INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

RIYAS QURANA

 A POEM BY

RIYAS QURANA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)





Upon he who was walking along the road
the glow alighting from the reckless morning sky
Spreads.
Body is but the hopeless endearment at the roadside
He looks up and views that shine falling upon that affection
and burns it softly.
By this time should have crossed more distance
But my walking exercise is circling round the Moon alone
thought he.
The way the sound of rain stopping go past the ears
Memories lilt and leap and vanish
If we try
Two opportunities are there to wipe out the distance
It is thinking a pair of sentences
and to keep the heart wide-open for the sentences to
take shape
In the manner of walking for long.
crossing the tree-branches
and climbing down fully in the water-tank lying on the roadside
when the Moon sways in the waves
he would have crossed the distance.
He returns home
Keeping pace with the hurrying footprints
the road is getting erased.
Where stands his home
When he begins to search for it
the roads too surface.

Riyas Qurana

சாலை வழியாக நடந்து செல்லும் அவன்மீது,
பொறுப்பற்ற காலை வானத்திலிருந்து
இறங்கும் ஒளி படருகிறது.
சாலை ஓரத்தில் உள்ள
நம்பிக்கையற்ற ஒரு பாசம்தான் உடல்.
அதில் விழுந்து மெலிதாய் சுட்ட ஒளியை
அண்ணார்ந்து பார்க்கிறான்
இன்னேரம் கடந்திருக்க வேண்டிய தூரம் அதிகம்
ஆனால், நிலவைச் சுற்றியே தனது நடைப்பயிற்சி
என நினைத்துக்கொண்டான்
மழைவிட்ட ஓசை காதுகளைக் கடந்து செல்வதைப் போல
நினைவுகள் துள்ளி மறைகின்றன
முயற்சித்தால்,
தூரத்தை அழிப்பதற்கு இரண்டு
வாய்ப்புக்கள் இருக்கிறது
மனதில் ஒரு சோடி வாக்கியத்தை நினைப்பதாகும்
நெடுங்காலம் நடந்ததைப் போன்று
அந்த வாசகங்கள் உருப்பெற
மனதை பொதுவாய் திறந்துவைப்பதாகும்
மரக்கிளைகளைக் கடந்து
சாலையில் கிடக்கும் நீர்த்தொட்டியில்
முழுதாக இறங்கி அலைகளில் நிலா அசையும்போது
தூரத்தைக் கடந்திருப்பான்
அவன் வீடுதிரும்புகிறான்
பாதச்சுவடுகளின் வேகத்திற்கேற்ப
சாலை அழிந்துகொண்டு வருகிறது
அவனுடைய வீடு எங்குள்ளது
அதைத் தேடத்தொடங்கும்போது
சாலைகளும் உருவாகிவிடுகின்றன.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE