INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

RAJAPUTHRAN

 A POEM BY

RAJAPUTHRAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WORDSEA
The shadow with its feet on every leaf
has suffered no pain in aiding
by covering and removing the sheet of darkness
ebbing and flowing as waves
The breeze travelling from the fierce branch
never thanks the universe of Light
nor seeks solace
The wind moves on as pregnant cow
That which is the torso of earth
merging with grass
and that which is the body of grass
appeasing the hunger of earth
don’t cause wonder and awe.
This is an enchanting world
The eyes dancing on the bush of river
crouching in the pond
straightened the luscious bow
aiming the arrow of passion
With the midday growing hotter
asking the green tree some shade
the tiger shrouded in the skin of cow
feign
The day sinking in water
blood oozing out of bamboo scratch
The flowers laughed
If released from the tap
suicide is the only course.
The world became the calf
Plunged not in amazement.
In the heady aroma of the
mutton shop filling the nostrils
from the word-sea
discerning taste leaving the mind
on returning home
deadly hunger gripped the shepherd boy.

இராஜபுத்திரன் கவிதைகள்

சொல் ஆழி
★★★★★★
ஒவ்வொரு இலையிலும்
பாதமிருக்கும் நிழல்
இருள் போர்வையை
போர்த்துவதும் விலக்குவதுமாய்
ஒத்தாசை நல்கிட
அலையாய் இயங்குவதில்
வலி கண்டதில்லை
முரடானக் கிளையிலிருந்து
பயணிக்கும் தென்றல்
ஒளிப் பிரபஞ்சத்திற்கு
நன்றி சொல்வதும் இல்லை
ஆறுதல் தேடுவதும் இல்லை
சினைப் பசுவாக
இயங்குகிறது காற்று
புவியுடல் ஆனது
புல்லுடல் சேர்வதும்
புல்லுடல் ஆனது
புவிப்பசி தீர்ப்பதும்
வியப்பில் ஆழ்த்தவில்லை
விந்தை உலகிது
குளம் பதுங்கியிருந்த
நதியின் புதரில்
கண்கள் கோலமிட்டு
மோகத்தில் நாணேற்றியது
சூடான நண்பகல்
பசுமரத்திடம் நிழல்கேட்டு
பசுந்தோல் போர்த்திய
புலி வேஷமிடுகிறது
நீர்மூழ்கும் பகல்
மூங்கில் சிராய்ப்பிலிருந்து
வழியும் குருதி
காற்றில் சிலம்பாடுகிறது
பூக்கள் சிரித்தன
குழாயிலிருந்து விடுபட்டால்
இனி தற்கொலைதான்
கன்றானது உலகம்
வியப்பில் ஆழ்த்தவில்லை
நாசித் துளைக்கும்
கறிக்கடை வாசனையால்
சொல் ஆழியிலிருந்து
ரசனை மறந்து
ஆறாதப் பசியுண்டானது
வீடு திரும்பிய
ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE