INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

RAJAPUTHRAN

 A POEM BY 

RAJAPUTHRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE FIVE ELEMENTS


As the heart had turned into a pit
waiting for the water to fill it
God’s heart became the egg of fish
Those days were mysterious
without having a snake
to decode that of another
Early morn that would vanish in a flash
turned to be woman’s lips
with none to relish .
Sunset hour of evening
Dream’s usual rendezvous
The hot midday
admonished by early morn
and golden dusk
upper lip and lower lip
I am
In my late night
even the comets turn into
Oomatham flowers.
The lotus bloomed yesterday
mocks from being in the mud.
Due to the steps submerged in water
the mid-head of God sways like a doll.
Inside the water
with Sea and River not speaking to each other
Moon and Darkness not come together..
fresh water tasting salty
Moon turns its own self
into darkness dense.
On earth Love lives on
preying on its own self.
The body disappearing in the fire
is the epitome of erotic desire.
Only till burial
the seeds sleep
only till the time one is born
sleeping the humans would remain
If merely closing eyes
Is to be called Sleep
No proximity therein
between God and Ourselves
You call setting afire the body
as reposing also.
Unaware that
in days when I am away from thee
I be revolving
as your world – you see…..

பஞ்ச பூதம்
மனம் நீரவரக் காத்திருக்கும் பள்ளமானதால்
மீன்முட்டையானது கடவுளின் இதயம்
பாம்பின் காலறியும் பாம்பிலாத புதிர்மை நாட்களவை
சட்டென்று மறையும் அதிகாலை
சுவைக்க ஆளில்லாத பெண் உதடுகளானது
உயிர்பிரியும் மாலை
கனவுகளின் வாடிக்கை
அதிகாலையும் பொன்மாலையும் மேலுதடும் கீழுதடும்
கடிந்துகொள்ளும் சூடான நண்பகல் நான்
என் பின்னிரவில் எரிநட்சத்திரங்களும்
ஊமத்தம் பூக்கள் ஆகின்றன
நேற்று மலர்ந்த செந்தாமரை
சேற்றில் கேலி செய்கிறது
மூழ்கியப் படிக்கட்டுகளால்
கடவுளின் உச்சந்தலை
பொம்மையென நிழலாடுகிறது
நீருக்குள்
நதியும் கடலும் பேசிடாமல்
நிலவும் இருளும் கூடிடாது
நன்னீர் உப்புகரிக்க
நிலவு தன்னையும் இருளாக்குகிறது
பூமியில் காதல் தன்னைத்தானே
விழுங்கி நிற்கிறது
உடல் சிதையில் மறைந்திடல்
காமத்தின் உச்சநிலை
புதைக்கப்படும் வரையில்தான்
விதைகளின் உறக்கம்
பிறக்கும் வரையில்தான்
மனிதர்களும் உறங்குவார்கள்
கண்மூடுவது எல்லாம்
உறக்கம் என்றால்
கடவுளுக்கும் நமக்கும்
உறவில் இல்லை இந்த
நெருக்கம்
உடலுக்கு எரியூட்டுவதை
ஓய்வென்றும் சொல்லுவாய் நீ
உன்னுடன் இல்லாத நாட்கள்
உனக்கென உலகமாய்
நானே இயங்குவது அறியாமல்

- ராஜபுத்ரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024