INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

'IRAKKUVAANAI' ASKAR'S POEM(1)

A POEM BY 
'IRAKKUVAANAI' ASKAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE HUNCHBACKED
Winking moments of Night
with light fading and darkness stepping forward
And at the final leg of night when darkness turns into light
I would see the arrival of the hunchbacked man
standing on the roadside.
With the cycle skidding
and with it the grandpa - the hunchbacked -
too tumbling
folding into three or four
the back getting a hump
and with the spine protruding
I came to see the grandpa as a hunchbacked.
No hair on head to turn gray
No teeth to grit or grind
moustache alone remained to wind
defying decay.
And in that
ageing passion in tact.
Whether the splendour of twenty
is still reigning supreme within
I know not
The burden alone is perceivable
as a great load on the back
the curved hump _
not something he had
when he came into this world.

கூனன்
------------
இராப் பொழுது
கண் சிமிட்டும் தருணங்கள்
ஒளி போக இருள் வரவும்
இருள் ஒளி வரும் இறுதி இராப்பொழுதும்
கூனனின் வரவைக் காண்பேன்
பாதையோரத்தில் நின்று...
சைக்கிள் உருள
அந்தப் பாட்டனும் அவன்தான் கூனன்
சேர்ந்து உருள
மூன்றாய் நான்காய் மடிந்து
முதுகில் கூன் விழ
முள்ளந்தண்டு புடைத்தவராய்
அந்தப் பாட்டனை
கூனனாய்க் காண்பேன்...
நரைக்க முடியில்லை தலையில்
கடிக்க பல்லுமில்லை
முறுக்க மீசை மட்டும்
வயதில் சாகாத தோற்றம்
மீசையில் மட்டும்
வெள்ளை விழுந்த ஆசை...
இருபதின் கம்பீரம்
இன்னுமோ உள்ளத்தில்
தெரியவில்லை எனக்கே
சுமை மட்டும் தெரிகிறது
முதுகில் பெரும் மூட்டயாய்
வளைந்த கூனல் மூட்டை
அவர் தோற்றத்தில்
தோன்றியதில் இருந்தன்று...
-கவிஞர் அஸ்கர்-

SIBICHELVAN'S POEM(2)

TWO POEMS BY 
SIBICHELVAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1
On the day when
yet another 
summer takes leave
at the instant when
You
and I
reposing
under a tree
watching the waves
in the mirage
on the trunk road
someone is fanning with
green palm-leaf
and chasing away
the residual heat.
Sibichelvan Muthu


இன்னொரு கோடை விடைபெறும்
நாளில்
நீங்கள்
மற்றும்
நான்
ஒரு மரத்தடியில்
இளைப்பாறியபடி
தார்சாலையில்
கானல்நீரீல்
அலையடிப்பதை
பார்த்தபடி
நிற்கும்
தருணமதில்
யாரோ
பச்சை பனையோலையில்
விசிறி மிச்சமிருக்கும்
வெயிலை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


2. THE PARROT
Today is PARROTS DAY

‘Kilivanam’, is the name of this place.
As the parrots have flown away
the ‘vanam’, i.e., the woodland weeps
all alone
Today is Parrots Day
Having some fruits
some nuts
some grains
and water in an earthen pot
the Day keeps waiting.
‘The parrots have flown a great distance away
It would take a long time for them to return’
_So an ornithologist was telling.
In the place sans parrots
In the woodland sans parrots
Today
We are celebrating the Parrots Day.
*31ST May is World Parrots Day
“கிளி
இன்றுகிளிகளின்நாள்
இந்தஊருக்குகிளிவனம்எனப்பெயர்
கிளிகள்பறந்துபோனதால்
வனம்தன்னந்தனியாகத்
தேம்பியழுகிறது
இன்றுகிளிகளின்நாள்
கொஞ்சம்பழங்களையும்
கொஞ்சம்கொட்டைகளையும்
கொஞ்சம்தானியக்கதிர்களையும்
ஒருமண்பானையில்நீரையும்வைத்துகாத்திருக்கிறது
கிளிகளின்நாள்
கிளிகள்வெகுதொலைவில்பறந்துபோயிருக்கின்றன
திரும்பிவரவெகுகாலம்ஆகும்என
பறவையியலாளன்சொல்லிக்கொண்டிருக்கிறான்.
கிளிகளற்றஊரில்
கிளிகளற்றவனத்தில்
இன்று
கிளிகள்நாளைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்
கொஞ்சம்தானியங்களோடும்
கொஞ்சம்பழங்களோடும்
காத்திருக்கிறோம்
கூண்டுகளைமறைத்துவைத்துக்கொண்டு
கிளிகளின்நாள்கொண்டாடக்
காத்திருக்கிறோம்.
- சிபிச்செல்வன்

VATHILAIPRABHA'S POEMS

TWO POEMS BY 
VATHILAIPRABHA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1.THE PROCLAMATION OF A POET
                                          Of course, my poems 
do speak about me only.
Even the political ones.
It is my poems that
bear testimony to my Being
If my poems cause terrible assault
or thin lines of scratches
I am prepared to own responsibility.
My writing is not some soft kitten
to be placed on the lap and caress
My poems have sunken eyes and hapless ones
as their corpus.
I am man insane with beard unshaven.
A madcap ascending on the abnormality of
Life delirious and delivering poems.
Someone always trustworthy;
pouring a liquid at boiling point
as Poetry.
The temperature of volcanic eruption is
my poetry’s volume and dimension.
My poems are not untouchable
They are just not easily touchable
I am a poet stinging as a serpentine.
That my poetry is no Disclaimer
and that, it is for owning responsibility _
I hereby declare.

வதிலைபிரபாவின் கவிதை
என் கவிதைகள்
என்னைத்தான் பேசுகின்றன.
அரசியல் கவிதைகளும் கூட.
என் இருப்பை உணர்த்துவதும்
என் கவிதைதான்!
என் கவிதையால் பலத்த தாக்குதலோ,
வரிச் சிராய்ப்புகளோ ஏற்பட்டால்
அதற்கென பொறுப்பேற்கவும்
தயாராக உள்ளேன்!
பூனைக்குட்டியென மடியில் கிடத்தி
மெல்ல வருடும் வாஞ்சைமிகு எழுத்தல்ல
என் எழுத்து.
பஞ்சடைத்த விழிகளையும் பராரிகளையும்
கவிதையாக வடிக்கிறவன்.
தாடி மழிக்காத பைத்தியக்காரன்.
பித்துப்பிடித்த வாழ்வின் பித்தநிலை மீதேறி
கவிதை சொல்கிற பித்தன்.
எப்போதும் நம்பத் தகுந்தவன்.
ஒரு கொதி திரவத்தை கவிதையாகக் கொட்டுகிறவன்.
லாவாவின் வெப்பஅளவீடே
என் கவிதையின் அளவீடு.
என் கவிதைகள் தீண்டத்தகாதவை அல்ல
தீண்ட முடியாதவை!
சர்ப்பமெனத் தீண்டுகிற கவிதைக்காரன்.
பொறுப்புத்துறப்பு என் கவிதை ஆகாது.
பொறுப்பேற்கவே என் கவிதையென
இதனால்
சகலமானவருக்கும் அறிவிக்கப்படுகிறது.

2


He who went to bed carrying a huge dream


suddenly struggling to breathe _


he and his dream


ceased to be!


Allowing none to come anywhere near


they removed the dead body


taking it away in an ambulance.


The dream alone


taken note of by none


remains there decayed and rotten


with stinking memories.


VathilaiPraba

பெரும் கனவொன்றைச் சுமந்தபடி


படுக்கச் சென்றவனுக்கு


மூச்சுத் திணறல் ஏற்பட்டு


கனவோடு அவனும் மரித்துப் போனான்!


யாரும் நெருங்க முடியாதபடி


ஆம்புலன்ஸ் ஒன்றில் அந்தச் சடலத்தை


அப்புறப் படுத்தினர்.


யாரும் கண்டுகொள்ளப்படாத


அந்தக் கனவு மட்டும்


அங்கேயே அழுகிக் கிடக்கிறது


துர்நாற்ற நினைவுகளுடன்!
 — 

KAALATHATCHAN (Venki Thillainayagam)'S POEMS(2)

TWO POEMS BY 
KAALATHATCHAN 
(Venki Thillainayagam)
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1.BECOMING GOD
 In Door. No. 16 of the lodge
rape is taking place.
In Door.No. 17 you increase the volume
of your Television.
In that jam-packed bus
that old man is misbehaving with
the school girl.
You get down before your stop arrives.
An SMS requesting for A+ Blood
crying haplessly, unread.
You struggle with your brand new model mobile
not knowing how to store the new blue films.
A moss of human flesh afflicted with Leprosy
extends one hand with half-eaten fingers.
Pretending as if some sticky candy
had got stuck on the sole of your slipper
You go past looking down intently
and rubbing your foot against the ground so effortlessly.
In the adjacent island
life is rotten shit
Turning the page hurriedly
You graze through the Daily column
’Aandiaar Paadugiraar’
Nothing to worry, my friends
you are becoming God
in instalments.

கடவுளாதல் 
(கவிஞர் காலத்தச்சன்)

விடுதிக் கதவு எண் 16-இல்
வன்கலவி நடைபெறுகிறது;
கதவு எண் 17-இல் நீங்கள்
தொலைக்காட்சிப்பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.
அந்த நெரிசல் பேருந்தில்
அந்தப் பள்ளிச் சிறுமியிடம்
அந்த வயோதிகர் அத்துமீறுகிறார்;
உங்கள் நிறுத்தத்திற்கு முன்னமே
இறங்கிக்கொள்கிறீர்கள்.
படிக்கப்படாமல் கதறுகிறது
A+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல்;
புது மோஸ்தர் அலைபேசியில்
புதிய நீலப்படங்களைச் சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.
பெருநோய் மூட்டை ஒன்று
மூளியான விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது;
செருப்பில் பசை மிட்டாய் ஒட்டியதாக
கள்ள லாவகத்துடன்
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள்.
அண்டைத் தீவில்
அழுகிய நரகலாய் வாழ்வு;
அவசரமாய்ப் பக்கம் புரட்டி
ஆண்டியார் பாடுகிறார் மேய்கிறீர்கள்.
இதில் கவலைப்பட ஒன்றுமில்லை நண்பர்களே,
நீங்கள் தவணை முறையில்
கடவளாகிக் கொண்டிருக்கிறீர்கள்.


2.
The Fighter wanders all alone
in the rectangular sea.
Never does he accept
the tiny fishes
with hues splashed all over.
He was always for
equally strong ones.
It is from inside his body
I am writing
this
Here
loneliness unbearable
for me too.
I too need
one like me
Suffice if anybody
reading this
falls into this rectangular sea.

காலத்தச்சனின் கவிதை

செவ்வகக்கடலில்
தனித்தலைகிறான்
ஃபைட்டர்
ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை
அவன்
வண்ணஞ்சிதறும்
துகள் மீன்களை
தனையொத்த
பலசாலிகளையே
அவன்
விரும்பினான்
அவன்
உடலுக்குள்ளிருந்துதான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இதை
இங்கு
எனக்கும்
தாளமுடியாத் தனிமை
தனித்தலைந்து
எனக்கும் வேண்டும்
எனையொத்த
ஒன்று
இந்த
செவ்வகக்கடலுக்குள்
விழுந்தால் போதும்
இதைப்படிக்கும்
யாரேனும் .

AZEEZ M.FAIZ'S POEM(1)

A POEM BY 
AZEEZ M.FAIZ
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

ONE HUNDRED YEARS OF WAITING
A white horse
A sword of the war-front
A shield
are for a long time
waiting
for an able commander.
Commanders do come
every now and then
In their hasty arrival
they climb on donkeys
and go jockeying it.
Some on the back of buffaloes
Some on the back of
god knows what.
In their hands
instead of sword and shield
there were
some printed sheets
and a mike.
A few more commanders
came along
They too climbed on the back of stallions.
Sword and armour were given to them too.
But
they drove their stallions to the river-bank
and slicing fish
they roasted it on the shield and ate.
All that we keep searching for
is a real brave accomplished commander.
Not cowards who climb on their horses and flee
dreading the dogs at their back.
A white horse
A sword of the war-front
are there waiting for centuries
For a commander-par-excellence
Valorous and very eloquent
Some time back
several commanders came
thinking that they are seated on tuskers
while in truth sitting on the backs of cats
They showed themselves to be dumb and deaf
taking us to be fools….
The longing for an able commander
fills all the hearts
The sword and shield of the warfront
are still there, wiped of dust accumulated,
with the neighs and brays of horse
.
Azeez M. Faiz

#நூற்றாண்டுக்காத்திருப்பு...
ஒரு வெள்ளைக் குதிரையும்
ஒரு போர்வாளும்
ஒரு கேடயமும்
நீண்ட காலமாய்
காத்திருக்கிறது
சிறந்ததொரு தளபதிக்காய்.
தளபதிகள்
காலத்துக்கு காலம்
வந்து கொண்டுதானிருந்தார்கள்
வருகின்ற அவசரத்தில்
குதிரைகளுக்குப் பதிலாக
கழுதைகளிலேறி
ஓட்டிச் சென்று விடுகிறார்கள்.
சிலர் எருமை முதுகிலும்
சிலர்
எதுவெனத் தெரியாதவற்றின்
முதுகிலும் கூட.
அவர்கள் கைகளில்
போர்வாளுக்கும் கேடயத்திற்கும்
பதிலாக அச்சடிக்கப்பட்ட
சில காகிதங்களும்
ஒரு ஒலிவாங்கியும் இருந்தன.
இன்னும் சில விரல்விட்டு
எண்ணக்கூடிய தளபதிகளும் வந்தார்கள்.
அவர்களும் குதிரைகளில்தான்
அமர்ந்தார்கள்.
வாளும் கேடயமும்
அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
அவர்கள்
ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்று
வாளால் மீன்வெட்டி
கேடயத்தில் சுட்டுச் சாப்பிட்டார்கள்.
நாங்கள் தேடுவதெல்லாம்
தைரியமிக்க
ஆளுமையுள்ள ஒரு தளபதியைத்தான்.
துரத்தும் நாய்களுக்குப் பயந்து
குதிரைகளில் ஏறியோடும்
கோழைகளையல்ல.
ஒரு வெள்ளைக் குதிரையும்
ஒரு போர்வாளும்
ஒரு கேடயமும்
நூற்றாண்டுகளாக
காத்துக் கிடக்கின்றன.
நாவன்மையும் தைரியமும் மிகைத்த
ஒரு சிறந்த தளபதிக்காய்...
சில காலங்களுக்கு முன்
சில தளபதிகள் வந்தார்கள்.
யானைகளின் முதுகில்
ஏறியமர்ந்ததாய் நினைத்து
பூனைகளின் முதுகில்
அமர்ந்து கொண்டு.
அவர்கள் ஊமைகளாயும்
செவிடர்களாயும்
தங்களைக் காட்டிக் கொண்டனர்
எங்களை மூடர்களாக
நினைத்து...
தளபதிக்கான
ஏக்கம் எல்லா நெஞ்சிலும்
தேங்கிக் கிடக்கிறது.
போர்வாளும்
கேடயமும் இன்னமும் புழுதி துடைத்தேயிருக்கிறது
குதிரையின் கனைப்புகளுடன்.
#அஸீஸ்எம்பாயிஸ்

K.MOHANARANGAN'S POEM(1)



A POEM BY 
K.MOHANARANGAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WAY
In such abject darkness
with no star in the sky
and on earth no firefly
O, you shouldn’t have left me
just like that.
The son who came calling
“Dad” asks
“Why are you standing here
so dark
that the face in front
or the trail therein
remains unseen”.
I follow him in silence
secretly wiping my moist eyes.

க. மோகனரங்கன்
வழி
_______

வானத்தில்
ஒரு நட்சத்திரமும்
பூமியில்
ஒரு மின்மினியும் கூட
இல்லாத
அப்படியொரு இருட்டில் என்னை
நிறுத்திவிட்டு
நீங்கள் போயிருக்கக்கூடாது
' அப்பா '
அழைத்தபடியே
வந்த மகன்
முன்னிருப்பவர்
முகமோ
அடி வைக்கும்
தடமோ கூடத் தெரியாத
இப்படியொரு இருட்டில்
எதற்கு நிற்கிறீர்கள்
என்று வினவுகிறான்
எதுவும் சொல்லாமல்
அவன் பின்னால்
நடக்கிறேன்
கசியும் கண்களை
இரகசியமாகத் துடைத்தவாறு

A. NASBULLAH'S POEM(1)



A POEM BY 
NASBULLAH. A

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

When the words entwining the reader

leave him
As fresh new
Clouds
Birds
they go flying
all over the place
belying his guess
Such words
write their autobiography
in a withered leaf
Sufi’s music
on a wall-painting
When the reader goes past this spot
some day
the words
transform themselves
tuned to his readership.

வாசகனை சுற்றிய சொற்கள்
அவனிடமிருந்து வெளியேறும் போது
புதுப்புது
மேகங்களாய்
பறவைகளாய்
பிராந்தியம் எங்கும் அவன் ஊகிக்க முடியாதபடி
பறந்து செல்கின்றன.
அவ்வாறான சொற்கள்
விண்வெளியெங்கும்
உதிர்ந்த இலையென்றிலும்
சூஃபியன் இசையிலும்
சுவர் ஒன்றின் ஓவியத்திலும்
தன் வரலாற்றை எழுதிக் கொள்கின்றன
வாசகன் ஒருநாள் இப்பிராந்தியத்தை
கடந்து செல்லும் போது சொற்கள்
அவனது வாசிப்புக்கு ஏற்றால்போல்
தன்னை மாற்றிக்கொள்கின்றன.
00
ஏ.நஸ்புள்ளாஹ்

KAMARAJ VISWAGANDHI'S POEMS(3)

THREE POEMS BY 
KAMARAJ VISWAGANDHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1. THE LAST GULP
Hauling the whole lot of 

wails and screams of a terrible war
all too vehemently
and subsided
the last gulp that filled
the lungs of Alan Kurdi…

.

(*Alan Kurdi :
Alan Kurdi, initially reported as Aylan Kurdi, was a three-year-old Syrian boy of Kurdish ethnic background whose image made global headlines after he drowned on 2 September 2015 in the Mediterranean Sea. He and his family were Syrian refugees trying to reach Europe amid the European refugee crisis. Wikipedia)
கடைசி மிடறு*
ஒரு பெரும் போரின்
ஓலங்களனைத்தையும்
ஆவேசமாய்
வாரிக் குடித்தடங்கியது
ஆலன் குர்டியின்
நுரையீரல் நிரப்பிய
கடைசி மிடறு...

2.BONDING
All those twenty years
when going there all too rarely
Heeding to the words of the buyer
Digging out the bones of dad, grandpa and grandma
- So, the soil of our land that had
always remained detached
on signing the sale deed
and going there for the last time
sticking so persistently
stays on
with just one particle
falling off per year

*ஈரம்*
இருபது ஆண்டுகளாய்
எப்பொழுதாவது
போகும்பொழுது,
வாங்கியவன் சொல்ல
அப்பா, தாத்தா பாட்டியின்
எலும்புகளை தோண்டியெடுத்து
கரைத்தபொழுது,
என எப்பொழுதுமே ஒட்டாத
தோட்டத்து மண்
கிரயப் பத்திரத்தில்
கையொப்பமிட்டு
கடைசி ஒரு முறை
போகையில்
விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டு
ஆண்டுக்கு
ஒரு துகள் வீதம்தான்
உதிர்கிறது...

3. SPARKLE
In the contracting and expanding
all too tiny eyes
of he who
facing the sky lying on his back
upon the stick
held in the mouth of
the pole-dancer
with sunken belly _
The sparkle of
million stars.

*மினுப்பு*
வயிறு ஒட்டிய
கழைக்கூத்தாடியின்
வாய் தாங்கிய
குச்சியின் உச்சியில்
வான் பார்த்து
படுத்திருந்தவனின்
சுருங்கி விரிந்த
சின்னஞ்சிறு
கண்களில்
ஆயிரங்கோடி
நட்சத்திர
மினுப்புகள்.

RAJAJI RAJAGOPALAN'S POEM

A POEM BY 
RAJAJI RAJAGOPALAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 


In the dialogues I write
There are no full stops
No room for question marks
They don’t accept any punctuation
For they need not be dialogues
as they are the screams heard
when humanity’s throat is throttled.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS