INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

VELANAIYOOR RAJINTHAN

 A POEM BY

VELANAIYOOR RAJINTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

LEAVING ONE’S MOTHERLAND…..
In the existential wilderness where the saplings of relief
get scorched
Every now and then cries this heart innermost
As a baby lost
Sacrificing one’s feelings and emotions
Burying deep one’s desires
Hours speed past
in masquerade.
The heart yearns to
roll on the soil
where some time or other
a few momentary thirsts
were avidly gulped
For eyes turned dry
The wish to see the lovely swing and sway
of the street of our hometown
and feel joyous
swells and overflows.
Soft food smashed by mother’s benign hand
Karuvaadu fried by father
_The heart yearns to relish it
with the entire family
sitting under the courtyard neem tree
Tender coconut water of the plantain tree
and ‘Nungu’ of the palymra
plucking them in clusters
many
with friends collectively
and drinking those wine divine
cause thirst intense in my tongue.
With dreams and memories
brimming in angst
The lips alone wear a coating of smile
all the while.
In truth, well -
Leaving one’s mother land
is no big deal;
Not that terrible _
Till you experience its feel.

தாய் நிலத்தைப் பிரிதல் கொடுமையல்ல
__________________________________________
ஆசுவாசத் துளிர்கள்
கருகிப்போகும் வாழ்வியல் வனாந்தரத்தில்
ஒரு மழலையென அவ்வப்போது வீறிட்டுக் கதறுகிறது
இந்த ஆழ்மனது
உணர்வுகளைப் பலியிட்டு
ஆசைகளை ஆழப்புதைத்து
வேடம் தரித்து
நகர்கின்றன நாழிகைகள்
ஒரு பொழுதேனும்
சில தருணத் தாகம்
அள்ளித்தின்ற மண்ணில்
உருண்டு பிரளத் தாளாத ஏக்கம்
காய்ந்து போன விழிகளுக்கு
ஊர்த் தெருவின் எழிலசைவைக்
கண்டுகளிக்க வீறிடும் விருப்பு
அம்மா கைபிசைந்த குளைசோறும்
அப்பா சுட்டுத்தரும் கருவாடும்
முற்றத்து வேப்பமர நிழலில்
குடும்பமாய் உண்டு சுவைக்கப் பேரவா
தென்னை மர இளநீரும்
பனை மரத்து நொங்கும்
நண்பர்களோடு கூடிக்
குலை குலையாய்ப் பறித்துப் பருகிய
தேவலோக பானங்கள் எல்லாம்
நாவிற் பெரும் தாக ஊற்று
கனவுகளும் நினைவுகளும்
பரிதவிப்பால் நிறைந்திருக்க
உதடுகள் மட்டும் புன்னகை முலாம்
புதுப்பித்துக் கொண்டிருக்கிறது
உண்மையில்,
தாய் நிலத்தைப் பிரிதல் என்பது
அத்தனை கொடுமையானது அல்ல;
அதை நீங்கள் அனுபவிக்காதவரை!
- வேலணையூர் ரஜிந்தன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024