INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

AK.MUJARATH

 A POEM BY

AK.MUJARATH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



POETRY IS HARMONY

Drawing a bird with a sharp pencil
When I made it wings to stir
At first it takes the sheet of paper to be the sky.
Then beginning to fly all over the sheet of paper
As the bird experienced nothing but void
Deciding to move out
It enters inside a poem.
Seeing the humans and fellow species there
It feels happy.
Also
Realizing the existence of a world
Inside the poem
When it resolved to stay there for ever
All those forty-eight words in it
Alighted and were talking to the bird.
When i finished writing
That Poetry means
the Baby-walker training one to lead life
or the path harmonizing all kinds of love
the reader got into poetry
mysteriously
.
AK Mujarath

கவிதை என்றால் ஒன்றிணைப்பு
கூர்மையான பென்சிலால்
பறவையொன்றை வரைந்து
அதன் சிறகுகளை
அசைய விடும் போது
காகிதத்தை முதலில் வானமாக நினைக்கிறது
பின்பு காகிதம் முழுக்க
பறக்கத் துவங்கிய பறவை
வெறுமையை மாத்திரம் அனுபவித்ததால்
வெளியேறுவதாக தீர்மானித்த அப்பறவை
கவிதையொன்றினுள் நுழைகிறது
பின்பு
கவிதைக்குள் நடமாடித்திரியும்
மனிதர்களையும்
சக இனங்களையும் கண்டு
மகிழ்வு கொள்கிறது
மேலும்
கவிதைக்குள் ஒரு உலகம்
இயங்கிக் கொண்டிருப்பதை
உணர்ந்து
நிரந்தரமாக வசிப்பதற்கு
முடிவு செய்தபோது
இதிலுள்ளே நாற்பத்தியெட்டு சொற்களும் கீழிறங்கி
பறவையோடு பேசிக் கொண்டிருந்தன
கவிதை என்றால்
வாழ்க்கையை நடத்தப்பழக்கும் நடைவண்டி
அல்லது ப்ரியங்களை ஒன்றிணைக்கும் பாதை என்பதை
எழுதி முடித்தபோது
வாசகன் மாயமாக
கவிதைக்குள் நுழைந்தான்.
ஏ.கே.முஜாரத். 14.06.2021

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024