INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

SHELMA PRIYADARSAN

 A POEM BY

SHELMA PRIYADARSAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Yet another word is left
Yet another glance
Yet another hug
The queen’s palace arrived through the back door of poetry
As one young the old censured had to be annihilated.
Mountain peak is yours
The drizzle there yours
Valley too yours
Water voluminous collected there
is also yours
While drinking a mouthful of the water of your solidity lingering in my palms
The emotions swelling in the countenances
With the rope growing thicker
and go round us squeezing and choking
Let’s dry the salt.
Now interlude.
Times and Tales swing and sway
to and fro front and back
The plants turn their chlorophyll
into their manure ever
The kisses of parting
let the wind blowing against your face
dry up.
When some Milky-ways revolve
in the vertical breach
born of our moving away after an embrace
yet another recall remains
Just one more course left
to return
Commune and cry in pain
Betray
Be alive
To avenge
and always part
depart.

Selma Priyadarsan

இன்னும் ஒரு வார்த்தை மிச்சமிருக்கிறது
இன்னும் ஒரு பார்வை மிச்சமிருக்கிறது
இன்னும் ஒரு தழுவல்
ஒரு கவிதையின் பின் வாசல் வழியே வந்த அந்தப்புரம்
இளையவனாய் தணிக்கையிலிருந்த முதியகடவுளை கொலை செய்ய வேண்டியிருந்தது
மலையுச்சி உனது
அங்கு பொழியும் சாரல் உனது
பள்ளத்தாக்கும் உனது
வந்தடைந்த நீர்சேகரமும் உனது
கைகளில் தேங்கிய உன் திண்மத்தின் துளிநீர் பருகுகைகளில் முகங்களில் கூடிவரும் கதாந்தங்கள்
கயிறு தடித்து சுற்றி இருக்குகையில்
உப்பை உலர்த்துவோம்
இப்போது இடைவேளை
முன்னும் பின்னுமாய் அசையும்
காலங்களும் கதைகளும்
தாவரங்கள் எப்போதும் தமது பச்சையத்தையே உரமாக்குகிறது
விடைபெறுதலின் முத்தங்களை
பயணங்களின் எதிர்காற்று உலர்த்தட்டும்
அணைத்து விலகுகையில்
நம் செங்குத்து இடைவெளியில்
சில பால்வெளி மண்டலங்கள் சுழலும்போது
ஒரு நினைவு கூறல் மிச்சமிருக்கிறது
இன்னும் ஒரு பாதைதான் மிச்சமிருக்கிறது
மீண்டும் வர
கூடிக் கதற
துரோகமிழைக்க
உயிர்த்திருக்க
பழிதீர்க்க
எப்போதும் பிரிந்து போக

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE