INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

PAALAINILAVAN

 A POEM BY

PAALAINILAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


SHE WHO HAS COME A LONG WAY

Despite plants numerous ceasing to be on the earth
a small plant has been safeguarded so vigilantly.
When the all too tiny yellow flowers in that
feeling that the tears of joy have
turned them immortal
begin to dance
swaying their heads
the early morn has been poured in a supreme state.
A poor mother looking like she had walked a great distance
stands so anguished for some reason
near the closed door of the boarding house.
When the door was unbolted
Screaming “Mother”
comes there a young woman.
With eyes blurred and tears swelling
the mother asks, “Are you safe and sound, my dear?”
Each and every mother
the world over
has been asking the same question to their daughters
year after year..
In those days when these mothers were
daughters
How much they would have struggled
to remain secure
How did the small plant
being safe
after the extinction of plants numerous
has survived for so long concealing itself.
That is something great .
I knew not that
In cruel times
the phrase ‘’Take care’
is a spark of fire crouching in a massive wave.
A mother teaches that to her daughter dear.
I have a daughter dear;
I can’t stay away from tears.

தொலைவிலிருந்து வந்தவள்
பூமியில்
எத்தனையோ தாவரங்கள்
ஒழிந்தும்
ஒரு
சிறிய செடி
அவ்வளவு பத்திரமாக
காக்கப்பட்டுள்ளது
அவற்றிலிருந்த
மிகவும் சிறிய மஞ்சள் மலர்கள்
ஆனந்தத்தின் கண்ணீரால்
நிலை பெற்றோமென
தலையை சிலுப்பி
ஆடத் துவங்குகையில்
அதிகாலை மகத்துவ நிலையில்
ஊற்றப்பட்டுள்ளது
நீண்ட தொலைவிலிருந்து
நடந்துவந்தவள் போலுள்ள
ஒரு ஏழைத் தாய்
விடுதியின்
சாத்தப்பட்டுள்ள கதவினருகே
எதற்காகவோ பரிதவித்து நிற்கிறாள்
தாழ்ப்பாள் நீங்கிய
கதவு திறக்கப்பட்டதும்
அம்மா என்கிற பீறிடலுடன்
ஓர் இளம் பெண்
தொலைவிலிருந்து வந்தவள்
கண்கள் குளமாக
"பத்திரமா இருக்கியா தாயி", என்கிறாள்
உலகத்திலுள்ள
ஒவ்வொரு தாயுமே
தங்கள் மகள்களிடம்
இதே கேள்வியைத்தான்
காலகாலமாய்
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்
அந்தத் தாய்கள்
மகள்களாக இருந்த காலத்தில்
பத்திரமாக இருக்க
எவ்வளவு போராடியிருப்பார்கள்
பூமியில்
எத்தனையோ தாவரங்கள் அழித்தொழிக்கப்பட்டபின்பு
பத்திரமாக இருக்கும்
ஒரு சிறு செடி
தன்னை
எப்படி மறைத்து ஒளித்து வைத்து
இதுகாறும் வாழ்ந்து வந்தது
அதுவே மகத்துவம்
கொடுமையான காலத்தில்
பத்திரம் என்கிற சொல்
பேரலையில் பதுங்கிய தீப்பொறியென்று
எனக்குத் தெரியாது
அதை
ஒரு தாய் சொல்லிக்கொடுக்கிறாள்
நான்
ஒரு மகளை பெற்றவன்
என்னால் அழாமலிருக்க இயலாது
பாலைநிலவன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE