TWO POEMS by
KOSINRA
If at all I have to tell you something....
this is what I have....
The dream that I had found out for you,
from the life of our forefathers
while you were in your mother’s womb itself....
Changing many a body
many a script
this dream is now
with me.
If it is to be known
that you have this in your possession
you would be killed instantly.
Enemies can arrive
in any manner whatsoever.
As the incarnation of God,
in the form of State’s concessions,
as the leaflet of a Caste,
as the policy of a political party,
as the mega-serial coming out of the Television.
You have to be vigilant.
From the sand-particles shaken out of the dream
you should write about our soil.
Inhaling its fragrance
You should search for
our life unscathed.
This dream as a great grand ocean
can contain many a river.
This dream as the universe
can hold many a planet.
This dream like a tiny matchstick
can burn any forest.
Whatever it is _
you alone ought to
initiate;
undertake.
மகனுக்கு அப்பாவிடமிருந்து
மகனே
உனக்கேதேனும் சொல்லவேண்டுமென்றால்
ஒன்றிருக்கிறது சொல்வதற்கு.
உன் அம்மாவின்
கருவரைக்குள்ளிருக்கும்போதே
நான் உனக்காக
மூதாதையர்களின் வாழ்விலிருந்து
கண்டெடுத்த ஒரு கனவை….
இந்தக் கனவு
எத்தனையோ உடல்களை மாற்றி
லிபிகளை மாற்றி
இப்போது என்னிடம் இருக்கிறது.
இதை நீ வைத்திருப்பதாகத் தெரிந்தால் போதும்
நீ கொல்லப்பட்டுவிடுவாய்.
எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்
கடவுள் அவதாரமாக
அரசாங்கம் வழங்கும் சலுகையாக
ஒரு சாதியின் துண்டறிக்கையாக
அரசியல் கட்சியில் ஒரு கொள்கையாக
தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிவரும்
ஒரு நீண்ட தொடரைப் போல.
நீ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
அந்தக் கனவிலிருந்துஉதறிய மண் துகளிலிருந்து
நம் நிலத்தைப் பற்றி எழுதவேண்டும்.
அதன் வாசனையை நுகர்ந்து
நம்முடைய சிதிலமடையாத வாழ்க்கையை தேடவேண்டும்.
இந்தக் கனவு
பெரிய சமுத்திரத்தைப் போல
நிறைய நதிகளை அடக்கலாம்.
இந்தக் கனவு பிரபஞ்சத்தைப் போல
நிறைய கோள்களை நிறுத்தலாம்.
இந்தக் கனவு சிறிய தீக்குச்சிபோல
எந்த பெரிய காட்டையும் எரிக்கலாம்.
நீதான் செய்தாகவேண்டும்
எதையும்.
a lie fell out.
Who would’ve put it inside?
Whose it could be?
It could be the younger brother
who smokes stealthily.
It could be mother who saves money
In the piggy-box
keeping father in the dark.
It could be father who went
for a movie
without the knowledge of mother.
Whose lie is it, don’t know _
It still remains there.
Someone from the political meeting
where I stopped for a while
could’ve put it.
I visited the temple. Didn’t I?
Could it be the priest then?
How came this lie
inside my shirt-pocket?
I should lose it somewhere....
or
keep it in full view of one and all….
All too close to Truth
in exactly the same hue.
பொய்
ஒருநாள் என் சட்டையை உதறும்போது
வந்துவிழுந்தது பொய்.
யார் போட்டிருப்பார்கள்?
யாருடையதாக இருக்கும்?
வீட்டுக்குத் தெரியாமல் புகை பிடிக்கும்
தம்பி போட்டிருக்கலாம்
அப்பாவுக்குத் தெரியாமல் உண்டியல் சேர்க்கும்
அம்மா போட்டிருக்கலாம்.
அம்மாவுக்குத் தெரியாமல் சினிமா போய்வந்த
அப்பா போட்டிருக்கலாம்.
யாருடைய பொய்யோ தெரியவில்லை
இன்னும் அப்படியே கிடக்கிறது
நேற்றிரவு நின்ற அரசியல் கூட்டத்தில்
யாராவது போட்டிருக்கலாம்.
கோவிலுக்குப் போய்வந்தேனே
பூசாரி போட்டிருக்கலாமோ?
எப்படி வந்தது இந்தப் பொய்
என் சட்டைப்பைக்குள்?
எங்காவது தவறவிட்டுவிட வேண்டும்….
அல்லது
யார் கண்ணிலும் படும்படியாக
வைத்துவிட வேண்டும்….
உண்மைக்கு வெகு அருகில்
அதே நிறத்தோடு.
கோசின்ரா
(என் கடவுளும் என்னைப்போல் கறுப்பு’ தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment