INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

RAMESH KANNAN

TWO POEMS BY

RAMESH KANNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
'SAUNDHARYA LAHARI'
(*Waves of Beauty (or) Beauty-Personified)

To come running and hopping
there is no sufficient space
for a youth’s buoyant jump
As a matchbox contained in palm
the kitchen
Another room
where all of us would sleep at night
so we call it so proudly
our bedroom .
The scent of green paint applied to the iron cot
newly bought
in easy-installment scheme
was all pervading in the household.
The cement tank placed upside down
and covered with a towel
served as the Television stand.
And a standard-size almirah.
Standing hither and thither
and sweeping the floors
trash won’t be so much
_ A beautiful time as such
At the entrance of the house
A ring well
Climbing the step
On one side Ammi
and on the other side Ural.
Kola-powder on the window- ledge.
Guests everywhere causing joyous uproar
Our household laughs heartily
Father too has joined us

.சௌந்தர்ய லஹரி
ஓடி வந்து தவ்வினால்
எங்களது வீட்டின் முன்னறை போதாது
ஓர் இளைஞனின் துள்ளலுக்கு
உள்ளங்கை தீப்பெட்டி
போன்றதொரு சமையலறை
எல்லோருமே இரவில் உறங்கும் மற்றொரு அறை
அதனால் பெட்ரூமெனப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்வோம்
சுலபத்தவணையில் வாங்கிய இரும்புக் கட்டில்
வந்த புதிதில் அடித்த பச்சை வர்ணப் பெயிண்ட் வாசனை
வாங்கி வந்த நாளில் வீடு முழுக்க நிறைந்திருந்தது
கவிழ்த்து வைத்துப் பூத்துவாலையால் மறைத்த சிமெண்ட் தொட்டி தான்
டிவி ஸ்டாண்ட்
ஓர் ஆளுயுற பீரோ
அங்குமிங்கும் நின்று கூட்டினாலும்
அளவான குப்பை வடிவான காலம்
வீட்டின் வாசலில் உறைகிணறு
படியேறினால் ஒருபுறம் அம்மி மறுபுறம் உரல்
ஜன்னல் திண்டில் கோலப்பொடி
ஒரே விருந்தாடிச் சத்தம்
வீடு குலுங்கிச் சிரிக்கிறது
அப்பாவும் எங்களோடு சேர்ந்து கொண்டார்

......ரமேஷ் கண்ணன்


2. DELIRIUM
As like a kite with its tail gone
floating and oscillating in the air
What would be the memories of plant without roots
In the journey progressing with no direction
nor destinations
What at all could be the use value of a smile
Even the sprouting teardrops do not taste salty
In the two hands that mixed the wet sand
and constructed me
I became a loser of one more thing
The nursery child returning from school
standing at the threshold of the house having none
Singing aloud the rhymes with zest and passion
and placing as pillow the school bag
falling asleep in sheer exhaustion
In the auditorium sans audience
I go on dancing
whirling and swirling…
isn’t it the delirium of dialogue
with one’s own self,
Of course
what else ….

2.பித்து
பிடி கழன்ற காத்தாடி அலைவுறுவதைப் போல
வேர்களற்ற
ஒரு தாவரத்தின் நினைவுகள் என்னவாக இருக்கும்
திசையோ இலக்குகளோ அற்றுத் தொடரும் பயணத்தில்
ஒரு புன்னகையின் பயன்மதிப்பு என்னவாகிடப் போகிறது
துளிர்க்கும் கண்ணீர் துளிகளும் கூட உப்புக் கரிக்கவில்லை
மண்ணைக் குழைத்து எனைச் சமைத்த இரு கரங்களில் இன்னொன்றையும் இழந்தவனானேன்
பள்ளி முடிந்து வீடு திரும்பும் நர்சரி குழந்தை
யாருமற்ற வீட்டின் வாசலில் தான் கற்ற ரைம்ஸ்களை உற்சாகமாகச் சொல்லி விட்டு புத்தகப்பையைத் தலைமாட்டுக்கு வைத்து விட்டு உறங்கிப் போகிற அலுப்பு
ஒரு பார்வையாளர் கூட இல்லாத அரங்கத்தில்
நான் சுழன்று சுழன்று நடனமாடுவது
தனக்குத் தானே பேசிக் கொள்வதின் பித்தன்றி வேறென்ன
......ரமேஷ் கண்ணன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024