INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

LEENA MANIMEKALAI

 A POEM BY

LEENA MANIMEKALAI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

“Slicing your limbs, smashing your private parts
Hauling the bits and pieces strewn all over
I would hang them all as a festoon
_So an SMS.

Killing a poet is not that easy.
For slicing her with weapons
She is not a mere body
She is soul utmost
of predecessors innumerable.

“We would gang-rape thee
and circulate the video of it - wait and see”
_ So an open letter.

Sexually assaulting a poet is a 'no-win' challenge
Her vagina
is the source of seven seas infinite
Male organs are mere pebbles.

“We would set you on fire
Lock stock and barrel
Leaving not your family and friends”

“We would never allow you to live anywhere under the sun
Not anywhere in the universe, nor in the moon
Reward awaits him who would bring your head”
So the chorus of thousands of voices.
Fixing a rate for a poet’s head is not that easy.
Her head is ten globes put together
Her family extends on the passage
being trailed by the plough’s edge, ever
The food flowing out of her ‘Akshaya Paathraa’
is no mere food

“We would imprison you
in ten jails simultaneously.
We would not let you set foot
out of our land – Understand?

So complaints and cases multiple
Imprisoning a poet is not that simple
Containing Time behind bars
Can there be Life – before and After?

உன் உடற்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி
ஜனன உறுப்புகளை சிதைத்து அள்ளி கூட்டி
தோரணம் கட்டுவேன்’
என்றொரு குறுஞ்செய்தி
ஒரு கவிஞரைக் கொல்லுவது அவ்வளவு எளிதல்ல
ஆயுதங்களால் காயப்படுத்துவதற்கு
அவள் ஏதோ
அற்ப உடல் அல்ல
ஓராயிரம் மூதாதைகளின்
அந்தராத்மா
‘உன்னை கூட்டாக வன்புணர்வு செய்து
அதைப் பதிவுசெய்து ஒளிபரப்புவோம்’
என்றொரு திறந்த மடல்

ஒரு கவிஞரை வன்புணர்வது பெரிய சவால்
அவளுடைய யோனி
ஏழேழு் கடல்களின் ஊற்றுவாய்
குறிகள் வெறும் கூழாங்கற்கள்

‘உன்னைக் கூண்டோடு குடும்பத்தோடு கொளுத்துவோம்
அண்டசராசரத்தில் எங்கும் வாழ அனுமதியோம்
உன் தலையைக் கொய்பவனுக்கு நன்கொடை’

என
பல்லாயிரக் கணக்கானக் கூக்குரல்கள்
ஒரு கவிஞரின் தலைக்கு விலை நிர்ணயம் சிரமம்
அவளுடைய தலை பத்து பூமிகள்
கலப்பை முனைப் பாதை நெடுக அவள் குடும்பம்
அவளுடைய அட்சயபாத்திரத்தில் பெருகும் உணவு வெறும் உணவு மட்டுமல்ல.

‘ஓரே நேரத்தில் பத்து சிறைச்சாலைகளில் தள்ளுவோம்
நாடு கடக்க விட மாட்டோம்’

விதவிதமான பிராதுகள் வழக்குகள்
ஒரு கவிஞரைப் சிறை பிடிப்பது கடினம்
காலத்தை அடைத்துவைத்துவிட்டுப் பின்
எந்த கிரகத்தில் வாழ்வு மிஞ்சும்?
- லீனா மணிமேகலை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024