INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

MISBAH UL HAQ'S POEMS(2)

TWO POEMS BY 
MISBAH UL HAQ

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

How to pervade all over Time……
Being left alone like the light
of faraway night glowing thinly
_ the Time keeps lamenting
as the ‘Meesan’ of the tomb
words alone are left with me.
Not like the seclusion of the womb
Not like the seclusion of the tomb
the seclusion of this period….
Despite having people around
and laughter and voices resound
despite having our own someone
the loneliness of this Time
stays on.
.
Misbah Ul Haq


காலத்தின் மீது
எப்படி வியாபித்திருப்பது...
விரிந்திருக்கும் நகரத்தின்
தொலைதூர இரவில் ஒடுங்கி ஒளிரும்
விளக்கை போல தனித்துவிடுவதை
புலம்பிக் கொண்டிருக்கிறது காலம்...
கல்லறையின் மீஸானைப் போல
வார்த்தைகள் மட்டும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன..
கருவறையின் தனிமைப் போல் இல்லை,
கல்லறையின் தனிமைபோலும் இல்லை,
இந்த காலத்தின் தனிமை...
மனிதர்கள் சூழ்ந்திருப்பதால்,
சிரிப்பும், குரல்களும் ஆர்பரிப்பதால்,
நமக்கென யாரோ இருப்பதால்
இந்த காலத்தின் தனிமை விலகிவிடுவதில்லை.

2.
All I have
is a lone ferry…
How to haul a river
and carry.
But, a wayfarer’s destination is
not the sea.
Yet throughout his course
a river of course.
Misbah Ul Haq


என்னிடம் இருப்பதோ
ஒற்றைப் படகு...
எப்படி ஒரு நதியை
அள்ளிச் செல்வது...
ஒரு வழிப்போக்கனின்
முடிவிடம் கடல் அல்லவே..
ஆனாலும் அவன் வழியெங்கும்
ஒரு நதி...

MOHAMED ATHEEK-SOLAIKILI'S POEM

A POEM BY 
MOHAMED ATHEEK-SOLAIKILI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE NEEDLE

(From the series ‘Songs of an other Traveller)

He who speaks the Truth becomes isolated
As a moon, as a Sun
He too becomes those in the society
_ as two moons
Two suns
A planet exclusive for him comes into being
It is there he resides.
Those with lies as their close allies
eyes him suspiciously.
He who speaks the Truth
turns into the needle getting into their eyes
If pricking in the feet, can pluck it and get rid of it
But pricked by the needle in the eye, they suffer
Unaware of him they dissect and analyze him
- those researchers of the city of lies.
They arrest all that is good to him.
He who speaks the Truth remains unperturbed.
Not slipping into the filth that overflows,
He would move on, straight and focussed.
Would crouch
Crouching is not for stealing
It is for living truthfully too
It is stealthily crouching and crawling
that the Moon comes
The same way rises the sun.
He is the wagon steered firm by Truth.
His passage is made of a thin straightline.
There would be joy in his pathway
Truth sits on his shoulder and lifts him up
He would stand tall and erect anywhere and everywhere.
Though turning aged, he doesn't bend
For him Truth creates an exclusive wind
where dust has no entry point.
இன்னொரு பயணியின் பாடல்கள் -68
ஊசி
-----------------
மெய்யுரைப்பவன் தனிமைப்படுகிறான்
ஒரு நிலவுபோல ஒரு சூரியன்போல
சமுகத்தில் அவனும் ஆகிவிடுகிறான்
இரண்டு நிலவாக
இரண்டு சூரியனாக
அவனுக்கென்று ஒரு கிரகம் உருவாகிவிடுகிறது
அவன் அங்குதான் வாழ்கிறான்
அவனை ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள்
பொய்யுடன் புரள்பவர்கள்
மெய்யுரைப்பவன் இவர்களின் கண்களில் ஏறும்
ஊசியாகிறான்
காலில் குத்தினால் இழுத்துப் பிடுங்கலாம்
கண்களில் குத்துவதால் அவதிப்படுகிறார்கள்
அவனுக்குத் தெரியாமல் அவனை
ஆராய்ச்சி செய்கிறார்கள்
பொய்யூரின் விஞ்ஞானிகள்
அவன் நலன்களைப் பிடித்து அடைக்கிறார்கள்
மெய்யுரைப்பவன் அலட்டுவதில்லை
அவனது நூலை பிடித்துக்கொண்டு கொப்பளிக்கும்
ஊத்தைக்குள் கால் விட்டுக்கொள்ளாமல்
மெல்ல நகருவான்
பதுங்குவான்
பதுங்குவது திருட மட்டுமல்ல
உண்மையாக வாழவும்
பதுங்கிப் பதுங்கியல்லவா
நிலவு வருகிறது
பதுங்கிப் பதுங்கியல்லவா
சூரியன் உதிக்கிறது
அவன் அவனது
நூலில் ஓடும் வண்டியே
ஒரு நூலாலானது
அவனது பாதை
அவனது பாதையில் சந்தோஷம் இருக்கும்
அவனது தோளில் உண்மை இருந்து
அவனைத் தூக்கிவிடுகிறது
அவன் எங்கும் நிமிர்ந்து நிற்பான்
வயதானாலும் அவனுக்கு கூன் தட்டுவதில்லை
அவனுக்கு ஒரு காற்றை உண்மை செய்கிறது
உண்மை செய்த காற்றில் தூசு கலப்பதில்லை

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN'S POEM

A POEM BY 
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN



           Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
We without wings…..
For staying a while
You ask for an exclusive nest….
Bargaining the fruits
with the birds wandering aimlessly
in the Temple street
a nest is arranged.
With the expertise of a plane
steering an emergency landing
I reach you there.
With your finger-tips you cast a spell
on my heart
that wants to depart…
With the coolness of time immemorial
the day begins….
Seems like
the tips of tongues were in the eyes that day….
A wordless penance
or the rehearsal of a mono-act play
we had carried out in our eyes alone.
With birds knocking at our doors
that day had dawned….
While casting off the blanket
and leaving
you take along
a lone strand of feather
some bird had dried long ago
and free of cost
my
vacant heart.
Thirugnanasampanthan Lalithakopan
July 3 at 2:13 PM •
சிறகுகளற்ற நாம்.....
சற்று நேரம் தரித்திருக்க
தனித்த ஒரு கூட்டை கேட்கிறாய்....
கோவில் மாடத்து பகுதியில்
வெட்டியாய் திரிந்த பறவைகளிடம்
பழங்களை பேரம் பேசியதில்
படிகிறது ஒரு கூடு....
அவசரமாய் தரையிறங்கும் ஒரு
விமானத்தின் லாவகத்துடன் உன்னை
கொண்டு சேர்க்கிறேன்....
கிளம்ப விரும்பும்
என் மனசை உன் நுனி விரல்களினால்
வசியம் செய்கிறாய்....
யுகாந்தரத்து
குளிர்மையுடன் அந்த நாள் தொடங்குகிறது.....
நுனிநாக்குகள் அன்று விழிகளில்
இருந்தன போலும்....
ஒரு ஊமைத்தவத்தை
அல்லது ஓரங்க நாடகம் ஒன்றின்
ஒத்திகையினை விழிகளில் மட்டுமே
நடாத்தியிருந்தோம்......
பறவைகளின் கதவு தட்டுதலில் அன்றைய
தினம் விடிந்திருந்தது....
போர்வை நீக்கி
பிரிந்து செல்கையில் நீ கொண்டு செல்கிறாய்
என்றோ ஒரு பறவை உலர்த்திய
ஒற்றை சிறகையும்
இனாமாக
எனது
வெற்று மனசையும்....

TAMIL MANAVALAN'S POEMS(2)

TWO POEMS BY 
TAMIL MANAVALAN
Transalted into English by Latha Ramakrishnan(*First Draft)

1. BACK TO WISDOM
Remaining skeptical in the beginning

Wonder when the thought ‘why not try it’
got into me.

That it could be because the new model
Nirshini enticed my heart
I could arrive at only at last.
How can one’s pale brown tinge
change into pure golden
in a matter of seven days
Could it be the trick of ‘photo shop’?
Though I contemplated on these lines
‘After all 70 rupees, why not try’
think I and do apply
taking selfie to bear testimony.
Everyday
I look at my face in the mirror
With cream applied
Turning left right front back
in the manner of a warrior
examining his sword taken out of its sheath
stretching it slowly in front
and twisting and turning it
The pale brown colour has changed into golden hue on the
Sacred Seventh Day
in the selfie only
with shade added daily.
In order to avoid the disappointment
of realizing that it is not the truth,
wiping the mirror many a time
and looking at myself in natural colour
erasing my earlier image
that I had made fair and fairer on a daily basis
I take a new one
smiling heartily.
Tamil Manavalan

நினைவு திரும்புதல்
**********************

தொடக்கத்தில் நம்பாமல் தானிருந்து
எப்போது முயற்சி செய்து பார்க்கலாமெனத்
தோன்றியதெனத் தெரியவில்லை
புதியதாய் மாடலிங் செய்ய வந்திருக்கும்
நிர்ஷினியைப் பிடித்துப்
போனதாலிருக்கலாம் என்பது
கடைசியாகவே கணிக்க முடிந்தது
ஏழு நாட்களில் எப்படித்தான்
மாநிறம் பொன்னிறமாய் மாறுகிறதோ
'போட்டோ ஷாப்', வேலையென நினைத்த போதிலும்
எழுபது ரூபாய் தானேவென
பூசத்தொடங்கிய வேளை
சாட்சியத்துக்காக எடுத்துக் கொள்கிறேன்
ஒரு செல்ஃபி.
ஒவ்வொரு நாளும் கிரீம்
பூசிக்கொண்ட முகத்தை
உறை விட்டகற்றிய வாளினை
முன் நீட்டி மெல்ல மெல்லத் திருப்பிப்
பார்க்கும் போர் வீரனின்
பரிசோதனைக்கொப்பாகத்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன்
கண்ணாடியின் முன்னம்
என்னை நானே.
மாநிறம் பொன்னிறமாய் மாறியிருந்தது
புனித ஏழாம் நாள்
தினம் தினம் கூட்டிய வண்ணத்தில்
செல்ஃபி மட்டும்
உண்மையதுவல்லவெனும் ஏமாற்றம் தவிர்க்க வேண்டி
தன்னிறம் மாறாத நிலையில்
கண்ணாடியைத் துடைத்துத் துடைத்து
பிம்பம் தரிசித்து
முன்னர் எடுத்து நித்தம் கொஞ்சம்
வெளுப்பேற்றிய படத்தை அழித்துவிட்டு
புதிய படமொன்றை எடுக்கிறேன்
பூரணமாய்ப் புன்னகைத்தபடி.
--தமிழ்மணவாளன்

2.THE PHASE OF FACEMASK
Hiding inside the facemask
the sky so void
is indeed massive.
The carbon-dioxide of the exhaled breath
spreads on and on
and compressed as clouds,
all over the surface of the mountain peak
it bangs against _
Heat would sprout.
Alighting into the valley
Not changing into drizzle but remaining moist
The birds flying in clusters through that gentle chill
knows well
the soft chill of moisture
and its soothing warmth.
Tamil Manavalan

****************
முகக்கவசத்தின்
உள்ளே ஒளிந்து கொள்ளும்
வெறிச்சிட்ட வானம் மிகப்பெரியது.
சுவாசத்தின் வெளியேகும்
கரியமிலவாயு பரவிப் பரவி
மேகமாய் அழுத்தம் கொண்டு
மோதுமந்த
மலைமுகட்டின் தரையெலாம்
வெப்பம் பூக்கும்.
பள்ளத்தாக்கில் இறங்கி
தூறலாய் மாறாமல் ஈரமாயாகும்
மென் குளிரில்
பறந்து செல்லுமப் பறவைக்கூட்டம்
அறிந்திருக்கிறது...
ஈரத்தின் மென்குளிரையும்
இதமான இளஞ்சூட்டையும்.

----தமிழ்மணவாளன்

MULLAI AMUTHAN'S POEM

A POEM BY 
MULLAI AMUTHAN


Translated into English by Latha Ramakrishnan

Was never enamoured by kisses.
You would’ve collected
including those given by me
They were indeed fascinating for the time being
Affection Fondness, Love, Lust _
Being all these and more
those that came my way
wading through Life
I had lost count of.
Pardon me.
Only at dawn today
the kisses have reached ashore.
Gave the news.
In your savings stolen
these too?
Excepting those dead and gone
the remaining ones
are alive and kicking they said.
Someone threw away one of them violently.
Of those scattered on the sky
my kisses bubbled and got into my heart.
At least from now onward I would preserve,
my fairy-friend
the kisses of reminiscence you’ve given _
now, even in your absence.....

Mullai Amuthan

முத்தங்கள் பற்றிய ஆவல் இருந்ததில்லை.
நீ
சேகரித்துவைத்திருக்கலாம்..
நான் தந்தவைகள் உட்பட..
அந்தந்தப் பொழுதுகளுக்காய்
சுவாரஸ்யம் நிறைந்தவைகள்தாம்.
அவற்றுள்
அன்பு,பாசம்,காதல்,காமம்
எல்லாமாகியும்
வந்து சேர்ந்தவற்றை
போகிற போக்கில்
கணக்கெடுக்காமலேயே விட்டுவிட்டேன்.
மன்னித்தருள்க.
இன்று..அதிகாலையில் தான்..
முத்தங்கள் கரைசேர்ந்தன.
செய்தி சொல்லியது.
களவு போன
உன் சேகரங்களில் இவையும் தானா?
இறந்தவைகள் போக மீதமாய்
உள்ளவைகள்
உயிர்ப்புடன் இருப்பதாய்ச் சொன்னார்கள்.
யாரோ ஒருவன்
அவற்றுள் ஒன்றை
வீசி எறிந்தான்..
வானத்தில்
தெறித்தவைகளில்
என் முத்தங்கள்
கொப்பளித்து மனதுள் இறங்கியது..
எனியாவது சேகரிப்பேன் தோழியே ..
நீ தந்த நினைவுமுத்தங்களை
நீ இல்லாத இந்தவேளையிலும்...

THEEPIKA THEEPA'S POEMS(2)

TWO POEMS BY 
THEEPIKA

Translated into English by Latha Ramakrishnan

1. BEING AWAY….

In a desolate night
With eyes wide awake
I was intensely watching
the eyes of the lonely moon
My place came into view
In the fields where buffaloes lie
                         the white cranes feasting on their backs
came into view.
The narrow pathway with the canopy of ‘Arugampul’
came into view.
The earthworm creeping in it
with its trail drawn behind
came into view
The wooden gate with the crow poop
all dried up
came into view
The tail of the cat lying crouched
in the rice-flour roasted oven’s ashes
came into view
The mossy flowers at the well-side
came into view
The house of the squirrel
dwelling in the mango tree
came into view
The clips hanging all alone on the clothline
came into view
The half of the all too ripe guava
after the squirrel had nibbled
came into view
A few chrysanthemums
came into view
The cracked feet of father lying there coughing
came into view
In the shrunken face of mother
glowing in moonlight
the semblance of a goddess
came into view.
After that nothing could be viewed
beyond my tears unleashed.

பிரிவுக்கு தெரிந்தது
----------------------------
யாருமற்றஇரவில்
தனித்திருக்கும் நிலவின் கண்களை
ஒரு தூக்கம் துரத்தப்பட்ட விழிகளோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னூர் தெரிந்தது.
எருமைகள் படுத்திருக்கும் வயல்களில்
முதுகுகளில் விருந்துண்டு கொண்டிருந்த
வெள்ளைக் கொக்குகள் தெரிந்தன.
அறுகம்புல் படங்கு விரித்திருந்த
ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அதில் தடயமிழுத்துப் போய்க் கொண்டிருந்த
நாக்கிளிப்புளு தெரிந்தது.
காகத்தின் எச்சத்தடம் காய்ந்திருந்த
வீட்டின் மரப்படலை தெரிந்தது.
அரிசிமா வறுத்த அடுப்படிச் சாம்பலுக்குள்
சுருண்டு கிடந்த பூனையின் வால் தெரிந்தது.
கிணற்றடிப் பாசிப்பூக்கள் தெரிந்தன.
மாமரத்தில் குடியிருந்த அணிலின் வீடு தெரிந்தது.
கொடியில் தனிமையாய் தொங்கிய
உடுப்புக் கொழுவிகள் தெரிந்தன.
அணிலரித்து மிச்சம் விட்ட
பழுத்த கொய்யாப்பழப் பாதி தெரிந்தது.
ஒன்றிரெண்டு செவ்வந்திப் பூக்கள் தெரிந்தன.
இருமிக் கொண்டு படுத்திருந்த
அப்பாவின் பித்தை வெடித்த கால்கள் தெரிந்தன.
நிலவு விழுந்து பளபளத்த
அம்மாவின் சுருங்கிய முகத்தில்
ஒரு தெய்வத்தின் சாயல் தெரிந்தது.
பிறகெதுவும் தெரியவில்லை.
என் கண்ணீரைத் தாண்டி.
தீபிகா


2.LIVING IN THE HOUSE
The time of discoveries
these lockdown days are.
Wife’s gray hair
Second daughter suddenly grown taller
Son’s cat-fir sprouting upper lip
Dust-coated electric light
Thinned down childhood scar
Screeching song of the bedroom door
Window screen with its fold loosened
Non-stick pan gone rotten
Toddler’s scribbling on the walls
Old photographs without the bulging belly
Timeworn letters of kin no more
Neo-poem written for old love
In this house where I used to come and go
Only now I am living
for the first time.

வீட்டில் வாழ்வது
----------------------------
கண்டு பிடிப்புக்களின் காலமாகின்றன
இந்த வீடடை நாட்கள்.
மனைவியின் நரை முடிகள்
திடீரென்று நெடுத்து விட்ட சின்னவள்
பூனைச் சிகையரும்பும் மகனின் மேலுதடு
தூசு பூத்திருக்கும் மின் விளக்கு
தடம் சிறுத்திருக்கிற பாலகக் காயம்
படுக்கையறைக் கதவின் பிணைச்சற் பாட்டு
கட்டுக் கழன்றிருக்கிற சாளர மறைப்பு
எடுபட்டுப் போயிருக்கிற நொண் ஸ்ரிக் சட்டி
சுவர்களில் ஊர்ந்திருக்கிற மழலைக் கீறல்கள்.
தொப்பையற்ற பழைய புகைப்படங்கள்
இறந்த சொந்தங்களின் பழைய கடிதங்கள்.
பழைய காதலிக்கெழுதிய புதுக்கவிதை.
வருவதும் போவதுமாய்
இருந்திருக்கிற இந்த வீட்டில்
இப்போது தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
முதன்முதலாக.
--- xxx ---
தீபிகா

HAMEED U NIZAR'S POEMS(3)

THREE POEMS BY 
HAMEED U NIZAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. THIS POEM….
The concrete demons that flourished

devouring the greenery
have grown sky high…

With the fragrance of varieties of jasmine
that were sent as messengers
to bring the breeze
the stench of all kinds of things
combining…..
The gleaming streams where fishes swam
drying up
turning into lice-swarming hair
so coarse, uncared
Just as the nightmare that assaulted me one night
my place spreads out as
a miserable desert…
For the memories about my place
so deep-rooted inside me
not to be buried along with me
let this poem at least
stay alive in the coming days.
Hameed U Nizar

++++ இந்தக் கவிதை ++++
பசுமையை தின்று வளர்ந்த
கொன்க்ரீட் பூதங்கள்
வானளாவ வளர்ந்து ...
காற்றுக்குத் தூதனுப்பி
காற்றை வரவழைத்த
மல்லிகை முல்லை மணங்களுடன்
வந்தான் வரத்தான் மணங்களெல்லாம்
ஒன்றினைந்து ...
மீன்கள் நீந்திய
மினுமினுப்பான நீரோடைகள்
தூர்ந்து போய்
பேன்கள் வாழும் கூந்தல்களாய்
கரடு முரடாகி ...
ஒரு நாள் இரவு
நான் கண்ட
பயங்கரக் கனவு போல
விரிகிறது எனது ஊர்
பாலைவனமாகி ...
என்னில் புதைந்த
எங்கள் ஊர் நினைவுகள்
என்னுடன்
மண்ணில் புதைந்து போகாதிருக்க
இந்தக் கவிதையாவது
இனி ... இருக்கட்டும்
உ . நிசார்
ஒரே பூமியில் நானும் நீயும் -- 


2. INFRINGEMENT
A bamboo grove flourishing tall and dense
stood there elegantly.
Being there with leaves and branches widespread
it restrained the strains of Music that were inherent
in all its swings and moves
contained them within
keeping them locked there
so preserving safeguarding
dreamt of donating them all to an artist
who makes musical instruments.
With its dream not turning true
a carpenter who came there
wrecking the bamboo grove
With the ensuing fire sparks from his knife
scattering around
the bamboo grove set fire
unto its own self
and committed suicide.
Hameed U Nizar
J
++++++ உரிமை மீறல் ++++++
ஓங்கி வளர்ந்த
மூங்கில் காடொன்று
ஒய்யாரமாய் நின்றது
இலை விரித்து
கிளை பரப்பி நின்ற
அதன் ...
ஒவ்வொரு அசைவுடனும்
பிறந்த இசையை
அது ... தனக்குள்
அடக்கி ... ஒடுக்கி ... பூட்டி ...
பாதுகாத்து ... அவற்றை
இசைக் கருவிகள் செய்யும்
ஒரு கலைஞனுக்கு
தானம் வழங்க
கனாக் கண்டது
அது கண்ட கனவு
நனவாகாத நிலையில்
அங்கு வந்த தச்சனொருவன்
மூங்கில் காட்டை
சம்ஹாரம் செய்ய
அவனின் ...
கத்தியில் பட்டுத் தெறித்த
தீப்பொறிகளால்
மூங்கில் காடு
தனக்குத் தானே
தீ மூட்டி
தற்கொலை செய்து கொண்டது.

3. THE FORTRESS
I enter into a garden.
Wherever I see
roses aplenty blooming
with fragrance enchanting.
Buzzing beetles coming there
savour the honey sprouting in the flowers
and burst into a colourful dance.
In that grove that beautifies Beauty
Spring swings.
Feeling elated
I look through the cluster of flowers
A thorn
comes into view
pricking my eye.
If this thorn too were bloomed as a flower
How much more lovely this garden would be
- think I
And the thorn replies:
Though I am not beautiful
I am endowed with strength.
The flowers would wither and fall
But I will remain.
It is my strength
that safeguards these flowers
as a fortress.
Hameed U Nizar
June 24 at 6:56 AM •

+++++++ அரண் +++++++
சோலையொன்றுக்குள்
நான் நுழைகிறேன்
பார்த்த புறமெல்லாம்
உரோசாப் பூக்கள் பூத்து
மணம் கமழ
ரீங்காரமிடும் வண்டுகள்
அங்கே வந்து
பூக்களில் சுரந்த தேனை
உண்டு ... சுவைத்த போதையில்
வண்ண நடனம் ஆடுகின்றன
அழகை அழகு செய்யும்
அந்தச் சோலைக்குள்
வசந்தம் ஊஞ்சலாடுகிறது
எனதுள்ளம் குதூகலிக்க
நான் ...
மலர்களிடையே
பார்வையை நுழைக்கிறேன்
அப்போது ... ஒரு முள்
என் பார்வையில்
குத்தி நின்றது
இந்த முள்ளும்
ஒரு பூவாகப் பூத்திருந்தால்
இந்தச் சோலை
இன்னும் ...
அழகாக இருக்கும் ... என்
நான் நினைக்க
முள் சொல்கிறது
நான் ...
அழகு இல்லாவிடினும்
என்னில் வலிமை இருக்கிறது
பூக்கள் உதிர்ந்தாலும்
நான் உதிர மாட்டேன்
பூக்களுக்கு ...
எனது வலிமைதான்
அரணாக நிற்கிறது.
உ . நிசார்


MALINI MALA'S POEM(1)



A POEM BY 
MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Feeling suffocated.
The burden of masks worn on my countenance
by all and sundry
suiting their whims and fancies
weigh me down
with no way to raise my head
Struggling to breathe
deciding
not to bear with it anymore
I shed one by one
all those choking me and crushing me
as ill-sized attires of my face
In the wind that -
much like the breeze
caressing the serpentine wounded
and on the throes of death -
fans the face freed from
all sorts of sultry shrouds
I resurrect myself.
At this time when I free myself
from all kinds of inanimate Identities
and anxieties
such as
Possession
Prerogative
I feel the lightness of my soul at ease
much like the nudity of newborn baby.
Even now
all that I pray _
Please don’t allow anybody to approach me
with some mask or other.
Otherwise, to appease my soul’s wail
I would have no option left except
tearing off the face and throwing it away.
Malini Mala

மூச்சுத்திணறுகிறது.
அவரவர் வசதிக்கேற்ப
என் முகத்தில்
அணிவித்து வைத்த
முகமூடிகளின் பாரம்
தலையை நிமிர்த்த முடியாது
கீழ் நோக்கியழுத்துகிறது.
சுவாசக்காற்றுக்காய்
அல்லாடும் நிலையில்
இனியும் பொறுப்பதற்கில்லை.
என் முகத்தின்
அளவற்ற ஆடையென
இறுக்கிப் புழுங்கும்
அவற்றை
ஒவ்வொன்றாக
உதிர்க்கின்றேன்.
அடிபட்டு
கூற்றுயிரான சர்ப்பத்தின்
உடலைத்தீண்டும்
தென்றலென
மூடிகளின் இறுக்கமகன்ற
முகத்தில்
விசுறும் காற்றில்
என்னை
உயிர்ப்பிக்கின்றேன்.
உடமை என்பதாகவும்
உரிமை என்பதாகவும்
ஜடப்பொருளொன்றினையொத்த
அடையாளப்படுத்தல்களும்

அழுத்தங்களுமான
அனைத்திலுமிருந்தும்
என்னை உதிர்த்துக் கொள்ளும்
இந்நேரம்
புதிதாய் ஜனிக்கும் குழந்தையின்
நிர்வாணம் போல்
இயல்பாக இருக்கும்
என் ஆத்மாவின்
பாரமின்மையை
உணர்கிறேன்..
இப்போதும் கூட
என் வேண்டுதலெல்லாம்,
எவராவது
ஏதாவதொரு முகமூடியுடன்
என்னை நெருங்கிவிடாதீர்கள்.
பின்
என் ஆத்ம ஓலத்தை
ஆசுவாசப்படுத்த
முகத்தைப் பிடுங்கி
எறிவதல்லால்
வேறொன்றும் என்னால்
ஆகாதென்றாகி விடும்.

SHANMUGAM SUBRAMANIAM'S POEMS(3)

THREE POEMS BY 
SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Spending my time in the company of my own self
has become easy now.
Also, the feeling of contentment that nothing is wasted
is not in any way consequent.

The reason
for not feeling like looking every now and then
at the palms
shared with none could be
not fixedly looking at anybody.
Feeling contended
that even while savouring the hours
of being seated in the chair
rocking to and fro,
utmost
the boundless spinning of the mind
inside the boundaries of the room
would never leave the body
With this content perfect
without contemplating so much
let’s continue as such.
Shanmugam Subramaniam

சுலபமானதாக ஆகிவிட்டது
என்நேரத்தை என்னுடேனே செலவழிப்பது
எதுவும் வீணாகவில்லை என்ற
மனநிறைவும் கிட்டவில்லை
யாருடனும் பகிர்ந்து கொள்ளாமலிருக்கும்
உள்ளங்கைகளை அவ்வப்போது பார்த்துக் கொள்ளத்
தோணாமல் போனதற்கு வெறித்து யாரையும் பார்க்காதிருப்பதும் காரணமாக இருக்கலாம்
முன்பின் அசைவாடும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாழிகைகளின் முழுமையை அனுபவிக்கும் போதும்
அறையின் வரையறைக்குள் இடம்பெறும்
வரம்பற்ற மனச்சுழற்சி மட்டும்
உடல்நீங்காதென்ற நிறைவுடன்
அதீதமாய்ச் சிந்தியாமல் தொடரலாம்
- எஸ்.சண்முகம் -

2.
The voices of more than one remain with me, I feel
In each one of them the respective face is engraved inside.
Should count how many numbers are with faces
in my mobile
In all those calls
the anticipation of the melting heart
when those having exclusive ringtones sound
I collect and store for late night
For the cool touch of an unexpected call
at odd hour
though the hour of switching it off has arrived
the fingers without pressing hard on the switch
softly caresses it and slips away.
Just as the rare enchantment of
those few semi-green leaves
remaining in the heap of withered ones
For me too
there are some happy countenances.
With the string of disappointment severing
one of them flashes
and the touch-screen becomes my Sky.
Shanmugam Subramaniam

ஒன்றிற்கும் மேற்பட்டோரின் குரல்கள்
உடனிருப்பதாகவே உணர்கிறேன்
ஒவ்வொன்றிலும் அவரவரது முகங்கள் உள்ளுறைந்திருக்கின்றன
கைபேசியில் முகங்களுடன் கூடிய எண்கள்
எத்தனை உள்ளன என்று எண்ண வேண்டும்
அத்தனை அழைப்புகளில்
பிரத்யேக அழைப்பொலி உள்ளவை ஒலிக்கையில்
நெகிழும் உள்ளத்தின் அவாவினைப்
பின்னிரவிற்கானதாய் தேக்கிச் சேமிக்கிறேன்
எதிர்பாரா நேரத்து அழைப்பொன்றின் சில்லிடலுக்காக
அன்றாடம் கைபேசியை அணைத்துவிடும் நேரமானாலும்
விரல்கள் ஸ்விட்சில் அழுத்தமாய்ப் பதியாமல்
வருடி விலகுகின்றன
உதிரிலைகளின் குவியலில் விடுபட்டிருக்கும்
ஓரிரு அரைப்பச்சை இலைகளின் அரிய வசீகரம்போல்
எனக்கும் சில மகிழ்முகங்கள் இருக்கவே செய்கின்றன
ஏமாற்றத்தின் இழையறுபட
அவைகளில் ஒன்று மின்னி
என் வானாகிறது தொடுதிரை.
- எஸ்.சண்முகம் -


3.
There might be an answer applicable to all queries
But words befitting the one sans queries,
I have none.
How to go on
with a heart that halts nowhere but moves on
The concentration I had
in watering the flower-pot in the terrace
was lacking in watching the hue of the flower in it.
That they were slightly drooping
I chose not to notice.
After alighting
the same flower’s shrunken petal-tips
straighten once again.
The table cloth
and the books on it
being the symbol of my daily disorderliness
Hesitating to leave the flower in hand
by their side
once again climbing the stairs
after placing it in the flower-pot’s
watery sand-circle
and observing it keenly
Soon after leaving the place and returning
should clean the table
and place a flower in that
tomorrow.
Shanmugam Subramaniam
June 28 at 10:39 PM •
எல்லாவற்றிற்குமான பதில் இருக்கலாம்
ஆனால் கேள்விகளற்றவனுக்கானச் சொற்களென்று ஏதுமில்லை என்வசம்
ஓரிடத்தில் நில்லாது பெயர்ந்து செல்லும்
உளத்துடன் எவ்வண்னம் தொடர்வேன்
மாடியிலுள்ள பூந்தொட்டியில் நீரூற்றுவதில்
உள்ள கவனம்
அதிலுள்ள மலரின் வண்ணத்தில் பதியவில்லை
லேசாக வதங்கியிருப்பதையும்கூட
இப்போதைக்கு பொருட்படுத்தாதிருக்கிறேன்
இறங்கி வந்தபின்
அதே மலரின் மடல்விளிம்புகள்
மீள்கின்றன
மேசையின் மேல்விரிப்பும்
அதன்மேல் கிடக்கும் புத்தகங்களும்
எனது அன்றாட ஒழுங்கின்மையின் படிமமாயிருக்க
கரங்களிலுள்ள மலரை
இவற்றுடன் வைக்கத் தயங்கியபடியே
மீண்டும் மாடியேறி
பூந்தொட்டியின் நீர்கோர்த்த மணல்வட்டத்தினில்
வைத்துவிட்டு
அதையே உன்னித்த பின்னர்
அவ்விடம் நீங்கி திரும்பியதும்
மேசையிலுள்ள ஒழுங்கின்மையை
நிவர்த்தி செய்துவிட்டு
நாளையொரு மலரை
அதில் வைக்க வேண்டும்.
- எஸ்.சண்முகம் -

SUGANYA GNANASOORY'S POEM

A POEM BY 
SUGANYA GNANASOORY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


DAWN DISPLACED

Each and every dawn
keeps on dawning days
on and on
We keep moving towards
some point unknown
for those moments including
that burst as soap bubble
A terrible sorrow of
having thrust upon the heads of
generations
a burden unbearable
fills and swells
as deadly venom
not moving to any side!
Without the sunrise
of our life turned diasporic
with reasons known and unknown,
being inscribed
dawn goes on
dawning dawns.

SIVA MANI'S POEMS(2)

TWO POEMS BY 
SIVA MANI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. REMEMBERING MY FATHER
On the passage I crawled
You were the floor.
Along the way I walked
You were the flower.
During the times I broke down
You were the dam containing..
At the very instant of my falling
You swelled as Hope unfailing.
In course of my growth
You were sacrifice monumental;
In my ascent
The ladder, you were;
In the world I perceive
You are the Almighty;
Supremely selfless
stupendously benevolent beings
called Fathers
are there forever
in every nook and corner.

Siva Mani
June 21 at 9:55 PM •
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
**************************************************
நான்
தவழ்ந்த பாதையில்
தரையாய் நீ
நான்
நடந்த திசையில்
மலராய் நீ
நான்
உடைந்த நேரத்தில்
அணையாய் நீ
நான்
விழுந்த நொடியில்
நம்பிக்கையாய் நீ
நான்
வளர்ந்த வழியில்
தியாகமாய் நீ
நான்
உயர்ந்த இடத்தில்
ஏணியாய் நீ
நான்
பார்த்த உலகத்தில்
கடவுளாய் நீ
அப்பா என்ற சீதக்காதிகள்
என்றும்
தூணிலும் துரும்பிலும்


2.HAPPY BIRTHDAY RAJA SIR!

In your land
there is Full Moon even during day
In its womb that gives hues myriad
and lends beauty unparalleled
you are the embryo butterfly.
In its radiance
You
and it breathing you
are but one, not two.
Even when vapourizing
Thee, the Chanakya
merging into the Full Moon
The musical miracles that you
and that floating and mingling in Music
cause to happen
are riddles ravelled by none.
The full moon feeling rapturous
in your Sanctuary
is indeed twice-blessed, so lucky!
You are not stray flowers
but, never- fading flowers so rare;
forever on par with the full moon
and more.

June 20 at 10:07 AM •
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா சார்
**************************************************************
உன் தேசத்தில்
பகலிலும் பௌணர்மி
வண்ணம் தந்து தந்து
வனப்பாக்கிடும்
அதன் கருவறையில்
பனிக்குடத்து
பட்டாம்பூச்சி நீ
அதன் வெளிச்சத்தில்
நீயும்
உன் சுவாசம் சுமந்த
அதுவும் ஓருயிரே
நீராவியாய் போனாலும்
பௌர்ணமியிடமே
சங்கமிக்கும்
சாணக்கியன் நீ
நீயும் அதுவும்
இசையில் மிதந்து கலந்து
செய்யும் நவரசங்கள்
யாருக்கும்
புரியாத புதிர்
உன் ரசனை சரணாலயத்தில்
சொக்கி போயிருக்கும்
பௌர்ணமிக்கு
அதிர்ஷ்டம் அதிகம் தான்
உதிரிப்பூக்கள் அல்ல நீ
அண்ணாந்து
பார்க்க வைத்திடும்
பௌணர்மிக்கு இணையான
நிறம் மாறா பூக்கள் நீ
சிவமணி
வத்தலக்குண்டு

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS