INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

MA.KALIDAS

 A POEM BY

MA.KALIDAS


Translated into English by Latha Ramakrishnan

No musical notations

Nor Hairdressing, Makeup
Tickets Chairs
Audience Applause
Curtain
for certain
they are but redundant
For the song that is no song
the squeals of bird and squirrel
provide the background music
Blowing breeze
Dropping dry leaves
The midday sun turning misty
The white clouds on the move changing forms
pursue those hands and legs
swaying to their hearts’ singular rhythm.
She the unknown
seeing none
goes on dancing
Those sick-minded ones move on
in abject indifference
At the close of the dance
the coins dropping out of the sari-pleats
tucked at the hipside
and scattering
resonated Yadukula Kamboji.

மா.காளிதாஸ்

எந்த இசைக் குறிப்புகளும் இல்லை.
சிகையலங்காரம், ஒப்பனை
நுழைவுச்சீட்டுகள், நாற்காலிகள்
பார்வையாளர்கள், கைதட்டல்கள்
திரைச்சீலை ஏதுமில்லை
அதற்கான அவசியமுமில்லை.
பாடல் அல்லாத பாடலுக்கு ஒத்திசைகிறது
பறவை மற்றும் அணிலின் கீச்சொலி.
தன் போக்கில் அசையும் கை கால்களைத் தொடர்கின்றன,
விட்டுவிட்டு வீசும் இளந்தென்றலும்
உதிரும் சருகும்
மங்கும் மதிய வெயிலும்
நகர்ந்து உருமாறும் வெண்மேகமும்.
யாரென்றே தெரியாத அவள்
யாரென்றே தெரியாத
யாரையும் கவனிக்காமலே
நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.
எதையும் சட்டை செய்யாமல்
நகர்கிறார்கள் மனப்பிறழ்வுக்காரர்கள்.
நடனத்தின் முடிவில் சரிசெய்யப்படும் இடுப்புக் கொசுவத்திலிருந்து
சிதறிய சில்லறைகள்
யதுகுல காம்போதியை எழுப்பின.
- மா.காளிதாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE