TWO POEMS BY
THENMOZHI DAS
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Along the hospital stairway
the footsteps of all the countries
sound the same.
In the courtyard of the house
the red-hued dry leaf of ‘Thuthi’ tree
remind me without fail
the little girl from Bangladesh.
Whenever the koel sings in its singular ‘shruthi’
Coo… cooo
The Sri Lannkan boy Shameer invariably
visits me.
While leafing through the pages of last year’s diary
The scarlet hair of the boy Bhilal from Pakistan
churns my heart
At the final parting
from the hospital
the split and rift between countries ceasing to be
when the fingers feverishly try to rescue
the heart swells in love.
Let all guns be lost without a trace
Let there prevail love and solace.
மருத்துவமனைப் படிக்கட்டுகளில்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மருத்துவமனைப் படிக்கட்டுகளில்
எல்லா நாட்டுக் காலடித்தடங்களும்
ஒன்று போலவே கேட்கின்றன
வீட்டு முற்றத்தில்
துத்தி மரத்துச் சிவப்புச் சருகு
துத்தி எனும்
வங்க தேசத்துச் சின்னப் பெண்ணை
ஞாபகமூட்டுகிறது
கூ. .... என ஒற்றைச் சுதியில் குயில்
கூவும் போதெல்லாம்
சிங்களச் சிறுவன் ஷமீர்
வந்து போகிறான்
போன வருட நாட்குறிப்பை புரட்டுகையில்
பாகிஸ்தான் நாட்டு
பிலால் என்ற சிறுவனின் செவலை முடி
மனதை என்னவோ செய்கிறது
மருத்துவமனையிலிருந்து
கடைசி நேரப் பிரிவில்
நாட்டின் பிளவுகள் தாண்டி
விரல்கள் பதறுகையில்
மனம் நேசத்தில் நிறைகிறது
எல்லா துப்பாக்கிகளும்
தொலைந்து போனால் நலமாயிருக்கும்
UNGLE
The trees wear the cloud’s breath
The cloud, the river of earth’s womb
Earth, the eras and eons as decomposed soil
The soil, the eyes of the people of those times
People, the veins and nerves of plants
wear.
The plants wear the bones of men
Bones, the blood of women
Blood, the life of body
Life, the flesh of body
Flesh, the wastes of wind
wear.
The wind wears the faces of roots
Roots, the sky
Sky, the planets
Planets, Light
Light, darkness
Darkness secrets
Secrets , men
wear
Men wear women’ salt.
Female salt
is soil dug out of wilderness
Man’s body is clay-ball
Woman’s body
God’s fingerprint
God’s hand
is the Woodland.
காடு
°°°°°
வனாந்தரம் மரங்களை உடுத்தியிருக்கிறது
மரங்கள் மேகத்தின் மூச்சினை
மேகம் பூமியின் கருவறை நதியை
பூமி காலங்களை மக்கிய மண்ணென
மண் அக்காலத்து மனிதர்களின் கண்களை
மனிதர்கள் தாவரங்களின்
நரம்புகளை உடுத்தியிருக்கிறோம்
தாவரங்கள் மனிதனின் எலும்புகளை
எலும்புகள் பெண்ணின் இரத்தத்தை
இரத்தம் உடலின் உயிரை
உயிர் உடலின் சதையை
சதை காற்றின் கழிவை உடுத்தியிருக்கிறது
காற்று வேர்களின் முகங்களை
வேர்கள் ஆகாயத்தை
ஆகாயம் கோள்களை
கோள்கள் ஒளியை
ஒளி இருளை
இருள் ரகசியங்களை
இரகசியங்கள் ஆண்களை உடுத்தியிருக்கின்றன
ஆண்கள் பெண்ணின் உப்பை
பெண்ணின் உப்பு
வனாந்தரத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்
ஆணின் உடல் களிமண் கட்டி
பெண்ணின் உடல்
கடவுளின் உள்ளங்கை ரேகை
கடவுளின் கை காடு
Composed by - Thenmozi Das . 18.2.2004
No comments:
Post a Comment