INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

DILOGINI MOSES

 A POEM BY

DILOGINI MOSES


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Hey you Flutist-par-excellence!!!!
How come the universal sweetness overflows
in the song you play?
In your flute that gives out the ‘Alapanas’
for one and all
Why there is angst that erodes the heart?
You must have stolen the love songs of
the primordial female,
stuffed them inside your flute
and pour them out as music – right?
There, in the soulful music of your flute
sorrows unwritten have been redeemed.
Poems untold have attained deliverance.
My life-bird gaining wings
come and sit in the holes of your flute.
Can the sky’s expanse be
more than that of Music?

குழலிசைக்காரா!!!!
நீ மீட்டுகிற பாடலில்
பிரபஞ்ச இனிமையெல்லாம்
ததும்பி வழிகிறதேன்
எல்லோருக்குமான
ஆலாபனைகளை
இசைக்கிறவுன் குழலில்
ஆத்மமுருக்கும்
வேதனை தொனிக்கிறதேன்
ஆதிக்கிழவியின்
காதல் பாட்டையெல்லாம்
களவெடுத்து தானே
உன் குழலிலடைத்து
இசையாய் பொழிகிறாய்
அதோ உன்
குழலிசையால்
விமோசனம் பெற்றன
எழுதாத துயரங்கள்
மோட்சமடைந்தன
சொல்லாத கவிதைகள்
சிறகு முளைத்த என்
உயிர்ப்பறவை
உன்
குழற்றுழையில் வந்து
உட்கார்ந்து கொள்கிறது
இசையை விடவுமா
வானம் பெரியது!!!!
- டி.மோ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE