INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

PRABHU K SHANKAR

 TWO POEMS BY

PRABHU K SHANKAR


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
As ear-ring
the cow in ripe pregnancy
wears in its one ear
the yellow plastic board
with index number
“What for this marker?”
_ The boy of the greater city
who buys milk in plastic sachets and relish
asks surprised
“This is a cow given by the government
and the index number is marking that”,
explains the present owner of the cow
“Just as the Aadhar card for us
This stud for the cow – right?”
With this voluntary response
He runs off
And thinking of how it regards him
who is under its scanner _
as QR Code
slowly bursts into roaring laughter
His mobile
24X 7
connected with WI-FI....

Prabu K Sankar

குறியீட்டு எண் பதியப்பட்டிருக்கும்
மஞ்சள் நிற நெகிழி தகடை
கம்மல் போல
தன் ஒருபக்க காதில்
குத்திக் கொண்டிருக்கிறது
ஒரு நிறைசூல் பசுமாடு
எதற்கு இந்த குறியீடு??
ஆச்சரியமாக கேட்கிறான்
நெகிழிப் பைகளில்
பால் வாங்கி அருந்தும்
பெருநகரத்து பாலகன்
இது அரசாங்கம் கொடுத்த மாடு
அந்த அடையாளத்திற்காக
பொருத்தப்பட்டுள்ளதென
விளக்கம் தருகிறான்
மாட்டின் தற்போதைய சொந்தக்காரன்
"நமக்கெல்லாம் ஆதார் கார்டு போல
மாட்டுக்கு இந்த கம்மல் அப்படித்தானே??"
அவனாக பதிலை கூறிவிட்டு ஓடி விட
தன் கண்காணிப்பில் இருக்குமவனை
க்யூ ஆர் கோடாக பாவிப்பதை நினைத்து
மெல்ல அதிர்ந்து சிரிக்கிறது
இருபத்தி நான்கு மணி நேரமும்
இணையத்தோடு பிணைக்கப்பட்ட
அவனின் அலைபேசி......

#பிரபுசங்கர்_க

(2)
Scales so grand
Eyes so real
Hues and shades
Splendid, sparkling
_So drawing a golden fish
In half-an-hour
“Am I to draw a fish- tank
Or a sea”
I ask my son
seeking clarification.
“Why ask me?
Shouldn’t you ask the fish?”
Pat comes the response.
And hearing that
The fish resurrected
pouts its lips
asking for the Sea

Prabu K Sankar

மிக அழகான செதில்கள்
தத்ரூபமான கண்கள்
மனதை பறிக்கும் வண்ணங்களென
அரைமணியில் தங்கமீனை
வரைந்துவிட்டு
தொட்டி வரைவதா??
இல்லை
கடல் செய்வதா??
என மகனிடம்
ஐயம் கேட்கிறேன்
"அதையேன் என்னிடம் கேட்கிறாய்
மீனிடம் அல்லவா கேட்க வேண்டும்??"
சட்டென வந்து விழும்
அவனின் பதிலைக் கேட்டு
கடல் வேண்டுமென
உதடுகளை குவிக்கிறது
உயிர் துளிர்த்த கயல்.....



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024