A POEM BY
SAMAYAVEL KARUPPASAMY
All at once this moment
tastes rather sweet.
'Come what may -
do away with dismay'
_ So a solid courage
fills my entire being.
The sorrows silently heaped
at the backyard
are hauled by the hurricane
coming from nowhere.
Sea waves don’t bang against the steps
at the entrance.
In the water seeping in plantain-tree leaves
the boisterous revelry of the
finger-sized tiny sparrows.
In the tongues of little lambs
relishing the vacant plot’s grass
newly born of the fresh rain
the taste of haste
drools.
It is the vitality of hunger and taste
that surrounds me always.
For sure, this instant is
supremely sweet.
Samayavel Karuppasamy
திடீரென இந்த நொடி
தித்திப்பாக இருக்கிறது
எதையும் சமாளித்து விடலாம்
ஏதோவொரு திடமான தைரியம்
மனமெல்லாம் நிறைகிறது
பின்முற்றத்தில் சப்தமில்லாமல் குவிந்திருக்கும் துயரங்களை
எங்கிருந்தோ வந்த சூறைக்காற்று
அள்ளிக் கொண்டு போகிறது.
வாசற்படிகளில் கடல் அலைகள் மோதவில்லை.
வாழைகளின் இலைகளில் வடியும் நீரில்
விரல் அளவுச் சிறு குருவிகளின் அட்டகாசம்.
காலி மனையின் புதுமழைப் புற்களையும்
படர்கொடிகளின் சிற்றிலைகளையும்
ஆசை ஆசையாய் மேயும்
குட்டி ஆடுகளின் நாக்குகளில் அவசரத்தின் ருசி
எச்சிலாய் வடிகிறது.
பசியின் ருசியின் உயிர்ப்பே
எப்போதும் என்னைச் சூழ்கிறது.
உண்மையில் இந்த நொடி
தித்திப்பாகத்தான் இருக்கிறது.
***
No comments:
Post a Comment