THREE POEMS BY
JEYADEVAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
The day meant for us has drawn closer, My Love
I am collecting kisses in one bag
and poems in another.
Though the place meant for us in the
Great grand space of Time
remains unknown
We should choose one meant for us
in the seashore.
A sky sans thunder and lightning is needed
Bring for me just the You
Kisses so pleasantly warm all over your lips
Poems for me swell in your boobs
A few drops of my life in your ruby-hued nails….
Love without lust, lust without love
surrounding your naval
I as sound inside your anklets
Behind deserted sandspits
as ‘Arivaallmookan' birds
let’s play catching each other’s breath.
In the pasture ground of Mankind
all that we’ve got
are plastic bottles and shells alone.
For I to inhale the smell of Eve
and you to inhale that of Adam
We have to eat the Eden fruit
again and again.
Why for us Solomon’s dress?
Let’s get the body of birds brought by Nova.
Nirvaanaa is a friend to Love
and foe too somehow.
Yet
Can there be Cuckoo’s voice without its body
This is no sensual Nirvaanaa my girl, dear friend
This is Nirvaanaa beyond the boundaries of
the sky of sky
whereby
we lose and regain ourselves.
Here God alone is our companion…. Come
Before the sun of dawn rises… come….
Beloved, do come.
நமக்கான நாள் நெருங்கி விட்டது..அன்பே
ஒரு பையில் முத்தங்களையும்
ஒரு பையில் கவிதைகளையும் சேமித்துக் கொண்டிருக்கிறேன்
காலப் பெருவெளியில் நமக்கான இடம்
எது என்று அறியாத போதும்
கடற்கரையில் நமக்கான இடம் தேர்வு செய்ய வேண்டும்
இடிகளற்ற மின்னலற்ற வானம் வேண்டும்.
எனக்காக நீ உன்னை மட்டுமே கொண்டு வா
சேவற் கொண்டை போல் சிவந்த உன் உதடுகள்
நிறைய இளஞ்சூட்டில் இருக்கும் முத்தங்கள்
வேனிற்காலத்து காந்தள் பூக்கள் போன்ற
உன் நகில்களில் எனக்கான கவிதைகள்
உன் பவளநிற நகங்களில் என் உயிரின்
சில துளிகள் ...
விரகமற்ற காதலும் காதலற்ற விரகமும்
உன் தொப்புள் சுற்றி...
உன் கொலுசுகளுக்குள் ஒலியாய் நான்.
ஆளரவமற்ற மணற் திட்டுகளின் பின்
அரிவாள் மூக்கன் பறவைகள் போல்
ஒருவர் வெளியிட்ட மூச்சை
ஒருவர் பிடித்து விளையாடலாம்.
மானுட மந்தைவெளியில் நமக்குக் கிடைத்தது என்னவோ
நெகிழி குப்பிகளும் கிளிஞ்சல்கள் மட்டுமே
உன் உடம்பில் வீசும் ஏவாளின் மணத்தை நான் நுகரவும்
என் உடம்பில் வீசும் ஆதாம் மணத்தை
நீ நுகரவும்
மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் ஈடன் கனியை
சாலமோனின் ஆடைகள் நமக்கு ஏன் ?
நோவா கொண்டு வந்த பறவைகள் உடம்பை வாங்குவோம்
நிர்வாணம் காதலுக்கு நண்பனும்தான்
அதே பகைவனும்தான் –---ஆயினும்
குயில் உடம்பின்றி குரல் ஏது ?
இது புலன் நிர்வாணம் அல்ல.. தோழி
நம்மை நாம் இழந்து மீண்டும் அடையும்
விண்ணுக்கு விண் கடந்த நிர்வாணம்
இங்கே கடவுள் மட்டுமே நம் தோழன்... வா
விடியலின் சூரியன் எழும் முன் வா....வந்து விடு..
------
2018ல்* இனி உதயம் * மாத இதழில் வந்த கவிதை.
(2)
On some day takes place _
The soft stir of a butterfly’s wings
The scrape of a Katraazhai’ thorn;
The gentle quiver of a raindrop falling;
Tiger claws scratching;
Life-giving nectar dropping off the eye-blossom
of an unknown female;
Enemy’s assault as the thunder
breaking the bubble;
The feel of friendship
as the ‘zari’ upon the lotus;
Child’s cry reminding you of mother’s boobs;
Embrace with the warmth of womb;
In the dry jasmine thrown away by someone
Love residual;
The sound of blood starting from arteries and
echoing in veins;
Sympathetic feeling towards Akaligai;
Lusting Seethai a little;
The desire to embrace the anklet-feet of Madhavi;
Rajkot’s soil;
Lenin’s gun;
Bodhi branch of Buddha;
At times the wish to lie stretched in
the tomb of Pattinathaar;
Thus do some day realized
wishes some -
and a few experiences
woeful and wholesome.
என்றாவது நிகழ்ந்து விட்டுத்தான் போகிறது
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு
ஒரு கற்றாழை முள்ளின் கீறல்
ஒரு மழைத்துளி விழும் சிலிர்ப்பு .
புலி நகத்தின் பிராண்டல்
ஏதோ ஒரு பெண்ணின் விழிப் பூவிலிருந்து
உதிர்ந்து விழும் உயிர் அமுதம்
நீர்க்குமிழியை உடைக்கும் இடியாய் எதிரியின் தாக்குதல்
தாமரை மேல் ஜரிகையாய் விழும்
நட்பின் ஸ்பரிசம் .
அம்மாவின் தனங்களை நினைவூட்டும்
குழந்தையின் அழுகை
கருப்பை சூடாய்க் கனல்கின்ற அரவணைப்பு
எவளோ எறிந்த காய்ந்த மல்லிகையில்
இழந்து போன காதல் மிச்சம்
தமனிகளில் தொடங்கி சிரைகளில்
மீளும் குருதியின் சப்தம்
அகலிகைக்கான அனுதாப உணர்வு
சீதை மீதும் கொஞ்சம் காமம்
மாதவி சிலம்புக் கால் தழுவும் ஆசை
ராஜ்காட்டின் மண்
லெனினின் துப்பாக்கி
புத்தனின் போதிக் கிளை
சமயங்களில் பட்டினத்தார்
சமாதியில் படுக்கும் ஆசை
இப்படி
என்றாவது நிகழ்ந்து விட்டுத்தான் போகிறது
சில ஆசைகளும்
கசப்பாய் இனிப்பாய் சில அனுபவங்களும் .
(3)
In every 4-lane super highway
we are driving our vehicle on someone’s fruits
Or on the grains for the birds.
The dreams of pond-fish
climb into our wagons and come along.
Leaving them at the petrol bunk
we continue our journey.
Her love too could be lying
In the junction where the path turns
into the interior
or beneath the glass cabin
Where the Toll gate man collects cess _
She who has lost Love is searching for it
in the hot sunny dark Tar road.
His singular kiss with the smoke of beedi
on the lips of she who had fed him rice
mixed with ‘Ayirai-meen kuzhambu’ _
wonder in which wind it is with
whichever Diesel smoke?
By the side of each milestone
a child-birth might have taken place
Unable to find their way to their place of origin
the spirits of ancestors
could be wandering all along the way
It is upon the graveyard
the newly married couple
having their first night yesterday
go for honeymoon.
When the road branches out turning inland
We frown as if entering a slum.
Savouring the sweet candy ‘Panju Mittaai’
the road travelling in a cart once again turning alien
climbing up once again and touching the 4-Lane
cools and freshens He inside us
_ the simulated man of the 21st Century.
ஒவ்வொரு நாற்கர சாலையிலும்
நாம் யாரோ ஒருவர் கனிகள் மீதுதான்
ஓட்டுகிறோம் நம் வாகனத்தை அன்றி
ஏதோ ஒரு பறவைக்கான தானியங்கள் மீது .
குளத்து மீன்களின் கனவுகள்
நம் வாகனங்களில் ஏறி வருகின்றன
அவற்றை பெட்ரோல் 'பங்கு'களில்
இறக்கிவிட்டுத் தொடர்கிறோம் நம் பயணத்தை .
அவளுடைய காதல்கூட கிடக்கலாம்
உள்கூடு ஊருக்குப் பிரியும் சந்திப்பிலோ
டோ ல்கேட்டுக்காரன் சுங்கம் வசூலிக்கும்
கண்ணாடி அறைக்குக் கீழோ -
காதலை இழந்தவள் காதலைத் தேடிக்கொண்டிருக்கிறாள்
வேனில் தகிக்கும் கருந்தார்ச்சாலையில் .
அயிரைமீன் குழம்போடு
அடிசிலை ஊட்டிவிட்டவள் வாயில்
அச்சாக அவனிட்ட பீடிப்புகை முத்தம்
எந்த காற்றில் எந்த டீசல் புகையோடோ?
ஒவ்வொரு எல்லைக்கல் பக்கத்திலும்
நிகழ்ந்திருக்கலாம் ஒரு பிரசவம்
வழி நெடுக அலைந்து கொண்டிருக்கலாம்
தன ஊர் தெரியாமல் பிதுர்களின் ஆவி
சுடுகாட்டுக்கு மேல்தான் தேனிலவுக்குப் போகின்றனர்
நேற்று முதலிரவு கண்ட புத்திளம் ஜோடி
ஊருக்குள் கிளை பிரிகையில்
சேரிக்குள் நுழைவது போல் முகம் சுழிக்கிறோம்
பஞ்சுமிட்டாய் தின்றபடி
கட்டைவண்டியில் பயணித்த நம் சாலை அந்நியமாய்
மீண்டும் மேலேறி நாற்கரம் தொட்டதும்
சிலுசிலுக்கிறான் நமக்குள் இருக்கும்
இருபத்தி ஓராம் நூற்றாண்டு செயற்கை மனிதன் .