INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

SAMAYAVEL KARUPPASAMY

 A POEM BY 

SAMAYAVEL KARUPPASAMY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Respected Mr.Anonymous
remains joyous in front of a
Television sans screen.
In order not to hear the’Patpadapat’ of
the chain of firecrackers
and the laments of failures
He searches for the ways and means of
removing the ears, in Google.
At the border of Ukraine
the number of balloonmen was reduced.
Candy Floss - ‘Panjumittaai’ - cart alone
would be allowed entry into Belarus.
Poets are aplenty in Kovai
In Kumari it is confusion-confounded.
On Sunday morn 4000 Victory-Carnivals
400 Book Launches
Respected Mr.Anonymous needs
a real good Tamil name.
Contact 000 000 000 +00
No charges.

Samayavel Karuppasamy

திருவாளர் அநாமதேயம்
திரையில்லாத தொலைக்காட்சி முன்
மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சரவெடிகளின் பட்படபடக்களை தோல்விப் புலம்பல்களை கேட்காமல் இருக்க
செவிகளைக் கழற்றி வைப்பது குறித்து கூகுளில் தேடுகிறார்.
உக்ரைன் எல்லையில்
பலூன்காரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது
பஞ்சு மிட்டாய் வண்டிகள் மட்டுமே
பெலாரஸ்ஸூக்குள் அனுமதிக்கப்படும்.
கோவையில் கவிகள் அதிகம்.
குமரியில் குழப்பம் அதிகம்
ஞாயிறு மாலையில் 4000 வெற்றிவிழாக்கள்
400 புத்தக வெளியீடுகள்
மிஸ்டர் அநாமதேயத்திற்கு
நல்லதொரு தமிழ்ப்பெயர் வேண்டும்.
000 000 000 +00 வில் தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லை.

சமயவேல் கருப்பசாமி


VELANAIYOOR RAJINTHAN

 A POEM BY

VELANAIYOOR RAJINTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WORD ACIDIC
Just as the sharp beak of a tiny bird
that pierces a sturdy tree so bitingly
reaches right up to the innermost heart
an acidic word
Causing upheaval in the mind
that was lying quietly
like a baby
the morbid word from out of blue
ridicules
It ruins all too nonchalantly
The tower of Love
Erected inch by inch
With no wastage whatsoever
That raw word
coming out of
beautiful appearances
peels of the very self
……………………………..
Disrupting there, the sleep of Buddha
under the Tree of Enlightenment
has just now come along the street
a Word acidic.

அமில வார்த்தை
வைர மரமொன்றைக் கொத்திக்குடையும்
சிறு பறவையின் கூரிய அலகுகளாய்
ஆழ் மனம் வரை
ஆழ ஊடுருவுகிறது
அமில வார்த்தை
தொட்டிலில் மழலையாய்
அமைதியாயிருக்கும்
சிந்தை குலைத்து
எகத்தாளமிடுகிறது
எதிர்பாராது வந்த அமில வார்த்தை
சிறுகச் சிறுகச் சேகரித்து
சிக்கனமாய்க் கட்டிவைத்த
அன்பின் சிகரத்தையும்
சிந்திக்காமல் சிதைத்துப்போகிறது
அழகழகான தோற்றத்துக்குள்ளிருந்தும்
வெளிப்பட்டு வரும்
அவ் அம்மண வார்த்தை
சுயத்தையே உரித்துப்போடுகிறது
..........................................................
அதோ அந்தப்
போதிமரத்துப் புத்தனின்
சயனத்தைக் கலைத்திருக்கிறது
இப்போது தெருவழி வந்த
ஓர் அமில வார்த்தை!

●வேலணையூர் ரஜிந்தன்

AASU SUBRAMANIAN

 A POEM BY

AASU SUBRAMANIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The courier –man comes along
carrying the package.
Searching in street after street
Going from house to house
Turning thoroughly fatigued
He asks, “Sir, where is your house?”
As he set out to search for the new address
The old one had disappeared.
Despite houses being many
and so also the streets
Where is the monitor that would
reveal its location?
What would have been that
which came in the post
The response of his love to be encashed.
On unpacking
It happened to be a wrist watch
still running.
The small hand and big hand keep hurrying
inside a circle.
In contemplation
the post weighing heavy
After handing over the post
the courier-man goes away.
The post that would be brought tomorrow also
must be borne of the same.
Prior to this
Announcing Death the email
Though not being agitated
Wonder why,
but Time now too
keeps on running without fail


தூதஞ்சலை
எடுத்து வருகிறார்
தெருத்தெருவாக
வீடு வீடாக
தேடி அலுத்திடவும்
சார், அவர் வீடெங்கே?
எனக் கேட்கிறார்
புதிய முகவரி தேடவும்
பழைய முகவரி
காணாமல் போயிருந்தது.
வீடுகள் பலவாயினும்
வீதிகள் பலவாயினும்
இருப்பை உணர்த்தும்
மானிடர் எங்கே?
அஞ்சலில் வந்தது
என்னவாய் இருக்கும்.
அவள் அன்பின்
கவிதை புத்தகமாக இருக்கலாம்
அவர் அன்பின்
பணவிடையாக இருக்கலாம்
பிரித்துப் பார்த்தால்,
ஒரு கைக்கடிகாரம்
ஓடிக்கொண்டுதானிருந்தது
சிறிய பெரிய
வினாடி முள்
ஒரு வட்டத்திற்குள்ளே விரைகிறது
யோசனையில்
அஞ்சல் கனக்க
காலம் ஒரு நிழலாக காலடியில்.
கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்
அஞ்சல்காரன்
நாளையும் கொண்டுவரும்
அஞ்சல் அவனாகத்தான்
இருக்கக்கூடும்.
இதற்குமுன் சாவை
அறிவித்த மின்னஞ்சல்
யாதொரு பதற்றம் இல்லையாயினும்
ஏனோ? இந்த நேரமும்
ஓடிக்கொண்டுதானிருக்கிறது.

ஆசு

IYYAPPA MADHAVAN

 A POEM BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
As the drops of blood splashing out of the heart of he
In the battlefront struck by the spear and falls dead
_ the heart.
Bereft of fondly caressing fingers
As a bird with broken wings
The heart writhes in pain unbearable.
As one forsaken
In midsea
struggling for life
with no boat around
the inner self remains
no voices heard from anywhere
as an animal on the throes of death
shivering in biting cold
this body keeps trembling on and on.
Sorrow alone prevails as
the sea surrounding on all sides
squeezing, suffocating
In world sans angels
life lays crushed under the feet of Satan.
All that the eyes see are trees with leaves withered and
Orphans abandoned.
Alas, He the merciful human
known as God, the Omnipresent
is nowhere to be seen.
Iyyappa Madhavan


போர்க்களத்தில் ஈட்டி பாய்ந்து இறப்பவனின் மார்பிலிருந்து பீறிட்டுச் சிதறும் இரத்த துளிகளைப்போல
மனமிருக்கிறது
வாஞ்சையோடு நீவிவிடும் விரல்களில்லாது
சிறகொடிந்த பறவையைப் போல
துடித்துப் போகிறது இதயம்
கடலின் நடுவே கைவிட்ட படகின்றி தத்தளிக்கும் ஓர் உயிர் போல
இருக்கிறது உள்ளம்
எங்கிருந்தும் எந்தக் குரல்களும்
வந்தபாடில்லை
கொடும் பனியில் நடுங்கிச் சாகும் ஒரு மிருகத்தைப் போல
நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது
இவ்வுடல்
துன்பமே நாற்பக்கம் சூழ்ந்த கடலைப் போல அழுத்திக்கொண்டிருக்கிறது
தேவதைகளில்லாத உலகில்
ஒரு சாத்தானின் காலடியில்
மிதிபட்டுக் கிடக்கிறது உயிர்
கண்ணில் படுவது இலையுதிர்த்த மரங்களும் கைவிடப்பட்ட அநாதைகளும்தான்
கடவுள் என்று சொல்லக்கூடிய கருணைமிக்க மனிதனை எங்குமே காணவில்லை.

அய்யப்ப மாதவன்

M.RISHAN SHAREEF

 A POEM BY

M.RISHAN SHAREEF

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE HOUSE WIDE AWAKE AT NIGHT




That evening hour
shrouding the agricultural field
where You harvest the yield
looked so beautiful
till that moment _
when the trail of your wife
who for the last time
bringing crimson-hued tea and a piece of cane sugar
and making you drink
turned frozen in gloom _
till that moment
prior to your committing suicide
While sowing the crops the sweet song
emanating out of thee
is still wandering all over those mountain slopes.
The sheep you took along for grazing
waited with their fleece shining radiantly
Not seeing for a long time your hands so strong
removing weeds
the land had turned dry.
In the well dug by our ancestors
not a drop of water left.
During those days when the earth would turn
dry , cracking
the village folks would go to the neighbouring villages
to break stones and earn a living
But you remained firm proudly claiming
agriculture to be your very being.
For the little girl sobbing for the father
nothing is known
While bringing to your hutment the pesticide
kept for sprinkling on the poisonous plants
Your wife also found nothing unusual in it.
During the sowing season the seeds you have
sprinkled on the slushy soil
had grown as debts.
The rain that poured out of season
had carried along all your expectations
in the flood
and immersed them in the river forever.
At dawn of that day when the first ray of Sun
fell on the open courtyard
the song that ceased to be
along with thee
never again sounded in your household.
That night which made everyone fast asleep
stayed wide awake for ever.


இரவு விழித்திருக்கும் வீடு
நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை
பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை
நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்
அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்
அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்
விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்
தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை
நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை
உன் குடிசைக்கு எடுத்து வருகையில்
மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை
விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்
கடன்களாய் முளைத்திருந்தன
உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று
ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை
வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த
அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்
எழவேயில்லை உன் வீட்டில்
எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு
விழித்திருந்தது என்றென்றும்

- எம்.ரிஷான் ஷெரீப்

PALAIVANA LANTHER

 A POEM BY

PALAIVANA LANTHER


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


When the world’s wrath
and vengeance multiply
brim and overflow
I would come alighting off the Western roof
Would redeem you from
your sins
your worries
I have no hands
Nor legs
Do you hear the sound of your first ever crime
That is the minute after my caution
Oh, the allegiance of the law of hunt in breach
Above everything
I would be in the semblance of
a doll that you have thrown
that you have broken
Aid me

பாலைவன லாந்தர்

உலகின் வன்மங்கள் பெருகிப் போகும் போது
மேற்கின் கூரையிலிருந்து நான் இறங்கி வருவேன்
உன் பாவங்களிலிருந்து
உன் கவலைகளிலிருந்து
உம்மை மீட்டெடுப்பேன்
எனக்கு கைகள் இல்லை
கால்களும் இல்லை
நீ முதன் முதலாக செய்த குற்றத்தின் ஓசை கேட்கிறதா
அது எனது எச்சரிக்கைக்கு பிந்தைய நிமிடம்
கையவிழ்க்கப்பட்ட வேட்டையின் விசுவாசமே
எல்லாவற்றிற்கும் முன்னமாக
நீ தூக்கியெறிந்த
நீ உடைத்தெறிந்த
நீ தொலைத்து விட்ட
ஒரு
பொம்மையின் சாயலில் இருப்பேன்
எனை ஆதரி..




INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS