INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 31, 2025

RAMESH PREDAN

A POEM BY
RAMESH PREDAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

GOD WITH NAME UNKNOWN

With two kinds of living species of the planet called earth
Getting into each other in perfect sync
I evolved as a plant-animal.
Flying it arrived from somewhere
and at the bottom branch of the body
building nest in the shape of a basket
the bird of an alien soil
as soon as it finished constructing
flew away know not where.
Though Tree yet my body
is made of flesh bone nerve blood
A deadly thorn of one of the twigs of nest
piercing
Blood surges in the left thigh of the branch
Bending I wipe it off with the tip of the branch
Pain caused by bird
What use a barren nest is of?
Everyday you climb on me
Seeing the nest sans egg you feel disappointed
Don’t you know how to copulate with a tree
If you do so throughout this season
Each day without fail I will lay egg in this nest
with all fives sense curling and containing
Will you incubate in that?
That solitary bird that know not how to
Lay egg
Renouncing the nest that was built with instincts
Returned to where it came from
The nest created by the bird
And myself being here
Why hesitate to mount on me
And copulate?
Replicating its own self
Is the dialectical nature of living organism
For you and the tree a nest in common
Yes, that bird built in me
The god with name known
Who keeps wandering in the planet called Earth
In one sway of wings
Go across a continent.

பெயர் தெரியாத தெய்வம்
புவிக்கோளின் இருவகை உயிர்மை
ஒன்றோடொன்று ஒன்றி
தாவரவிலங்காகப் பரிணமித்தேன்
எங்கிருந்தோ பறந்துவந்து
உடம்பின் அடிமரக் கவையில்
சுள்ளிகள் கோர்த்து
கூடை வடிவில் கூடுகட்டிய வேற்று நிலப் பறவை
கட்டிமுடித்ததும் எங்கோ பறந்துவிட்டது
மரம் எனினும் எனது உடம்பு
தசை எலும்பு நரம்பு குருதியாலானது
கூட்டின் சுள்ளி ஒன்றின் கொடுமுள் தைத்து
கவையின் இடத்தொடையில் குருதி வழிகிறது
குனிந்து கிளை முனையால் துடைக்கிறேன்
பறவை செய்த வலி
வெறும் கூட்டால் பயன் என்ன?
நாள்தோறும் என்மீது ஏறுகிறாய்
முட்டை இல்லாக் கூட்டைப் பார்த்து ஏமாறுகிறாய்
மரத்தைப் புணரும் வழிவகை அறியாயோ
என்னைப் புணர்ந்தால் இப்பருவம் முழுவதும்
நாள்தோறும் இக்கூட்டில் முட்டையிடுவேன்
அதில் ஐம்புலன் சுருண்டு அடங்கி அடைக்காப்பாயா?
முட்டையிடத் தெரியாத அந்தத் தனித்த பறவை
உள்ளுணர்வால் கட்டியக் கூட்டைத் துறந்து
எங்கிருந்து வந்ததோ அங்கே திரும்பிவிட்டது
பறவை செய்தக் கூடும்
முட்டையிட நானுமிருக்க
என்னை ஏறிப்புணர என்னத் தயக்கம்?
தன்னைப் படியெடுத்துக்கொள்வதே
உயிர்ப்பொருளின் இயங்கியல் பண்பு
மரத்திற்கும் உனக்கும் பொதுவில் ஒரு கூடு
ஆம், என்னில் அந்தப் பறவை கட்டியது
புவிக்கோளகையில் சுற்றித் திரியும்
பெயர் தெரியாத தெய்வம்
ஒற்றைச் சிறகசைப்பில் கண்டம் தாண்டுகிறது.
ரமேஷ் பிரேதன்

YAVANIKA SRIRAM

A POEM BY
YAVANIKA SRIRAM
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
A TINY FLAME

11
In my house brass metal that can manufacture
a thousand bullet
remains as a great grand water-pot!
Iron-Ore for several black-guns
whines in the hall
as the swing
in which the children (and I sometimes)
sway enthralled!
From tiny little matchboxes
raw-materials for bombs too many
My Mother keeps using
for a long time.
Whenever descriptions of
blood-streaming lanes
and flies-swarming corpses
in a neighboring land
are being aired
I
amidst the coconut grove
wherefrom tender coconuts
for my father’s last rites
were cut
stand aghast.
Do they still remain –
The water-pot, swing
and the coconut trees in the backyard garden
with a tiny flame in the offing!

சிறுநெருப்பு
என் வீட்டில் ஆயிரம் தோட்டாக்கள்
செய்யக்கூடிய பித்தளை உலோகம்
ஒரு பெரிய நீர்ப் பானையாய் இருக்கிறது!
சில கருந்துப்பாக்கிகளுக்கான இரும்புத்தாது
குழந்தைகள் (சில நேரம் நானும்)
ஆடும் ஊஞ்சலாய்க் கூடத்தில்
சிணுங்குகிறது!
சின்னஞ்சிறு நெருப்புப் பெட்டிகளில் இருந்து
பல வெடிகுண்டிற்கான மூலப்பொருளை
அனேக காலமாய் என் தாய்
செலவழிக்கிறாள்!
சேய்மை நிலமொன்றில்
பல நாட்களின் தொடர்ச்சியாய்
குருதிவெள்ளம் பாயும் தெருக்கள் பற்றியும்
ஈ மொய்க்கும் பிணங்கள் பற்றிய யுத்த
விவரணைகள்
ஒலிபரப்பப் படும் போதெல்லாம்
எந்தையின் ஈமச்சடங்கிற்கு
இளநீர்க்காய் வெட்டிய
தென்னங்கொல்லைக் கிடையில்
திடுக்கிட்டுப் போகிறேன்!
இன்னமும் அங்கிருக்கிறதா
நீர்ப்பானையும் ஊஞ்சலும்
சிறு நெருப்போடு தென்னங்கொல்லையும்!

M D MUTHUKUMARASWAMY

A POEM BY
M D MUTHUKUMARASWAMY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
YOU WANTED TO PURCHASE A SAMURAI SWORD
In Osaka city
You wish to buy a Samurai Sword
Just as you see in Quentin Tarantino’s movie Kill Bill
The Samurai Sword that would in one swing
divine the body into two
from head to toe
From Yasunari Kawabata Monument
arriving at the next halt
-The Samurai Memorial
just as Snow and Moon
Samurai too is a ‘word specialized’
You realize.
With the impeccable beauty of the Panchaloka idols
The killer-weapon too shines in divine radiance.
Temples and palaces treasure it and safeguards it.
Their traditional killer-swords
in Eighty centimeter length
weighing Nine hundred and Fifty grams
The moonshine of the steel curved
as the hip of a woman endowed with beauty unmatched
Invites you ‘Come – Welcome!’
just as the smile of Buddha.
You don’t choose the sword
The sword chooses thee
- So says a Japnese proverb.
You are very much drawn towards
*Uchigatana – which was snatched away from the working class
and turned into an exclusive property of Landlords.
It is this variety of sword
That is surrounded by decorations and extravaganza
and proclamations immense
that has tasted blood utmost
down History’s course.
Suffice to touch a thin sheet of paper
or Kimono’s private knot
with the tip of sword
It would fall apart in two pieces
absolutely noiseless.
- So the sword’s history says.
It is with it that
Kenkichi SAKAKIBARA
just as Master’s blessing vision
Cut into two
The iron-bonnets of enemies.
Samurai Sword is an artefact
that commands you to have the Zen mind.
Take care to keep it in tact
not allowing it to bend or break
But keep it sharp and cut with it
You can’t just go screaming
“Take at once the killer sword”
and hold aloft a sword.
With the composure of a Tea- Festival
and the mind unified through years of meditation
you can hold a sword.
Suppose you manage to hold it
You invariably wish to kneel down and offer it
to those soft feet seen
underneath the bottom edge of Kimono
that for ages tied tight with cloth and
made tiny unnaturally -
though it is but the pose of a cliché.
Or else
Holding the sword
You set out to wander
with the pompous complacency of a writer
*Uchigatana – From Tachi to Katana - Samurai Zwaard
The uchigatana is a transitional sword between the tachi and katana and is a combination of two Japanese words: uchi and gatana.

நீயொரு சாமுராய் வாள் வாங்க விரும்பினாய்
ஒசாகா நகரில்
கிவெண்டின் டேரெண்டினோவின்
கில் பில் திரைப்படத்தில் வருவது போல
ஒரே வீச்சில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
இரண்டாகப் பிளக்கும்
சாமுராய் வாளொன்றை
நீ வாங்க விரும்புகிறாய்
யாசுனெரி காவபட்டா நினைவகத்திலிருந்து
சாமுராய் அருங்காட்சியத்திற்கு அடுத்த நிறுத்தமாய்
வந்து சேர்ந்து
பனியையும் நிலவையும் போலவே
சாமுராய் வாளும் ஒரு அருஞ்சொல் என அறிகிறாய்
பஞ்சலோக தெய்வச் சிலைகளின் பேரழகுடன்
கொலைக்கருவியும் பிரகாசிக்கிறது தேவ ஒளியுடன்
ஆலயங்களும் அரண்மனைகளும் போற்றி பாதுகாக்கின்றன
தங்கள் பாரம்பரிய கொலைக்கருவிகளை
எண்பது செண்டிமீட்டர் நீளத்தில்
தொள்ளாயிரத்து ஐம்பது கிராம் எடையுடன்
பேரழகுப் பெண்ணின் இடையெனவே வளைந்த
உருக்கின் நிலவொளிப் பிரகாசம்
புத்தனின் புன்னகை போலவே
உன்னை வா வா என்றழைக்கிறது
நீயல்ல வாளைத் தேர்ந்தெடுப்பது
வாளே உன்னைத் தேர்ந்தெடுக்கிறது
என்கிறது ஜப்பானிய முதுமொழி
உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து
அபகரிக்கப்பட்டு
நிலவுடமையாளர்களின் தனிச் சொத்தாக உருமாறிய
உச்சிகடானா
உன்னை பெரிதும் வசீகரிக்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
அலங்காரங்களும் ஆடம்பரங்களும் அறைகூவல்களும் ஆர்ப்பாட்டங்களும் நிறைந்த
அந்த வாளின் வகையே
சரித்திரத்தில்
அதிக ரத்தம் கண்டது
ஒரு மெல்லிய தாளினை
கிமோனாவின் அந்தரங்க முடிச்சை
வாளின் நுனியால்
லேசாகத் தொட்டாலே
சப்தமற்று
இரண்டாகப் பிளக்கும் அது
என்கிறது வாளின் சரித்திரம்
கென்கிசி சகாகிபரா
அதை வைத்து
எதிரிகளின் இரும்புத் தலைக்கவசங்களையே
குருவின் அருள்பார்வை போலவே
இரண்டாகப் பிளந்தார்
சாமுராய் வாள் ஒரு கலைப்பொருள்
அது
உன்னிடத்தில்
உடையாதே வளையாதே கூராகப் பார்த்து வெட்டு
எனும்
ஜென் மனோநிலையைக் கட்டளையிடுகிறது
கொலை வாளினை எடடா எனக் கூவிப் போய்
உடனே ஒரு வாளைக் கையிலேந்த முடியாது
தேநீர் விருந்தின் நிதானத்துடன்
பல வருட தியானத்தில் சேர்ந்த மன ஒருமையுடன்
மட்டுமே
ஒரு வாளை கையிலேந்த முடியும்
ஒரு வேளை
நீயொரு வாளைக் கையிலேந்திவிட்டால்
காலங்காலமாக
துணியால் கட்டி இறுக்கி
செயற்கையாய் சிறிதாக்கப்பட்ட
கிமோனாவின் அடி நுனிக்கு
கீழே தெரியும்
மென் பாதங்களுக்கே
அதை
மண்டியிட்டு சமர்ப்பிக்க விரும்புகிறாய்
அது ஒரு தேய் வழக்கு பாவனை என்றாலும் கூட
இல்லையென்றால்
அவ்வாளைத் தூக்கிக்கொண்டு
கலைஞன் என்ற ஹோதாவில்
ஊர் சுற்றக் கிளம்புகிறாய்

SEENU RAMASWAMY

A POEM BY
SEENU RAMASWAMY
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FOR A FELLOW POET....
(*DEDICATED TO POET JEYADEVAN)
When a Poet breathes his last
Nothing happens
The Sun remains the same
Sea doesn’t undergo any change
The Moon too shines the same
In jungles the massive trees
stand as usual
People too as usual
go past, paying least attention to the poet
Those who know feel the loss
and feel sad
For those who don’t know
Just some elderly person
Or a young man
Or a person
Or a patient
passed away.
The heart of language that for the entire life-span
stayed alive functioning admirably admiring
has come to repose.
Everything remains as before.
No change whatsoever
That day also bloom many a flower
Of them one is that which bloomed in the
verse of the Poet now no more.

ஒரு கவிஞன் மரணிக்கும் போது
எதுவும் நிகழ்ந்து விடவில்லை
வெயில் அப்படியே இருக்கிறது
கடலில் மாற்றம் இல்லை
நிலவும் அப்படியே இருக்கிறது
காடுகளில் பெரிய மரங்கள்
அப்படியே இருக்கின்றன
மக்களும் எப்பவும் போல்
ஒரு கவிஞனை கவனிக்காது போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அறிந்தவர்கள் துக்கத்தை அனுஷ்டிக்கிறார்கள்.
அறியாதவர்களுக்கு
ஒரு வயதானவரோ
ஒரு இளைஞரோ ஒரு மனிதரோ
ஒரு நோயாளியோ
இறந்துவிட்டார்.
காலமெல்லாம் வியந்து இயங்கிய மொழியின் இதயம் ஓய்வு பெற்றுவிட்டது.
எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன
எதிலும் மாற்றமில்லை
அன்றும் செடிகளில் மலர்கள் பூக்கின்றன
அதில் ஒரு பூ மரணித்த கவிஞனின்
கவிதையில் பூத்த பூ
சீனு ராமசாமி
(கவிஞர் ஜெயதேவனுக்கு)

SUGANYA GNANASOORY

A POEM BY
SUGANYA GNANASOORY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE CONFESSIONAL STATEMENT OF A CENTURY
1.
Escaping from struggles and staying alive
is not something that easy.
Under the vast expanse of the sky
In the slave’s hut of the massive jungle
Copulating violently along the marshy land
*Naathi proceeds
*Cassiano is still rattling on...

2.
Inside the red-dusts
Tales of centuries
Still remain alive.
The Sapucai land
happened as the big-bang
in the smile of betrayal
made to scatter
Comrades

3.
The agony of survival
between Sapporo and wild animals
for the child that attempts to cry
she thrusts her dry shrunken quivering bosom
Feels choked.

4
The course of Mante river
Is still running infinitely.
‘Kangaanis’ in Kaena wines
Karonal keeps shooting them as shooting the ducks.
Regarding Land and Field
Cassiano keeps on jabbering
As one in the grip of fever delirious.
Holding a morning star
Naathi eyes her land.
Roasted there
were not mere Mate leaves
My comrades.
// * இந்தக் கவிதை ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை, அல்லது அதைப் பேசும் புனைவைப் பின்புலமாகக் கொண்டு (ஓரளவுக்கு உள்ளடக்கமாகவும்) எழுதப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வு, அது பற்றிய புனைவு தெரிந்தால்தான் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியும். அது தெரிந்தால்தான் மூல கவிதையிலுள்ள ஊர், நதி போன்ற பல பெயர்களை சரியான ஆங்கிலச் சொற்களில் தர முடியும். இந்தக் கவிதையின் பின்புலம் அல்லது உள்ளடக்கமாக அமையும் நிகழ்வோ அல்லது புனைவோ நமக்குத் தெரியவில்லை (எனக்குத் தெரியவில்லை) என்பதாலேயே இந்தக் கவிதை எனக்கு புரியாக்கவிதையாகி விடுகிறது. அதற்காக, நான் கவிஞரைக் குறைசொல்லி[ பயனில்லை. அவருக்கு அந்த நிகழ்வு, அது பற்றிய புனைவு தெரிந்திருக்கிறது. அது அவஎ மீது உண்டாக்கியிருக்கும் தாக்கத்தில் அவரிடமிருந்து கவிதை உருவாகியிருக்கிறது. இந்தக் கவிதை எனக்கும் ஒரு வாசகராக, இதன் பின்புலமாக அமைந்த விஷயம் தெரியவில்லையானாலும், என்ன இது , என்ன நடந்தது என்ற ஆர்வக்குறுகுறுப்பு, அலைக்கழிப்பு காரணமாக மொழிபெயர்த்திருக்கி றேன். ஒரு வாசகராக, கவிதையில் பேசப்படும் சம்ப்வம் குறித்து ஒரு சிறு குறிப்பு தந்தால் உதவியாயிருக்கும் என்று கவிஞரைக் கேட்டுக்கொள்கிறேன். அது கிடைத்தால் மொழிபெயர்ப்பையும் செம்மைப்படுத்த முடியும்.//
ஒரு வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் நான் முன்வைத்த வேண்டுகோளைப் பொருட்படுத்தி பதிலளித்த கவிஞருக்கு என் மனமார்ந்த நன்றி - லதா ராமகிருஷ்ணன். என் கேள்விகளும் கவிஞரின் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.
Suganya Gnanasoory
வணக்கம் தோழர் இந்தக் கவிதைகள் போர் இன்னும் தொடர்கிறது நாவலின் கதாபாத்திரங்களினூடாக ஈழப்போர் நிலவரங்களை, எனது அனுபவங்களை புனைந்தது. அவர்களுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இல்லை தோழர் அடிமைகள், அகதிகள் என்ற சொற்களைப்போல். தங்களின் மொழிபெயர்ப்பு எளிமையாகவும், நெருக்கமாகவும் இருக்கிறது. மிக்க நன்றிங்க தோழர்.
Anaamikaa Rishi
Suganya Gnanasooryபெயர்களுக்கான சரியான ஸ்பெல்லிங் தந்திருக்கிறேனா? உங்கள் சிறு குறிப்பை கவிதைக்கான என்னுடைய குறிப்பின் கீழ் தரலாமா?
Suganya Gnanasoory
Anaamikaa Rishi நிச்சயமாக தரலாம் தோழர் சரியாகவே எழுதியுள்ளீர்கள்



MUGIL NILA TAMIL

A POEM BY

MUGIL NILA TAMIL
 * கவிஞர் இந்த வரிகளை கவிதையாகத்தான் எழுதினாரா அல்லது உரைநடைப் பத்திகளாகவா என்று தெரிய வில்லை. உரைநடைக் கவிதை போன்ற கவித்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. மொழிபெயர்த்திருக் கிறேன்.


Translated into English By Latha Ramakrishnan(*First Draft)
122
Unable to bear the growing chill of Love protected and nurtured in refrigerator in a frozen state. Thinking of the words uttered just to prevent them from going waste, not having the place to store them, the heart would weep and sob. The congregation of fireflies radiance, the sound of footsteps with dry leaves getting crushed, as snake that had its prey and so being still not stirring nor shifting Nothingness has many an entrance. The formless shadows of the house recently shifted to. Memory-flowers all over the root of Time that has collected the breaths inhaled and exhaled so far inside the doors. With eyes never tiring the heart that keeps wandering –in which direction to divert it? O, can all that sown being confusion-confounded as to what is needed grow as corps?
Utmost needed , as the need of the hour, a lone shoulder to lean on with questions none.. A cup of hot tea to bring warmth to the fingers. For no void of mine language is the sorrow underlined – so I have known. This can also be taken to mean the pinnacle of fulfillment attained.
குளிர் சாதனப் பெட்டியில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் அன்பின் சில்லிடலை பொறுத்துக் கொள்ள தோதில்லை. வீணாகிப் போகுமென்றே உதிர்க்கும் சொற்களை தேக்கி வைக்க இடமற்று தேம்பும் இதயம். மின்மினி பூச்சிகளின் ஒளிக் கூடல், காய்ந்த சருகுகள் மிதிபடும் காலடிச் சத்தம், எங்கும் நகராத இரை விழுங்கிய பாம்பென வெறுமைகளுக்கு எத்தனையோ வாயில்கள்.
புதிதாய் குடிபெயர்ந்த வீட்டின் அரூப நிழல்கள், இதுவரை விடுத்த மூச்சுகளை தேக்கி கதவுக்குள் சேகரம் செய்திருக்கும் காலத்தின் வேரெங்கும் நினைவுப் பூக்கள். கண் அயர்வற்று எங்கும் நிலைக்காத மனதை எந்தப் பக்கம் திருப்பி விடுவது? என்ன தேவையென்ற தெளிவற்று விதைக்கும் யாவும் பயிராக கூடுமோ?!
மிகு தேவையாய் இருக்கிறது, கேள்விகளற்று, சாய்ந்து கொள்ள ஒற்றைத் தோள், விரல்களை சூடேற்ற ஆவி பறக்க ஒரு தேநீர். எனதெந்த வெறுமைக்கும் மொழி சோகமில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். இது நிறைவின் உச்சமென்றும் கணிக்கலாம்.
~முகில் நிலா தமிழ்

G.P.ELANGOVAN

 A POEM BY

G.P. ELANGOVAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Indeed, Life has become very simple.
Friends of yesterday
have turned foes today
Dreams of the day before
remembered not in this daytime
anymore
In the quiet of the well of night
none demeans none
Just as dreams of tank-fish
soon they disperse
As the tongue of the famished dog
with saliva sprouting
I go on loving this world
Love’s sorrow
Is just that you know

G P Elangovan

வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது
நேற்றைய நண்பர்கள்
இன்று எதிரிகளாக மாறிவிட்டார்கள்
நேற்றைய கனவுகள்
இன்றைய பகலில் நினைவு திரும்புவதில்லை
நள்ளிரவின் அமைதியில்
யாரும் யாரையும் அவமதிப்பதில்லை
தொட்டி மீன்களின் கனவுகளைப்போல் சற்றுநேரத்தில்
கலைந்துவிடுகின்றன
நான் ஒரு பசித்தநாயின் நாவினைப்போல் எச்சில் ஊற
இந்த உலகத்தை காதலித்துக்கொண்டிருக்கிறேன்
அன்பின் துயரம்
அதுதான்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS