TWO POEMS BY
MULLAI AMUTHAN
(1)
My grand-daughter who left yesterday to her place
The Tea given by her grandma turned cool
Her paternal uncle returning from the field
after untying his headgear and giving it a shake
went and sat near the little girl
asking affectionately, “Who is this – My Darling little angel?”
She responded with just a smile.
Grand-daughter’s arrival has
gathered all kith and kin
all over the house.
Her mother gave away gifts to one and all.
In the end
the little girl
unfolding something like a pack of cards
held close to her heart one out of it
and smiled with all the affection in the world.
It was the photograph of mine
who had breathed his last
someday in the past.
நேற்று ஊர் சென்ற பேர்த்தி
பழைய புகப்படங்களை கிளறிக்கொண்டிருந்தாள்.
அவள் பாட்டி கொடுத்த தேநீர் ஆறிப்போனது.
வயலுக்குசென்று வந்த சித்தப்பா மண்வெட்டியை கொல்லையில் வைத்துவிட்டுத் தலைத்துண்டை உதறிக்கொண்டு 'யாரது..இந்தக்குட்டி..நம்ம செல்லமோ?’
அருகில் அமர்ந்தார்.
அவளிடமிருந்து புன்னகை மட்டுமே கிடைத்தது.
பேர்த்தி வந்திருக்கிறாள் என்று
உறவுகள் வீட்டை நிறைத்திருந்தனர்.
அவளின் அம்மா எல்லா உறவுக்காரர்களுக்கும் பரிசு கொடுத்தாள்.
பேர்த்தி கடைசியாக
சீட்டுக்கட்டு போல ஒன்றை எடுத்துப் பிரித்து
அதனுள் ஒன்றை நெஞ்சோடு அணைத்தபடி
புன்னகைத்தாள்.
சென்ற ஒரு நாளில் காலமாகிப்போன
எனது புகைப்படம்..
முல்லைஅமுதன்
(2)
Today
I had a face-to-face session with the one
Returned from it.
Despite protesting
that lifting Thulasi hurriedly and dragging her to the vehicle
and throwing her inside
Is indeed a violent act
She couldn’t be saved in tact.
She too accuses me of betraying her in love.
When I went to claim our house snatched away atrociously
Get lost you madcap – do what you can – the words spat at me in rage
I do recall.
While journeying along in the company of Ilayaraja
My friend made Rahman run along
Sticking poster on the death anniversary of Bharathiar
the Police beat him black and blue and
eventually released him
branding him insane.
Speaking a lot
father would refer to him as the one deranged
Would even talk a little more
Mother wouldn’t talk at all
What can I do – My Lord
Now my heart yearns to have me confined
inside an asylum.
மனநல மருத்துவமனைக்கான வழியை கேட்டிருந்தேன்.
திசைகள் மௌனித்திருந்தன.
இன்று
மருத்துவனையிலிருந்து வந்தவனிடம்
நேர்காணல் செய்தேன்.
அவசர அவசரமாக இழுத்துசென்று வாகனத்தில்
துளசியை தூக்கிப்போட்டமை வன்முறை என குரல் கொடுத்தும் அவளைக் காத்துக் கொள்ள முடியவில்லை.
அவளும் நானே காதலில் ஏமாற்றியதாக குற்றம் சுமத்துகிறாள்.
அடாத்தாக பறித்துக்கொண்ட நமது வீட்டைக் கேட்கப்போகையில்
போடா பைத்தியக்காரா!போய் உன்னால் முடிந்ததை பார் என்று கோபப்பட்டதையும்
நினைத்துப்பார்க்கிறேன்.
இளையராஜாவுடன் பயணிக்கையில் ரஹ்மானை ஓடவிட்டான் நண்பன்.
பாரதியார்
நினைவுநாளில் சுவரொட்டி ஒட்டியதால் காவல்துறை நையப்புடைத்து பைத்தியம் என்று விடுதலை செய்தது.
அதிகம் பேசுவதால் அடிக்கடி விசரா என்றே சொல்வதுண்டு.அப்பா அதைவிட கொஞ்சம் அதிகமாய் பேசுவதுமுண்டு.
அம்மா பேசுவதேயில்லை.
என் செய்வேன் பராபரமே!
இப்போது எனக்கு மனநலமருத்துவமனைக்குள் அடைந்துவிட துடிக்கிறது மனது.
முல்லைஅமுதன்
No comments:
Post a Comment