INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 8, 2020

POETS IN NOVEMBER 2020 ISSUE OF INSIGHT


 
1. TK KALAPRIYA

2. MA.KALIDAS

3. VELANAIYUR THAS
4. KA.MOHANARANGAN
5. BOOMA ESWARAMOORTHY
6.TAMIL MANAVALAN
7. MULLAI AMUTHAN
8. JEYADEVAN
9. DEEN GAFFOOR
10. THARMINI
11. THAMIZHNATHY
12. RIYAS QURANA
13. SOUVI
14. SAHIBKIRAN
15. SATHIYARAJ RAMAKRISHNAN
16. SHANMUGAM SUBRAMANIAM
17. PALANI VELL
18. PALAIVANA LANTHER
19. NESAMITHRAN
20. NASBULLAH. A.
21. MALINI MALA
22. MARIMUTHU SIVAKUMAR
23. MANUSHI
24. MAANA BASKARAN
25. MAHA SHARIF
26. KAMARAJ VISWAGANDHI
27. U.NIZAR
28. ABDUL JAMEEL
29. VEERASAMY RENGARAJAN
(YUGAYUGAN)
30. VELANAIYUR RAJINTHAN
31. ABDUL SATHAR
32. MIZRA JABBAR
33. THEEPIKA THEEPA
34. CHE.THANDAPANI THENDRAL
35. NETKOLUTHASAN
36. KALA PUVAN




LOCKDOWN LYRICS - 102 TAMIL POEMS ON COVID TIMES RENDERED IN ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN

 

102 CONTEMPORARY TAMIL POEMS ON THE SOCIAL AND PSYCHOLOGICAL IMPACT OF CORONA RENDERED IN ENGLISH BY 
VETERAN TRANSLATOR DR.K.S.SUBRAMANIAN. 

PUBLISHED BY 
DISCOVERY BOOK PALACE. 
discoverybookpalace@gmail.com  
            +91 87545 07070 , 99404 46650+91 87545 









Tk KALAPRIYA'S POEMS(2)

                                                TWO POEMS BY

TK KALAPRIYA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)

Don’t read between my lines
Sometimes I conceal the failures of my ancestors
and my own self there
Seems like the fresh new noise of a thing _
being with us from time immemorial _
slipping from hand and falling down
just this day
must have remained here till now.
The shocking silence befalling
on reading the translated poem of one
in angst
comes from there, for sure.
For me to begin the first letter of the next line
wait so responsibly
the yet to form hollow space.
Reading between the lines
don’t proclaim your annotations to me
as sovereign dictates.
That it is but sheer politics
all other lines are
absolutely aware of.


என் வரிகளுக்கிடையில்
வாசிக்காதீர்கள்
சில சமயம் அங்கே என்
மற்றும் எம் முன்னோரின்
தோல்வியை ஒளித்து வைக்கிறேன்
கால காலமாக எங்களுடனிருக்கும்
பொருளொன்று இன்றைக்குத்தான்
கைதவறி விழுந்த புதிய
ஒசையொன்று இதுகாறும் அங்கேதான்
இருந்திருக்கும் போல
கிலேசப்பட்ட ஒருவனின்
மொழிபெயப்புக் கவிதையைப்
படிக்கிற போதுண்டாகிற
அதிர்ச்சியான மௌனம் நிச்சயம்
அங்கிருந்தே வருகிறது
நான் அடுத்த வரியினுக்கான
முதலெழுத்தைத் துவங்குவதற்காக
எப்போதும் பொறுப்புடன் காத்திருக்கிறது
உருவாகப் போகும்
பொருளற்ற இடைவெளி
வரிகளுக்கிடையில் வாசித்து
உங்கள் வியாக்கியானங்களை
சட்டமென எம்மிடம் சாற்றாதீர்கள்
அது அரசியல் என்பதை
ஏனைய அனைத்து வரிகளும்
உணர்ந்தே இருக்கின்றன.


2. AQUATIC PLANT REMINISCENCES
Just as water in a dam
now and then would accumulate in the brain
memories of your source.
Unable to bear the heat of waiting
smearing the black of words
would ascend the sky you had never looked up
as rainy clouds some poetic memories
As the tears which you feel not, even if you note
would leak some
Through the little holes of stonewall
my sighs turning into wind and blow
despite hearing the spreading and
circulating soft waves knocking, not responding
the sluices would wait for your command to open
The fish inhaling memory and perusing
when on the water writing lines and leaping
watching it and come leaping and grabbing them
the kingfisher would call it punishment meted out for
violating the laws of dam-prisons.
Even if lived in flourish
with memories remaining deep down
till there is water no more,
surfacing not to the fore
Don’t the eagles clutch them with their sharp feet
So it would console too.
Underneath so deep where waves beat
all too rarely
in your rejection’s rocky-cleft
in aid of the fresh eggs and
little ones
waving as aquatic plant
memories residual.

நீர்த் தாவர நினைவுகள்
__________________________
அணைக்குள் நீர் போல்
அவ்வப்போது மூளை சேரும்
உன் ஆதி நினைவுகள்
காத்திருப்பின் வெம்மை தாங்காது
சொற்களின் கருமை பூசி
நீ நிமிர்ந்தே பாராத வானமேறும்
கார்மேகமெனச் சில கவி நினைவுகள்
நீ பார்த்தாலும் உணராத
கண்ணீரெனக் கசியும்
கற்சுவரின் சிற்றுளைகள் வழிச் சில
என் பெருமூச்சுகள் காற்றாகி வீச
பரவிப் படரும் மெல்லிய அலைகள் தட்டும்
ஓசையினைக் கேட்டும் திறவாது
உன் கண்களின் கட்டளைக்கே
திறக்கக் காத்திருக்கும் மதகுகள்
நினைவைச் சுவாசித்து வாசித்த மீன்கள்
நீர் மேல் வரி எழுதித் துள்ளுகையில்
பார்த்து வந்து பாய்ந்து கொத்திப் போவது
அணைச் சிறைகளின் சட்ட மீறலுக்குத்
தண்டனை எனச் சொல்லும் மீன் கொத்திகள்
நீர் வற்றிப் போகும் வரை நினைவுகள்
மேல் வராது வாழ்ந்து கொழுத்தாலும் கூரிய
காலால் கவ்விச் செல்வதில்லையா கழுகுகள்
என்றும் சமாதானம் சொல்லுமவை
எப்போதாவது அலையடிக்கும் ஆழத்தில்
உன் புறக்கணிப்பின் பாறையிடுக்கில்
புதிய முட்டைகளுக்கும் குஞ்சுகளுக்கும்
துணையாகக் கையசைத்துக் கொண்டு
நீர்த் தாவரமாய் எஞ்சிய நினைவுகள்

MA.KALIDAS'S POEM

 A POEM BY

MA.KALIDAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Right from the moment of losing the key

the doors keep wailing nonstop
That the secret eyes of the great grand Space
spy on their privacy, they scream
That they pour as garbage through their holes
Silence surpassing the volume of container, they yell.
That unable to bear the echoing noises of
hitherto locked and opened sounds
the roof is cracking, they jerk
They long to throw out the duplicate key
trapped inside.
When someone with the help of something
breaks the latch
as if with eyebrows shaved
and identity lost
they cringe in shame.
Despite being opened and refurbished,
speaking of its past glory,
even when tapped softly, the doors having lost their keys once
bit by bit
give way turning weak and waste away.

சாவி தொலைந்த நொடியிலிருந்து
கதவுகள் அவ்வளவு கதறுகின்றன.
மாபெரும் வெட்டவெளியின்
ரகசியக் கண்கள், தன் அந்தரங்கத்தை
வேவு பார்ப்பதாக அலறுகின்றன.
கண்டெய்னர் கொள்ளா மௌனத்தைக் குப்பையைப் போலத்
தன் துவாரங்களின் வழி கொட்டுவதாக வீறிடுகின்றன.
இதுவரை பூட்டித் திறந்த ஓசைகளின் எதிரொலிக்குத் தாங்காது, கூரை விரிசலுறுவதாகத் துணுக்குறுகின்றன.
உள்ளேயே மாட்டிக் கொண்ட மாற்றுச்சாவியை,
வெளியில் தூக்கி வீச மருகுகின்றன.
யாரோ எதையோ கொண்டு
தாழ்ப்பாளை உடைக்கும் போது,
புருவம் மழிக்கப்பட்டு
சுயமிழந்ததைப் போலக்
கூனிக் குறுகுகின்றன.
திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டாலும் பழம்பெருமை பேசி
லேசாகத் தட்டினால் கூட, ஒருமுறை சாவியைத் தொலைத்த கதவுகள்
கொஞ்சம் கொஞ்சமாக
உள்ளுக்குள்ளேயே இற்று உதிர்கின்றன.
- மா.காளிதாஸ்

VELANAIYUR THAS'S POEM

 A POEM BY

VELANAIYUR THAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




GOOD MORNING
How to send this Good Morning
Viber WhatsApp E-mail – all and more are there
Severing all connections you remain a primordial being
Being an island surrounded on all sides by the vast sea.
Wish I had trained a bird
Wrapping my love with its wings it would have brought it to you
Shall I climb the peak and proclaim standing there
Won’t the words air-borne
become time-worn
Can write it in the cloud
Of those thousands of clouds ever on the run
Alas, how will you identify this tiny one!
My little girl!
This ‘Greeting’ is exclusively for thee.
Ere the moisture of affection on each letter dry up
I should disclose this
Stretching the hand of memory that tends
to extend
I touch thee
And now I tell here
Good Morning, My Dear.

காலை வணக்கம்
-----------------------வேலணையூர்-தாஸ்
எப்படி அனுப்புவது இந்த காலை வணக்கத்தை
வைபர் வட்சாப் ஈ மெயில் எல்லாம் இருக்கிறது
தொடர்புகளை துண்டித்து
ஆதி கால மனுசியாகி இருக்கிறாய்
நீண்ட கடல் சூழ்ந்த தீவாகிறாய்
நான் ஒரு பறவையை பழக்கியிருக்கலாம்
என் பிரியத்தை சிறகினால்
பொத்தி வந்து கொடுத்திருக்கும்.
உயரத்தில் ஏறி நின்று உரக்க சொல்லிவிடவா
காற்று காவி வரும் வார்த்தைகளுக்கு
வயதாகி விடாதா!
மேகத்தில் எழுதி விடலாம்
ஓடும் ஆயிரம் மேகங்களில்
எப்படி கண்டு கொள்வாய் இந்த துண்டு மேகத்தை!
என் சின்னப்பெண்ணே!
உனக்கான வணக்கம் இது
ஒவ்வொரு எழுத்திலும் இருக்கிற அன்பின் ஈரம் காயும் முன்
இதை சொல்லி விடவேண்டும்
நீள நினைக்கிற நினைவின் கை நீட்டி
உன்னை தொடுகிறேன்
இப்போது சொல்கிறேன்
இனிய காலை வணக்கம்

K.MOHANARANGAN'S POEM

 A POEM BY

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Observing the Memory
climbing down crawling
in freezing loneliness
with muscles tightening
shaking the head
and peeling off its own skin
proves terrorizing;
thrilling.
For me to clasp
Your ten fingers prove inadequate.



THEEPIKA THEEPA'S POEMS(2)

 TWO POEMS BY

THEEPIKA THEEPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)]

1. BLEEDING PARDON
Bloodbaths and massacres
have become all too familiar to us*
Just as the leaking rainwater in the veranda
our eyes grew watching blood non-stop.
In the name of war
we had marketed blood so cheap
Blood had never been novel to us
Blood dripped in all our journals
All our days commenced with gory deaths.
In our nights
more than the stars
humans dropped dead.
In the name of war
we pardoned Blood.
Crimson-hued blood that went on springing
poured torrentially.
We were blood-sprouting foster-children
In the end
with no room for any peace whatsoever
War too had been massacred.
But we are yet to let go of
the bloody-cups.
The frenzy of our blood given so profusely
still make us dance to its tune.
Our blood keeps chasing us
not letting us go.
Despite the declaration that well before the harvest time
our armaments were silenced
bloodthirsty, we keep roaming all over the world
The curse called blood entrenched in us
is throttling us.
Here
with hammer we smash our own children
and kill them.
Alas, my god
Forgive us for being bloodthirsty.
Let someone secure freedom for our people
from the gruesome grip of blood.

*We : Eelam Tamils


இரத்த மன்னிப்பு
----------------------------
இரத்தங்களுக்கும்,
படு கொலைகளுக்கும்
பரீட்சயமானவர்கள் *நாங்கள்.
ஒழுகும் தாழ்வார மழைநீரைப் போல
குருதியைப் பார்த்துப் பார்த்து
வளர்ந்தன எங்கள் கண்கள்.
யுத்தத்தின் பெயரால்
இரத்தத்தை நாங்கள்
மிக மலிவாகச் சந்தைப்படுத்தினோம்.
இரத்தமென்பது
எங்களுக்கு எந்தப் புதினமாகவும் இருக்கவில்லை.
எங்களின் பத்திரிகைகளெல்லாம்
இரத்தங்களோடேயே வடிந்தன.
எங்களின் நாட்களெல்லாம்
படு கொலைகளோடேயே தொடங்கின.
எங்களின் இரவுகளில்
நட்சத்திரங்கள் உதிர்ந்ததைக் காட்டிலும்
மனிதர்கள் உதிர்ந்தார்கள்.
நாங்கள்
யுத்தத்தின் பெயரால்
இரத்தத்துக்கு பாவமன்னிப்பு வழங்கினோம்.
அள்ள அள்ளக் குறையாத
சிவப்பு இரத்தம் ஊறிப் பொழிந்தது.
நாங்கள் இரத்தம் பூக்கும்
தத்துப் பிள்ளைகளாக இருந்தோம்.
இறுதியில்
இனியொரு சமாதானத்துக்கு இடமின்றி
யுத்தமும் படு கொலை செய்யப்பட்டு விட்டது.
நாங்கள்
எங்களின் இரத்தக் கிண்ணங்களை
இன்னமும் கைவிடவேயில்லை.
அள்ளியள்ளிக் கொடுத்த
நம் இரத்தத்தின் வெறி
எங்களை ஆட்டுவிக்கிறது.
இன்னமும் கைவிடாமல்
நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது
எமது இரத்தம்.
அறுவடைக் காலத்துக்கு முன்பே
நம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுவிட்டன
என்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட பிறகும்
நாங்கள் குருதியின் தாகத்துடன்
உலகெங்கும் அலைகிறோம்.
எங்களைப் பிடித்துக் கொண்ட
இரத்தச் சனியன்
கழுத்தை இறுக்கி வைத்திருக்கிறது.
இதோ!
நாங்கள் சுத்தியலால்
எங்கள் சொந்தக் குழந்தைகளேயே
அடித்துக் கொல்கிறோம்.
கடவுளே!
எங்களுக்கு இரத்த மன்னிப்பளியும்.
எங்களின் சனங்களுக்கு
இரத்தத்தின் பிடியிலிருந்து
யாராவது விடுதலை பெற்றுக் கொடுங்கள்.
--- xxx ---
- தீபிகா-
04.10.2020
02.01 அதிகாலை
* நாங்கள் - ( ஈழத் தமிழர்)


2. MOTHER’S RAINY SEASON
Overriding all the poems that this rain
brings to me
pains
the wheezing sound of mother’s Asthmatic bronchitis
Children who have seen at close quarters
the rainy season of their mother
suffering to the core unable to mutter a word
would never ever celebrate rain.
With no oven lit
in mother’s wheezing house
just the warm tea given by father
the children have,
soaking the bread-pieces in it.
Children not wanting to sail ships
keep pleading with the Rain
for the sake of their mother
lying all wrapped.

Theepika Theepa

அம்மாவின் மழைக்காலம்
---------------------------------------
இந்த மழை
என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்
எல்லாக் கவிதைகளையும்
தோற்கடித்துக் கொண்டு வலிக்கிறது
அம்மாவின்
முட்டு இழுப்புச் சத்தம்.
ஒரு வார்த்தை பேச முடியாமல்
அவதிப்படுகிற
அம்மாவின் மழைக் காலங்களை
அருகிருந்து பார்த்து வளர்ந்த குழந்தைகள்
ஒரு போதும்
மழையை கொண்டாடப் போவதேயில்லை.
அடுப்பெரியாத
அம்மாவின் மூச்சிழுக்கும் வீட்டில்
அப்பா ஆற்றிக் கொடுக்கும்
வெறும் தேனீரை
குழந்தைகள் பாண் துண்டுகளில்
தோய்த்துச் சாப்பிடுகிறார்கள்.
கப்பல் விட விரும்பாத தம் கைகளால்
குழந்தைகள்
போர்த்துக் கொண்டு படுத்திருக்கிற
தங்கள் அம்மாவுக்காக
மழையிடம் மன்றாடிக் கொண்டேயிருக்கின்றன.

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024