A POEM BY
KALAPRIA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
well in advance
and are sitting there
eye all those who get inside afterwards
mostly as enemies.
Even if the luggage of those prove
lighter than these ones
the former ones eye them contemptuously
as if decrying them for bringing so much.
and maintain a grim silence.
‘Is there a delay in departure’
When would it reach the destination’
_ For such queries
they either respond in abject indifference
or curtly answer in a word or two
and shut their mouth.
But for all the calls through mobile
they provide answers all too pleasantly.
For the lower-birth passengers
nightmares would have started
since the day before itself
with some aged ones asking for exchange of births.
Yet
when the train starts moving
a proximity blossoms
That too when it comes to lovely women
they nurture the readiness to help them
going to the extent of pulling the Alarm Chain
While alighting at their destination
The hearts swell in kindness supreme.
in the manner of living in advance
the closing moments of Life.
முந்தியே வாழ்வது
______________________
ரயில்ப் பெட்டிக்குள்
முன்னதாக ஏறி
அமர்ந்திருப்பவர்கள்
பின்னதாக ஏறும்
ஒவ்வொருவரையும்
அநேகமாக விரோதத்துடன்
நோக்குகிறார்கள்
அவர்களது பயணப் பொதிகள்
தங்களை விடச் சிறிதானாலும்
ஏன் இவ்வளவு சுமக்கிறார்கள்
என்பது போல முகச் சுழிப்பு பொங்க
ஒரு மௌனம் காக்கிறார்கள்
வண்டி தாமதமோ
சேர நிமித்தப்பட்ட ஊருக்கு எப்போது
போய்ச் சேரும் என்பது
போன்ற கேள்விகளுக்கு
அசிரத்தையாக அல்லது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
பதில் சொல்லி
வாயை மூடிக் கொள்கிறார்கள்
ஆனால் வரும் அலைபேசி
அழைப்புக்கு அதே பதில்களை
பிரியத்துடன் சொல்கிறார்கள்
கீழ்ப் படுக்கைக் காரர்களுக்கு
நேற்றிலிருந்தே
துர்ச் சொப்பனங்கள்
யாராவது வயசாளிகள்
தங்கள் இருக்கையை
மாற்றித் தரும்படிக் கேட்பதாக
என்றாலும்
ரயில் புறப்படும் போது ஒரு
அந்நியோன்யம் வந்து விடுகிறது
அதிலும் அழகான பெண்கள்
என்றால் அபாயச் சங்கிலியை
இழுத்துக் கூட உதவத் தயாரான
எண்ணங்களை
வளர்த்துக் கொள்கிறார்கள்
இறங்கிப் போகும்போது
பெருங் கனிவு கொள்கிறது மனம்
ஆம்
முடிவுறுகிற வாழ்வுக் கணங்களை
முந்தியே வாழ்வது போலவே
No comments:
Post a Comment