For the bamboo-forest of the mindscape
that raged in fire
You prescribe basil cure.
Holy chant on gulping the distance
and getting release from sorrow
is the solution for certain, say thee.
Of its more than one interpretations
which one do you advocate?
Memory becomes a holy cane.
While attempting to cross the Nile river of angst
I happen to wake up from dream
While I move on in the direction of
Kattupalli from my hub
upon the shoulder of unknown someones
wearing cuffon
the sound of Talkeen slowly prevailed
as the smoke of benzoin
sending an invite for Gin….
You never came in……

Abdul Haq Lareena
அபத்தத்தின் சுவை
==================
முழுமையின் உச்சம் சிலகணங்களே இருக்கையில்
விரலிடை குழம்பிக் கசிந்து வழிகிறது
வனைந்து கொண்டிருந்த கனவு
மழையின் நிறமின்மையே குளிராகிற்று என்கிறாய்
வசவுகளின் பொசபொசப்பை துடைத்தெறிகிறது
நீ எனும் தென்றல்.
குளிரிடை இதம் போலத்தோன்றும் நெருப்பை
பொதித்துப் பரிசளித்து நேசம் எனப் பெயரிட்டாய்
பற்றி வெடித்த மனமூங்கிற் காட்டுக்கு
பச்சிலை வைக்கப் பரிகாரம் சொல்கிறாய்.
தூரத்தை அருந்தித் துயரறச் செய்யும் மந்திரம்
நிச்சயமான 'தீர்வெ'னச் சொல்கிறாய்
ஒன்றுக்கு மேற்பட்ட அதன் அர்த்தப்பாடுகளில்
எதைப் பரிந்துரைக்கிறாய், நீ?
நினைவோர் 'அஸா'க்கோல் ஆகிறது
துயரத்தின் நைல்நதியைக் கடக்க முனைகையில்
கனவிலிருந்து எழநேர்கிறேன்.
கஃபனிட்ட என் மையத்து எவரெவர் தோள்மீதோ
காட்டுப்பள்ளி நோக்கி நகரத் தொடங்குகையில்
தல்கீன் ஒலி மெல்லப் பரவி வியாபித்தது
ஜின்னுக்கு அழைப்புவிடுக்கும் சுகந்தச் சாம்பிராணிப் புகையாய்...
நீ வரவே இல்லை.

லரீனா அப்துல் ஹக்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE