A POEM BY
THENMOZHI DAS
Translated into English by Latha Ramakrishnan (*First Draft)
In your dream have you seen the food-items of
green pigeon
If yes, draw the inner circle of its throat and show me.
The interior stem of the ‘Malaikiluvai’ tree
The colour of the Neerinji tree’s fruit
The beauty of Porcupine’s single strand of hair
The udder of the blossom ‘Sirukurinji’
The figure of an alien world growing upon the rock-skin
The tongue of white snake
The radiance of Jothi tree
The skin of Pulichaanthandu’
Draw and show me the root of Kalthaamarai creeper
I keep trying to sketch forms many which are beyond me
Bizaare dreams aplenty visit me
In your dreams too
the smell of cat-milk might
come
Tiger’s stripes might seep and turn into a stream.
Touched by the elephant’s nail the dream might be torn.
Having the globe as a paddy grain
Folding it in the palm and woken up
Scenes undreamt of
come to us more than dreams.
Have you imagined the magical mount
as your ladylove
If yes, hug tight the snow
and sing the glories of the world
Is the scent of our body
More fragrant than the scent of Eucalyptus tree
Is our love nobler that the heart of the mountain-pigeon
பல்லுயிர் உன்னதங்களைப் பாடுங்கள்
•
உங்கள் கனவில் பச்சைப் புறாவின்
உணவுகளைக் கண்டதுண்டா
ஆம் எனில் அதன் குரல்வளை உள்வட்டத்தை வரைந்து காட்டுங்கள்
மலைக்கிளுவை மரத்தின் உள்தண்டை
நீரிஞ்சி மரத்தின் பழ நிறத்தை
முள்ளம்பன்றியின் ஒருமுடி அழகை
சிறுகுறிஞ்சிப் பூவின் மடியை
பாறை மேனியில் வளரும் வேற்று உலக உருவத்தை
வெள்ளைப் பாம்பின் நாக்கை
ஜோதிமரத்தின் பிரகாசத்தை
புளிச்சாந் தண்டின் தோலை
கல்தாமரை கொடியின் வேரை வரைந்து காட்டுங்கள்
என்னால் முடியாத எவ்வளவோ வடிவங்களைத் தான்
எழுதி எழுதிப் பார்க்கிறேன்
நூதனமான பல கனவு வருவதுண்டு
உங்களுடைய கனவுகளில் கூட
பூனைப் பாலின் வாசம் தெரியலாம்
புலியின் உடல் கோடுகள் கசிந்து
நீரோடையாகலாம்
யானையின் கால் நகம்பட்டு கனவு
கிழிந்து விடலாம்
உலகை ஒரு நெல் விதையாய்
உள்ளங்கையில் மடக்கி விழிக்கலாம்
கனவிலும் காணாத சம்பவங்கள் தான்
கனவுகளை விட அதிகமாக நமக்கு வருகின்றன
மந்திர மலையை உங்கள் காதலியாக
நினைத்ததுண்டா
ஆம் எனில் பனியை அணைத்து
உலகின் உன்னதங்களைப் பாடுங்கள்
தைலமரத்தின் உடலை விடவா
நம் உடல்வாசனை கீர்த்தி பெற்றது
மலைப்புறாவின் மனதை விடவா
நமது அன்பு மாட்சிமை மிக்கது
No comments:
Post a Comment