A POEM BY
AASU SUBRAMANIAN
awaits your arrival
Yesterday it was waiting for me
The day before
it was waiting for her.
Sprouting a flower
for everyone
it languished with no arrival.
For the jasmine with face turned radiant
in the soft shower of the morn
a flower it presented
In the joy of your arrival tomorrow
which is waiting to bestow a gift
it collects buds today.
Sitting upon the sprouting leaf of it
which with heart full of
the fragrance of love
is waiting for all, for ever
I too am waiting for your arrival
without fail.
இன்றென் தோட்டத்தில்
ஒரு மல்லிகைக் கொடி
உங்கள் வருகைக்காய் காத்திருக்கிறது
நேற்று எனக்காய் காத்திருந்தது
முந்தாநாள் அவளுக்காய் காத்திருந்தது
ஒவ்வொருவருக்கும் ஒரு பூ பூத்து
வருகையின்றி வாடியது
காலையில் சிறு தூறலில்
முகம் மலர்ந்த மல்லிகைக்கு
ஒரு பூவை பரிசளித்தது
நாளையும் பரிசளிக்கக் காத்திருக்கும்
உங்கள் வருகையின் மகிழ்வில்
இன்றோ மொட்டுக்களை சேகரிக்கிறது
மனம் அளவு நேசத்தின் வாசனையால்
எல்லோர்க்கும் காத்திருக்கும்
அதன் தளிரில் அமர்ந்து காத்திருக்கிறேன்
நானும் உங்கள் வருகைக்காய்.
- ஆசு
No comments:
Post a Comment