INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

RAMESH PREDAN

 A POEM BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THINGS LEARNT TILL DATE
Being underground is poetic
Standing in the front line all the time
Advertising you for sales
would make your market value go
up and down always.
Not taking part in the trade
that has nothing to give and take
stay aside absconding
That day would be poetic indeed
Avoid being always in the light
For feelings hidden and obscure
some dimness required.
Some stars missed by the eyes
in the dark regions of life
would come in sight.
For those who are used to live in the night
life span would expand
The sharp vision of the hunting animals
would be gained
The enlightenment that Prey is Lord Omnipresent
would be dawned.
The concealed poesy in humans
choosing night and dark
for sex
would be accessed.
If you can realize it
You would keep femininity outside
the body
Even when you call them
with names changed
Their essence would remain the same.
They are everlasting
Those breathing become lifeless tomorrow.
Come out of light
into the dark
You would feel safe and sound
as inside a womb pregnant.
Ramesh Predan
இதுவரை அறிந்தவை
தலைமறைவு வாழ்க்கை கவித்துவமானது
எல்லாவற்றிலும் முன்நின்று
உன்னை விளம்பரப்படுத்தி
விற்றுக்கொள்வதில்
சந்தை மதிப்பு ஏறும் இறங்கும்
கொடுப்பதற்கோ பெறுவதற்கோ எதுவுமில்லாத வர்த்தகத்தில் ஈடுபடாமல்
தலைமறைவாக ஒதுங்கி நில்
அந்த நாள் கவித்துவமாக இருக்கும்
எந்நேரமும்
வெளிச்சத்தில் நிற்பதைத் தவிர்த்துவிடு
மறைவான உணர்வுகளுக்குக் கொஞ்சம் இருட்டுத் தேவை
வாழ்வின் இருண்டப் பகுதிகளில்
பார்க்கத் தவறிய
சில விண்மீன்கள் தட்டுப்படும்
இரவில் வாழப் பழகியவருக்கு
வாழ்நாள் கூடும்
வேட்டை விலங்குகளின்
கூர்நோக்கு வசப்படும்
இரையே இறை என்னும்
உண்மை விளங்கும்
கலவிக்கு உகந்ததாக
இரவையும் இருட்டையும்
மனிதர் தேர்ந்ததில்
மறைக்கப்பட்ட கவித்துவம் புலப்படும்
அதை உன்னால் அறியமுடிந்தால்
பெண்மையை
உடம்புக்கு வெளியில் நிறுத்துவாய்
பெயரை மாற்றி அழைத்தாலும்
இரவுக்கும் பகலுக்கும்
தன்மை மாறாது
அவை நிலையானவை
உயிருள்ளவை நாளை உயிரற்றவை
வெளிச்சத்திலிருந்து வெளியே
இருட்டுக்கு வா
சினை வயிற்றுக்குள்ளிருக்கும்
பாதுகாப்பை உணர்வாய்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE