TWO POEMS BY
SHANMUGAM SUBRAMANIAM
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
The attentiveness on the key while opening
and upon opening
on the usual place of keeping the key
eluding
on throwing it into the hitherto unused niche
in the speed of the swirling fan
the moisture of the mess slowly drying
though the glow of the tube-light
in the front room
slightly dispersing the dark quietude
of the other ones
eager to enjoy the bliss of composure
prevailing everywhere
when I stepped inside
the void-filled whiteness of the mercury-light
moving away
the shape of the key leaving me
now the sound of the unlocked door
being opened is heard.
The count of keys in the hands
of one and all
to unlock _
the doors wide-open, in stock,
exceed, after all.
Shanmugam Subramaniam
திறக்கும்போது சாவியின் மீதிருந்த கவனம்
திறந்ததும் வழக்கமாக வைக்கும் இடத்தின் மீதான கவனம் வழுவிவிட
இதுவரை பயன்படுத்தாத மாடத்தின் மூலையில் வீசியதும்
மின்விசிறியின் ஓட்டவேகத்தில் கலைப்பின் ஈரம்
மெல்ல உலர
முன் அறையிலுள்ள குழ்ல்விளக்கின் துலக்கம்
மற்ற அறைகளின் இருளமைதியை லேசாக கலைத்தாலும்
படர்ந்திருக்கும் பதட்டமின்மையின் சுகத்தைத் துய்க்க
உள்ளே நுழைந்ததும்
குழல்விளக்கின் வெறுமை பூத்திருக்கும் வெண்மை விலகிச் செல்ல
சாவியின் வடிவம் என்னைவிட்டுவிட
இப்போது பூட்டாத கதவைத் திறக்கும் சத்தம் கேட்கிறது
திறக்க எல்லோரிடமுள்ள சாவிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும்
விசாலமாய் விரிந்துள்ள கதவுகளின் எண்ணிக்கை
மிகையானதே.
-எஸ்.சண்முகம் -
Though thoroughly dark, no confusion
in comprehending the direction.
In the leap of Time slipping away so fast
Leave-taking and vanishing
have become one and the same hour.
The distance of the scene is not something
within eyes’ reach.
How to spend the minutes getting accumulated
ere the seconds be counted
The togetherness now with space in-between
not just here but can take place
wherever we are
and in full view of us.
Everything becoming the same instant
happening in a trice
might some day be
our expertise.
Shanmugam Subramaniam
மலையடுக்குகளாய் காட்சிப்படுகின்றன மேகங்களின் கலையாமை
முழு ஒளியற்றிருப்பினும் திசையைக்
கிரகிப்பதில் குழப்பமில்லை
நழுவியோடும் நேரத்தின் பாய்வில்
விடைபெறுதலும் புலனாகாதலும் ஒரேபொழுதாகிவிட்டன
தெரியும் தூரமல்ல அக்காட்சி
நொடிகளைக் கணக்கிடும் முன்னரே
நிமிடங்கள் சேகரமாவதை எவ்வண்ணமாக செலவிடுவது
இப்போது இடைவெளியுடன் கூடிய ஒன்றுதல்
இங்குமட்டும் அன்றி எங்குள்ளோமோ
அவ்விடத்தில் நாமறியும்படி சம்பவிக்கலாம்
எல்லாமே
விரல்சொடுக்கும் அதே தருணமாதல்
என்றேனும் கைவரலாம்.
-எஸ்.சண்முகம் -
(*ஒரு கவிதை முழுமையாகப் புரிந்துவிட்டால்கூட அதை எளிதாக மொழிபெயர்த்துவிட முடியும் என்று சொல்லவியலாது. முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டதாயிருந்தால்...? நிறுத்தற்குறிகளற்றிருந்தால்...? ஆங்கிலத்திலாவது ஒரு வரியின் முதல் எழுத்து ‘காபிடல்’ எழுத்தில் ஆரம்பமாவதை வைத்து அது அடுத்த வரி என்று கண்டுகொள்ளலாம். ஆனால் தமிழில் அப்படியில்லை. கவிஞரிடம் கேட்கலாமென்றால் எனக்குள்ளிருக்கும் சிறுபத்தி ரிகை வாசகர் ‘உன் வாசகப்பிரதி என்னவாயிற்று?’ என்று இடித்துரைக்கிறார். என்ன செய்ய? என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன். கவிஞர் திருத்தங்கள் தந்தால் அவற்றைக்கொண்டு கவிதை மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்துவேன். நான் மூல கவிதையை எத்தனை தூரம் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை கவிஞரோ அல்லது மூல கவிதையோ மட்டுமே சொல்லமுடியும்! சொல்வார்களா?! - லதா ராமகிருஷ்ணன்}
No comments:
Post a Comment