INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

MUJAHITH SHARIF

 A POEM BY

MUJAHITH SHARIF


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I stood by
Thinking something would alight from the sky
Here I means I alone
None came down to help me learn how to walk
They have gone
From inside the earth a conclusion would surface,
So I thought…
Here I am not I alone
Nothing came out to hold my legs
and make them repose
They have gone
That a message would spread from the wind
Thought I and wandered in search of it
Nothing surfaced to wipe the eyes and .
Provide solace
They have gone
That a loss of memory would sprout from within
Thought I
I here is neither I nor You
for hiding the dreams and helping you fall asleep
Nothing took place
They have gone
They have gone
They have gone

ஆகாயத்திலிருந்து
ஏதாவது இறங்குமென பார்த்திருந்தேன்
நான் என்பது இங்கு நான் தான்
கைவிரல் பிடித்து நடைபழக்க யாரும் இறங்கவில்லை
அவர்கள் சென்றுவிட்டனர்
பூமிக்குள்ளிருந்து
முடிவொன்று வெளிப்படுமென எண்ணியிருந்தேன்
நான் என்பது இங்கு நானாக இல்லை
கால்களை பிடித்து ஓய்வெடுக்கச்செய்ய எதுவும் வெளிப்படவில்லை
அவர்கள் சென்றுவிட்டனர்
காற்றிலிருந்து
செய்தியொன்று பரவுமென தேடியலைந்தேன்
நான் என்பது இங்கு நீயாகவும் இல்லை
கண்களை துடைத்து அமைதிப்படுத்த எதுவுமே பரவவில்லை
அவர்கள் சென்றுவிட்டனர்
எனக்குள்ளிருந்து
மறதியொன்று தோன்றுமென நினைத்திருந்தேன்
நான் என்பது இங்கு நானுமில்லாதது நீயுமில்லாதது
கனவுகளை மறைத்து தூங்கவைக்க எதுவுமே நிகழவில்லை
அவர்கள் சென்றுவிட்டனர்
அவர்கள் சென்றுவிட்டனர்
அவர்கள் சென்றுவிட்டனர்
~
முஜாஹித் ஷரீப்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE