INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

AASU SUBRAMANIAN

 THREE POEMS BY

AASU SUBRAMANIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)


Know that tears are nothing but
dewdrops caught in the thorn fence
Time is but the song
that entwines its hand with the wind
Music is but serpent subdued by the
Snake charmer.
Flower is but butterfly
that goes dashing against the finger
Know that light is but twilight
that consumes the Day.

Aasu Subramanian

முள்வேலியில்
சிக்குண்ட பனித்துளியே
கண்ணீர் என அறிக.
காற்றில்
கைக்கோர்க்கும்
பாடலே
காலம் என அறிக.
மகுடிக்கு
கட்டுப்படும் நாகமே
நாதம் என அறிக.
விரலில் மோதிச் செல்லும்
பட்டாம் பூச்சியே
மலர் என அறிக.
பகலை விழுங்கும்
அந்தியே
வெளிச்சம் என அறிக.

# ஆசு

(2)

Showing me the star inside moon
You revel
One universe
One sea
One sky
Nothing more
But
This moonraft
would take me to the shore in tact
this sea won’t
drown me
submerging in tornado
or torrential downpour
it knows well crawling and playing
under the care of the great grand
Motherly love.
In starry camaraderie
someone swings my cradle
singing lullaby.

Aasu Subramanian

நிலவுக்குள்
நட்சத்திரம் காட்டி
ஆனந்திக்கிறாய்
ஒரு பிரபஞ்சம்
ஒரு கடல்
ஒரு வானம்
அவ்வளவுதான்
ஆனால்
இந்த நிலவுப் படகு
கரை சேர்க்கும்
புயலிலோ
பெரும் மழையிலோ
அமிழ்ந்து
இந்தக் கடல் மூழ்கடிக்காது
தாயின் பேரன்பில்
தவழ்ந்து விளையாடுவதை
அதுவும் அறியும்.
நட்சத்திரத் தோழமையில்
என் தொட்டிலை
யாரோ தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-ஆசு

(3)

The hunger of ants that drag along
the morsel
Who at all could know well
Earlier it was paddy
Prior to paddy it was
crop
Before crop
It was a seed
After seed
Crop
Paddy
Morsel
it turned out to be
Only when hungry
the ants took away the morsel
Hunger as pain unbearable of Mankind
Do the paddy and grass are aware of that?
O Land
When your hunger is appeased
Where are the saplings for us
In one node
two flowers
One is hunger
Another is fruit
Even when someone says
That some fruits are still left
In the sheath of the famished
In the razor edge of the swords
In the night sliced
In the stomach of mine
sprout and turn into a shoot
_ A Seed.
Aasu Subramanian
பருக்கையை
இழுத்துச் செல்லும்
எறும்புகளின் பசியை
யார்? அறிவர்
முன்பு அது
நெல்லாய் இருந்தது
நெல்லுக்கு முன்
பயிராய் இருந்தது
பயிருக்கு முன்
விதையாய் இருந்தது
விதைக்குப் பின்
பயிர்
நெல்
பருக்கையாக இருந்தன
பசியாய் இருந்தபோது தான்
எறும்புகள் கவர்ந்தன
பருக்கையை.
பசி மானுடத்தின் வலியாக
அந்த நெல்லும் புல்லும் அறியுமா?
நிலமே
உன் பசி தீர்கையில்
எங்களுக்கான
தளிர்கள் எங்கே?
ஒரு கணுவில்
இரு பூக்கள்
ஒன்று பசி
இன்னொன்று கனி
கனிகள்
மிச்சமென யாராவது
சொல்கையிலும்
பசித்தவனின் உறையில்
வாட்களின் கூர்மையில்
துண்டாடும் இரவில்
எனக்கான வயிறில்
முளைத்து தளிராகும்
ஒரு விதை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024