INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

LAKSHMI MANIVANNAN

 A POEM BY

LAKSHMI MANIVANNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




THE TRAVEL OF
A HUNDRED RUPEE NOTE
In the glow of dreamy dusk
the express train
with the howl filled with the wails of parting
gets ready to set out.
From his place tastes sour
Sankaravadivu climbs into the train
with his travel-box full of memories.
To his city sans
lavatory
Carrying in his heart
the room where too many sleep.
Sankaravadivus journey starts
shearing the sharp of the train’s shrieks.
Outside the moving train
the hand of the one
bidding a ritual farewell
insisting upon accepting the hundred rupee note
unwillingly by him
refuses to extend
In the recess appearing in the all too taut heart
of Sankaravadivu moaning there
“Oh, don’t want”
the hand extended unwillingly
makes a hasty retreat.
Seeing the distance of the tail end of the train
seen
and heaving a sigh
the hundred rupee not given
flutters all through Sankaravadivu’s journey
as a butterfly caught inside a compartment
buzzing and booming
along with the pale dreams of his cabin
sans toilet, turned sour.
Lakshmi Manivannan
பயணம் செய்யும் நூறு ரூபாய் நோட்டு
மயக்கம் மூண்ட ஒரு சாயுங்கால ஒளியில்
விரைவு ரெயில்
பிரிவின் ஓலம் நிறைந்த ஊளையுடன்
நிலையத்திலிருந்து தயாராகிறது.
கசந்த ஊரிலிருந்து
சங்கரவடிவு
நினைவுகள் அடைக்கப்பட்ட
பயணப்பெட்டியோடு
ரெயிலேறுகிறான்.
கழிப்பறையற்ற தனது நகரம் நோக்கி
பலர் தங்கும் அறையை
மனம் சுமந்து
சங்கரவடிவின் பயணம்
ரெயில் பயண ஓலத்தின் கூர்கிழிக்க
துவங்குகிறது .
நகரத் தொடங்கிய
ரெயிலுக்கு வெளியே
வெறுமை ததும்பும் வழியனுப்புதலோடு
தர விருப்பமற்ற நூறு ரூபாய் நோட்டைப்
பெற்றுக் கொள்ளச் சொல்லி
வற்புறுத்தும் வழியனுப்புபவரின் கரம்
நீள மறுக்கிறது .
' வேண்டாம் வேண்டாம் ' என
முனகிய சங்கரவடிவின் மனஇறுக்க இடைவெளியில்
தர விருப்பமற்று நீட்டிய கரம்
பின்னகர்கிறது.
கடைசி ரெயில்பெட்டியின்
தொலைவு கண்டு
பெருமூச்சு விட்ட பின்
கொடுக்கப்படாத நூறு ரூபாய் நோட்டு
ரெயில் பெட்டிக்குள் சிக்குண்டு பறக்கும்
பட்டாம்பூச்சியென
சங்கரவடிவின் பயணம் முழுவதும்
குருகுருத்து அலைகிறது
கழிப்பறையற்றுக் கசக்கும்
வெளிறிய தன் அறைக் கனவுகளோடு...
( மீள் )
[ "வீரலெட்சுமி" கவிதைத் தொகுப்பிலிருந்து - 2003 ]

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024