INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

LAREENA ABDUL HAQ

 A POEM BY

LAREENA ABDUL HAQ

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
A SOLITARY WORD!
Sorrow pouring in droplets
swelled brimming, overflowing beyond
I drew a circle around it
Now the heart narrowed down into a pond.
Just a little crack would do
to turn everything into rubbles.
The Crowbar
Your coarse, heavy hand
Weapons any and all
Trying hard, all too hard in vain
Helpless you stand there
Fury-personified.
Disappointment weighs heavy on thee
pressing you as a sharp-edge
slicing you non-stop
Poor thing
For you to finish doing it
For the sake of love
Or for the lack of it
Your one solitary word would suffice -
is something you could never surmise.

ஒற்றைச் சொல்!
================
துளித்துளியாய்ப் பொழிந்துத் துயர்
நிரம்பித் தளும்பிப் பெருகிற்று
அதைச் சுற்றி ஒரு வட்டம் வரைகிறேன்
இப்போது ஒரு குளமாய்க் குறுகிற்று மனசு
ஒரு சிறு வெடிப்புப் போதும்
எல்லாம் சிதிலமாகி நிர்மூலப்படுவதற்கு
கடப்பாறையை
வலிய உன் கரத்தை
வகைதொகையற்ற கருவிகளைக் கொண்டெல்லாம்
முனைந்து முனைந்தும் கையறு நிலையில்
சினந்துழன்று நிற்கின்றாய்
ஏமாற்றம் ஒரு கூர்முனையாய்
அறுத்தறுத்தும் அழுத்துகிறதுன்னை.
பாவம்!
காதலின் நிமித்தமோ
காதலின்மையின் நிமித்தமோ
அதைச் செய்து முடித்தற்கு உன்
ஒற்றைச் சொல் மட்டுமே போதுமாயிருப்பதை
ஒருபோதுமே அறிந்தாயில்லை, நீ.


2. THE LAND AND THE LEVEL-
PLAYING
I became the land
A land that many had trodden upon
Only now you are wading through this passage
Imprints of feet stamping real hard
The ruins of having been kicked and tossed
in games aplenty
pits wherein buried deep down
all and more
would be there.
Now it is your turn.
Stamp, kick, throw, bury _
So, for all verbs
try forming sentences. Hurry.

நிலமானேன்
எல்லோரும் கடந்துசென்ற நிலம்தான்
இப்போதுதான் நீ அவ்வழி கடக்கிறாய்
அழுத்தமாய் மிதியுண்ட தடங்கள்
எட்டியுதைத்து விளையாடிய சிதிலங்கள்
முட்கள், உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்,
குரல்வளை அறுந்த கனவின் மிச்சங்கள்
புதையுண்ட குழிகள்
அனந்தமும் இருக்கலாம்.
இப்போது உன் முறை.
மிதிக்க, உதைக்க, எறிய, புதைக்க என
எல்லா வினைச் சொற்களுக்கும்
வாக்கியமமைத்துப் பார்.

3. ONWARD JOURNEY
The path never makes an ‘about-turn’
It goes on stretching
for moving ahead
and meeting the bends and curves
With the joy of children who know not the way
I wish to wade through the dark obscurities
Directions melt and seep
Promises none to keep.
.
திரும்பிவருவதில்லை பாதை
முன்னோக்கி நகரவும்
திருப்பங்களை சந்திக்கவுமாய்
நீண்டு செல்கிறது
வழியறியாக் குழந்தைகளின் குதூகலத்தோடு
இருள்களைக் கடக்க விழைகிறேன்
திசைகள் திரவமாகி வழிகின்றன
வாக்குறுதிகள் என்று எவையுமில்லை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024