A POEM BY
VELANAIYUR THAS
No, Kharaharapriya, say thee
This I call a painting divine
‘Mere lines’ you opine
‘I love nights’ I state
‘Dawn is joyous’ you articulate.
Moon doesn’t burn say I
You laugh saying there are
proofs enough for that.
“I enjoy dreams”, I confess”
“I love things real” you profess.
“Alright you are lovely” say I
“So, you also lie”, say thee
“Well, you and I are different”,
I declare
No, one and the same
you claim.
நீ வேறு நான் வேறு என்கிறேன்
--------- வேலணையூர்-தாஸ்
நான் கல்யாணி என்கிறேன்
நீ இல்லை கரகரப்பிரியா என்கிறாய்..
இதை நான் ஓவியம் என்கிறேன்
நீ வெறும் கோடுகள் என்கிறாய்
நான் இரவுகள் பிடிக்கும் என்கிறேன்
நீ விடியலே மகிழ்ச்சி என்கிறாய்
நிலா சுடுவதில்லை என்கிறேன்
சிரிக்கிறாய் நிலா சுட்டதிற்கு ஆதாரங்கள் உண்டு என்கிறாய்
நான் கனவுகளை ரசிப்பவன் என்கிறேன்
நீ நிஜங்களை நேசிப்பவள் என்கிறாய்.
சரி நீ அழகியடி என்கிறேன்
இப்போது பொய்யும் சொல்கிறாயா என்கிறாய்.
ம் நீ வேறு நான் வேறு என்கிறேன்
இல்லை நாம் இருவரும் ஒன்று என்கிறாய்
No comments:
Post a Comment