INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

MA.KALIDAS

 A POEM BY

MA.KALIDAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I move away from here

Loaded fully like a snail
My move is not merely connected with legs
Lie wind it has a vast expanse of space
It is like the river
waiting to be unleashed from the dams.
The song of the sunbird
The howl of the dog unable to mate
The finger that accidentally touched the Veena
In great haste
Making them all squat in the water
dripping out of the pitcher
_Such legs my move resemble
A little while ago
someone has bought my Move
for an exorbitant price.
My stickiness
keep spreading everywhere
in abject helplessness.
The time has come for me to repose
renouncing movement or forgetting it with ease
My need of the hour _
Legs eight and hands four.

நான் இங்கிருந்து நகர்கிறேன்
முழுச்சுமையுடன் நத்தையைப் போல.
கால்களோடு மட்டும் தொடர்புடையது அல்ல
என் நகர்வு
காற்றைப் போல பெருவெளி கொண்டது
தேக்கங்களிலிருந்து விடுபடத் துடிக்கும்
நதி போன்றது.
தேன்சிட்டின் பாடலை
புணரவழியற்ற நாயின் ஓலத்தை
தற்செயலாக வீணையின் மீது பட்ட விரலை
அதிவேகத்தில்
குடுவைக்கு வெளியே சிந்தும் நீரில் சம்மணமிடும் கால்களை ஒத்தது
என் நகர்வு.
சற்றுமுன் என் நகர்வை
யாரோ அநியாய விலைக்கு
வாங்கிச் சென்றார்கள்.
என் பிசிபிசுப்பு
திக்கற்றுப் பரவிக் கொண்டிருக்கிறது.
நகர்தலைத் துறந்து அல்லது மறந்து
நான் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது
என் இப்போதைய தேவை
நான்கு கைகளும் எட்டு கால்களும்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024